கணுக்கால் எலும்பு முறிவு - Fractured Ankle in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

December 01, 2018

March 06, 2020

கணுக்கால் எலும்பு முறிவு
கணுக்கால் எலும்பு முறிவு

கணுக்கால் எலும்பு முறிவு என்றால் என்ன?

கணுக்கால் எலும்பு என்பது மூன்று எலும்புகளால் ஆனது - அவை டிபியா (முழங்காலுக்கு கீழும், கணுக்காலுக்கு மேலும் உள்ள காலின் நீண்ட முன் எலும்பு), ஃபைபுலா (கன்று எலும்பு) மற்றும் தாலஸ்(டிபியா, ஃபைபுலா மற்றும் குதிகால் எலும்புகளுக்கிடையே இருக்கும் ஒரு சிறிய எலும்பு) ஆகியவையாகும். கணுக்கால் எலும்பு முறிவில், கணுக்கள் மூட்டுகளிலிருக்கும் எந்த எலும்புகளில் வேண்டுமானாலும் முறிவு ஏற்படலாம். எலும்பு முறிவு என்பது எந்த ஒரு ஒற்றை எலும்பிலும் ஏற்படக்கூடியது (இது ஒரு பொதுவான நிகழ்வு), இது தினசரி நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதல்லாததாகவோ அல்லது கணுக்கால் எலும்பு இடப்பெயர்ந்திருக்கும் கடுமையான முறிவாகவோக் கூட இருக்கலாம், நிலைக்கேற்ற மருத்துவ கவனிப்பு அவசியம். கணுக்கால் எலும்பு முறிவு என்பது எந்த வயதிலும் காணப்படலாம். அடிக்கடி ஏற்படும் கணுக்கால் எலும்பு முறிவு என்பது பக்கவாட்டு மல்லோலஸ் என அழைக்கப்படுகிறது (55% கணுக்கால் எலும்பு முறிவு). அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு வருடத்தில் 100,000 நபர்களில் 187 பேருக்கு கணுக்கால் எலும்பு முறிவுக்கான நிகழ்வு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில், 100,000 நபர்களில் 122 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வருட நிகழ்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

கணுக்கால் எலும்பு முறிவிற்கான மிக பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து முழங்கால் வரை முன்னேறும் தாங்கமுடியாத வலி.
  • சில குறிப்பிட்ட பகுதிகளிலோ அல்லது முழு கால்களிலோ ஏற்படும் நீர்க்கட்டு (வீக்கம்).
  • செதில் கொப்புளங்களின் உருவாக்கம்.
  • நடக்கும் திறனின்மை.
  • தோலின் வழியாக எலும்பு குத்துதல்.

தொடுதலில் போது வலியினை உணர்வதோடு ஒருவரால் பாதிக்கப்பட்ட கால்களில் எந்த எடையையும் தாங்கம் திறனின்றி போகலாம். கணுக்கால் எலும்பு முறிவை பொதுவான சுளுக்காக எண்ணி எளிதில் குழப்பமடையக்கூடும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கணுக்கால் எலும்பு முறிவு பெரும்பாலும் கீழே விழுதல், கணுக்கால் சுளுக்கு மற்றும் விளையாடும்போது ஏற்படும் சேதம் நீடித்தல் ஆகியவற்றை அடிக்கடி எதிர்கொள்வதனாலேயே ஏற்படுகின்றது. இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவினை கொண்ட நோயாளிகள் அவர்களது உணர்ச்சி நரம்புகளில் ஏற்படும் சேதத்தால்   விளையும் உடல் காயம், மேலும் எலும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவிப்பதை உணராமல் இருக்கலாம். புகைபிடித்தல் மற்றும் அதிக உடல் நிறை குறியீட்டு எண் (பிஎம்ஐ) விகிதம் ஆகியவை பெரும்பாலும் கணுக்கால் எலும்பு முறிவுடன் இணைத்திருப்பவை ஆகும்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

மருத்துவர் எலும்பு முறிவை ஏற்படுத்திய அதிர்ச்சி நிகழ்வுகளின் வரலாறு மற்றும் இதை தொடர்ந்து வருகிற மற்ற மருத்துவ நிலைகள், மருத்துவ அம்சங்களோடு பாதிக்கப்பட்ட கணுக்காலில் மேலும் பரிசோதனைகளை மேற்கொள்ள சொல்லலாம். கணுக்கால் முறிவை எக்ஸ்-கதிர்கள் மூலமாக பகுப்பாய்வு செய்யலாம். சிடி ஸ்கேன் மற்றும் காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) ஆகியமற்ற சோதனைகளும் இந்த ஆய்வுமுறைகளுள் அடங்குபவை. அறுவை சிகிச்சைதேவைப்படுகிறதா என ஆராய மனஅழுத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படலாம்.

சிகிச்சை யுக்திகளுள் அடங்குபவை:

அறுவை சிகிச்சை முறைகள்: இடப்பெயர்ந்த கணுக்கால் அல்லது வெளிப்புறம் துருத்திக்கொண்டிருக்கும் எலும்பை தோல் வழியாக சரிபடுத்துதல்.

அறுவை சிகிச்சை அல்லாத வழிமுறைகள்:

  • குளிர் ஒத்தடம் மற்றும் பாதிக்கப்பட்ட காலை உயரத்தில் வைத்தல் போன்றவை வலி மற்றும் வீக்கத்தை குறைகின்றது.
  • எலும்பு இடம்பெயர்தல் இல்லையெனில் பாதிக்கப்பட்ட கணுக்காலை அணைவரிக்கட்டை உதவியுடன் குணப்படுத்தலாம்.
  • முழுமையாக ஓய்வெடுத்தல் மற்றும் காலில் எடையை வைக்காமல் இருத்தல் போன்றவற்றை தவிர்ப்பது நன்று.
  • கால் இம்மொபிலைசர்கள் மற்றும் பிளாஸ்டர் ஆகியவை மேற்கொண்டு ஏற்படும் கால் அசைவினை தடுக்கிறது.

சில வலி நிவாரணிகள் மற்றும் ஸ்டீராய்டு இல்லாத எதிர்ப்பு அழற்சி மருந்துகள் (NSAIDs) உபயோகபடுத்துவதால் வலி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். மருந்துகளுடன் உடலியல் தெரபி மேற்கொள்தல் விரைவாக குணமடைய உதவுகிறது.

கணுக்கால் எலும்பு முறிவு என்பது நீண்ட காலம் இருக்கக்கூடிய நிலையில்லை மற்றும் பாதிக்கப்பட்ட கணுக்கால்களை முறையாக கவனித்து பராமரித்து வருவது விரைவான நிவாரணத்தை அளிக்கக்கூடியது.



மேற்கோள்கள்

  1. Meena S, Gangary SK. Validation of the Ottawa Ankle Rules in Indian Scenario. Arch Trauma Res. 2015 Jun 20;4(2):e20969. PMID: 26101760
  2. Orthoinfo [internet]. American Academy of Orthopaedic Surgeons, Rosemont, Illinois. Ankle Fractures (Broken Ankle).
  3. Journal of Arthritis. Ankle Fractures: Review Article. OMICS International. [internet].
  4. Clinical Trials. Operative Versus Non Operative Treatment for Unstable Ankle Fractures. U.S. National Library of Medicine. [internet].
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Bone fractures

கணுக்கால் எலும்பு முறிவு க்கான மருந்துகள்

Medicines listed below are available for கணுக்கால் எலும்பு முறிவு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹183.9

₹239.0

Showing 1 to 0 of 2 entries