ஈ.கோலை நோய்த்தொற்று - E. coli Infection in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 01, 2018

March 06, 2020

ஈ.கோலை நோய்த்தொற்று
ஈ.கோலை நோய்த்தொற்று

.கோலை நோய்த்தொற்று என்றால் என்ன?

எஸ்கேரிசியா கோலை பொதுவாக ஈ.கோலை என்று அழைக்கப்படும். இது உங்கள் குடலில் இயற்கையாகவே உள்ளது. 1880 களின் பிற்பகுதியில் தான் இது கண்டிபிக்கப்பட்டது, இதனை கையாள்வதற்கு எளிமையாகவும் இதற்க்கு ஏரோபிக் மற்றும் காற்றோட்ட நிலைகளில் வளரும் திறனும் உள்ளதால் இந்த பாக்டீரியா நுண்ணுயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது 7 வெவ்வேறு வகை நோய்க்கிருமிகளை கொண்டுள்ளது. அவை சிறுநீர்ப்பாதை தொற்று நோய் (யு.டி.ஐ), செப்டிகேமியா, மூளைக்காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு வகையான தொற்றுக்களை ஏற்படுத்தும். இந்தியாவில், எல்லா வருடமும் ஈ.கோலை நோய்த்தொற்றினால் வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்றுநோய் பொதுவாக காணப்படும்.

.கோலை நோய்த்தொற்றின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஈ.கோலை நோய்த்தொற்றின் வகைகளை பொறுத்து நீங்கள் நிறைய அறிகுறிகளை அனுபவிப்பீர்கள். தொற்று வகைகளின் அடிப்படையில், இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் கீழ்வருமாறு:

  • குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு: மலம் தண்ணீரை போல போதல் (சில நேரங்களில் சளியுடன்) மற்றும் வாந்தி.
  • இரத்தசோகை பெருங்குடல் அழற்சி: இரத்தத்தோடு கலந்து மலம் வெளிவருதல்.
  • ஈ.கோலை நோய்த்தொற்றுடன் ஏற்படும் குரோன் நோய்: குடலில் ஏற்படும் நிரந்தர வீக்கம், குடல் சுவர்களை காணப்படும் காயங்கள் மற்றும் மலம் தண்ணீரை போல போதல்.
  • சிறுநீர்ப்பாதை தொற்று நோய் (யு.டி.ஐ): சிறுநீர் கழிக்கும்போது வலி உண்டாகுதல், சிறுநீரில் மோசமான நாற்றம் மற்றும் அதிகளவு காய்ச்சல்.
  • பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை அழற்சி: பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் அதிக காய்ச்சல்.

.கோலை நோய்த்தொற்று  தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

உணவு மற்றும் நீரில் மாசுறுதல் ஈ.கோலை நோய்த்தொற்றுக்கு முக்கிய காரணம் ஆகும். ஈ.கோலை நோய்த்தொற்று பாக்டீரியா குடலின் உள்ளே நன்மை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம் என்றாலும், அதன் நோய் அறிகுறிகள் மனித உடலில் தீமையையும் ஏற்படுத்தலாம். இவை ஆரோக்கியமான நபர்களுக்கும் கீழ்கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் பரவி அவர்களையும் பாதிக்கின்றது:

  • அசுத்தமான குடிநீரை அருந்துதல்.
  • அசுத்தமான உணவினை உண்ணுதல்.
  • ஈ.கோலை நோய்த்தொற்று உள்ள மண்ணில் வளர்க்கப்படும் காய்கறிகள்.
  • சுகாதாரமற்ற உணவு பழக்கம்.
  • மருத்துவமனையின் அசுத்தமான ஈ.கோலை நோய்த்தொற்று கழிவுநீர்.

.கோலை நோய்த்தொற்று எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

வெவ்வேறு ஈ.கோலை நோய்த்தொற்றை கண்டறிதல் முக்கியமாக பாக்டீரியா அல்லது அதன் நச்சுக்களின் இருப்பை பரிசோதிக்கிறது. நோய்த்தொற்றை பொறுத்து நடத்தப்படும் சோதனைகள் பின்வருமாறு:

  • சிறுநீர்ப்பாதை தொற்று நோய் (யு.டி.ஐ): சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் வளர்ச்சி ஊடக ஆய்வு.
  • வயிற்றுப்போக்கு: மலத்தின் மாதிரி பரிசோதனை.
  • பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை அழற்சி: செரிப்ரோஸ்பைனல் திரவம் (சி.எஸ்.எப்) பரிசோதனை மற்றும் வளர்ச்சி ஊடக ஆய்வு.
  • கிரோன் நோய்: குடல் புண்களை ஆராயவும் வளிமண்டல பெருங்குடலிலிருந்து வேறுபடுத்தவும் வழக்கமான கதிர்வீச்சியல் ஆய்வு மற்றும் மலம் பரிசோதனை மூலம் ஈ.காலையின் இருப்பு உறுதிசெய்யப்படுகிறது.

ஈ.கோலை சுற்றி பன்மடங்கு தடுப்புடன் கூடிய சிகிச்சை சற்று சவாலாக இருக்கலாம். ஈ.கோலை நோய்த்தொற்றின் சிகிச்சை கீழ்வருமாறு:

  • நுண்ணுயிர்கொல்லிகளின் பயன்பாடு.
  • ப்ரோபயாடிக்குகள்.
  • பாக்டீரியா உண்ணி சிகிச்சை.
  • ஆண்டிமைக்ரோபியல் பெப்டைடுகள்.

நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் ஓய்வெடுப்பது கூடவே மருந்துகள் எடுத்துக்கொள்ளுவது போல சில சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முறையான சுகாதாரம், பாதுகாப்பான உணவு பழக்கம் மற்றும் நல்ல சுத்தம் ஆகியவை நோய் தடுப்பு நடவடிக்கைகளாகும்.



மேற்கோள்கள்

  1. Zachary D Blount. e Life. 2015; 4: e05826. Published online 2015 Mar 25. doi: [10.7554/eLife.05826]
  2. Nerino Allocati et al Escherichia coli in Europe: An Overview. Int J Environ Res Public Health. 2013 Dec; 10(12): 6235–6254.
  3. V.Niranjan and A.Malini. Antimicrobial resistance pattern in Escherichia coli causing urinary tract infection among inpatients.. Indian J Med Res. 2014 Jun; 139(6): 945–948
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; E. coli (Escherichia coli).
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; E. coli (Escherichia coli)

ஈ.கோலை நோய்த்தொற்று க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஈ.கோலை நோய்த்தொற்று. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹800.0

Showing 1 to 0 of 1 entries