அதிக கொழுப்பு - High Cholesterol in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

December 10, 2018

September 11, 2020

அதிக கொழுப்பு
அதிக கொழுப்பு

சுருக்கம்

உடலில், இரத்தக் கொழுப்பு அல்லது லிப்பிட் வடிவத்தில் கல்லீரலால் கொழுப்பு உருவாக்கப்படுகிறது. உடலின் கொழுப்பு தேவையில் ஒரு பகுதி, உணவு ஆதாரங்களான முட்டையின் மஞ்சள் கரு, பால் பொருட்கள் மற்றும் இறைச்சி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தகுந்த அளவுகளில் கொழுப்பு, நமது உடலுக்குள் நடைபெறும் பல்வேறு உயிரியல் செயல்பாடுகளுக்கு அவசியமானதாக இருக்கிறது. இது, ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டோரான், டெஸ்ட்ரோஜென், கார்ட்டிசோல் மற்றும் அல்டோஸ்டெரோன் போன்ற ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமானதாகும். இதற்கும் மேலாக, கொழுப்புகளை முறையாக செரிமானம் செய்வதற்கு அவசியமான பித்த உப்புக்களில் கொழுப்பு தோன்றுகிறது. கூடவே இது, உடலில் ஏ, டி, இ மற்றும் கே வைட்டமின்களை உட்கிரகிப்பதையும் செயல்படுத்துகிறது. கூடுதலாக இது, செல் சவ்வின் முக்கியமான பாகமாகும், மேலும் செல்களின் கட்டமைப்பைப் பராமரிக்கவும் உதவுகிறது. சூரிய ஒளியில் இருக்கும் பொழுது, கொழுப்பின் உதவியோடு உடலில் வைட்டமின் டி தயாரிக்கப்படுகிறது. புரதங்களின் சேர்க்கையோடு கொழுப்பு (கொழுப்புப்புரதம்) இரத்தத்தில் பயணிக்கிறது. நல்ல கொழுப்பு (உயர்-அடர்த்தி கொழுப்புப்புரதம் - எச்.டி.எல்.) இதயத்தைப் பாதுகாக்கும் விளைவைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதிகமான கெட்ட கொழுப்பு (குறைந்த-அடர்த்தி கொழுப்புப்புரதம் - எல்.டி.எல். மற்றும் மிகக்குறைந்த-அடர்த்தி கொழுப்புப்புரதம் - வி.எல்.டி.எல்) இதய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கின்றது.

உடலில் உள்ள அதிகமான கெட்ட கொழுப்பு, நெஞ்சு வலி அல்லது இதய வலி, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நீரிழிவுக்கு காரணமாகிறது. கொழுப்பு மிகுந்த உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத ஒரு வாழ்க்கைமுறை ஆகியவை உடலில் கொழுப்பு அளவுகள் அதிகரிக்க காரணங்களாகும். இரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, இரத்தக்குழாய்களில் படிவுகளை உருவாவதற்கு ஒரு முக்கிய காரணமாகும், அதன் விளைவாக  பலவித இருதய நாள (இதய) நோய்கள் உருவாகின்றன. உயர் இரத்த அழுத்தம், புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமன் ஆகியவை இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கின்றன. சில நபர்களுக்கு, மரபணுக்கள் சார்ந்த காரணங்கள், உயர் கொழுப்பு அளவுகளுக்குக் காரணியாகின்றன. பொருத்தமான எடையைப் பராமரிப்பது, வறுக்கப்பட்ட மற்றும் கொழுப்பு மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதைக் கட்டுப்படுத்துவது மற்றும் புகைப்பிடித்தலைக் கைவிடுவது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள், அதிக கொழுப்பைக் கையாள்வதற்கான முக்கிய அம்சங்களாகும். கூடுதலாக, அதிக கொழுப்பு அளவுகளைக் குறைக்க, ஸ்டேட்டின்கள் எனப்படும் மருந்துகள் மற்ற மருந்துகளோடு கூட்டுச் சேர்க்கையாக பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

அதிக கொழுப்பு சிகிச்சை - Treatment of High Cholesterol in Tamil

பின்வரும் சூழ்நிலைகளில் அதிகரித்துள்ள கொழுப்பு அளவைக் குறைக்க மருந்துகள் அவசியமானவை ஆகும்:

  • வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்க மாறுதல்கள், உயர் கொழுப்பு அளவுகளைக் குறைக்க போதுமானதாக இல்லாத பொழுது.
  • ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால்.
  • கெட்ட கொழுப்புகள் (எல்.டி.எல்.) அளவுகள் அதிகரித்த நிலை.
  • இதய நோய்களுக்கான அதிக அபாயங்கள் உள்ள 40-75 வயதுக்கு இடைப்பட்ட நபர்கள்                           .
  • நீரிழிவு அல்லது மற்ற இதய நோய்கள் உள்ளவர்கள்.

இரத்தத்தில் உயர்ந்துள்ள கொழுப்பு அளவுகளைக் குறைக்க பல்வேறு வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. வயது, தற்போதைய உடல் நிலை, இதய நோய் அல்லது பக்கவாதம் உருவாவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்கள் மருத்துவர் உங்களுக்கு பொருத்தமான மருந்தினை முடிவு செய்கிறார். மருந்துகளில் அடங்கியவை:

  • உயர் கொழுப்பு அளவுகளைக் குறைக்க மிகவும் வழக்கமாகப் பரிந்துரைக்கப்படும் மருந்து, ஸ்டேட்டின்கள் ஆகும். ஸ்டேட்டின்கள் கல்லீரலில் கொழுப்பு உற்பத்தியாவதைத் தடுக்கின்றன.
  • பி.சி.எஸ்.கே.9 (புரோபுரோட்டின் கன்வர்ட்டேஸ் சப்ட்டில்ஸ் இன்/ கெக்ஸின் வகை 9) தடுப்பிகள், கல்லீரலின் மீது செயல்புரிந்து, இரத்தத்திலிருந்து எல்.டி.எல்.-ஐ நீக்குவதற்கான மருந்துகளாக இருக்கின்றன. அவை இரத்தத்திலிருந்து கொழுப்பு அமிலங்களை நீக்குவதற்கும் உதவுகின்றன.
  • பித்த அமிலங்களின் மீது அவற்றின் செயல் மூலம், இரத்த கொழுப்பு அளவைக் குறைக்க பித்த அமில பிரிப்பான்கள் உதவுகின்றன.
  • நியாசின் (வைட்டமின் பி3 அல்லது நிக்கோடினிக் அமிலம்), எல்.டி.எல். (கெட்ட கொழுப்பு)ஐக் குறைத்து எச்.டி.எல் (நல்ல கொழுப்பு)-ஐ அதிகரிக்கிறது.
  • ஃபைய்ப்ரெட்கள், இரத்தத்தில் இருந்து மிகக் குறைந்த-அடர்த்தி கொழுப்புப்புரதங்களை நீக்குகின்றன. அவை எச்.டி.எல். அளவுகளையும் அதிகரிக்கின்றன. இருந்தாலும், ஸ்டேட்டின்கள், ஃபைய்ப்ரெட்களைப் பயன்படுத்தும் பொழுது, தசை சம்பந்தமான பிரச்சினைகள் வரக் கூடும்.
  • எஜிட்டிமிபி, உணவிலிருந்து கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்கிறது.
  • லோமிட்டாபைடு மற்றும் மிபோமெர்சன், கல்லீரலில் இருந்து வி.எல்.டி.எல். கொழுப்பு இரத்தத்தில் கசிவதைத் தடுக்கின்றன. இது பொதுவாக, மரபணு ரீதியான காரணங்களால், அதிக கொழுப்பு அளவுகளைக் கொண்டிருக்கும் நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • கொழுப்புப்புரதம் இறக்கல் என்பது, உடலுக்கு வெளியே வைக்கப்பட்ட ஒரு வடிகட்டும் இயந்திரத்தின் மூலம், அதிகமான கெட்ட கொழுப்பு நீக்கப்படும் ஒரு செயல்முறையாகும். இது பொதுவாக, மரபணுக் கோளாறு காரணமாக அதிக கொழுப்பைக் கொண்ட நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

வாழ்க்கைமுறை மேலாண்மை

அதிக கொழுப்பை சமாளிப்பதில் வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. உங்கள் கொழுப்பு அளவை சரியாக வைக்க, சில முக்கிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • உணவுப்பழக்க மாறுதல்கள்
    • நோய்நீக்க வாழ்க்கைமுறை மாற்றங்கள் எனப்படும் ஒரு கருத்து, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது. இந்த உணவுப்பழக்க திட்டத்தின் படி, பின்வரும் உணவுப்பழக்க குறிப்புகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம்:
    • உங்கள் தினசரி கலோரி தேவையில், 7% முழுமையடைந்த  கொழுப்புகள் (இறைச்சி, பால் பொருட்கள், நன்கு வறுக்கப்பட்ட உணவு) மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும், மேலும், உங்கள் தினசரி கலோரி தேவையில், மொத்த கொழுப்புகள் அனைத்தும் சேர்ந்து அதிகபட்சம் 35% வழங்கப்பட வேண்டும்.
    • தினசரி 200மி.கி. வரை கொழுப்பு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
    • உணவுப்பழக்கம், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகள் (எடுத்துக்காட்டு: ஓட்ஸ், ஆப்பிள்கள், வாழைப்பழங்கள், பேரிக்காய்கள், ஆரஞ்சுகள், அவரை, துவரம்பருப்பு, கொண்டைக்கடலை) உட்பட கரையக்கூடிய நார்ச்சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும் . பழங்களிலும் காய்கறிகளிலும் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்பு உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றது.
    • மீன், இதய நோய்கள் மற்றும் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கக் கூடிய, ஒமேகா -3 அமிலங்கள் நிறைந்த ஒரு உணவாகும்.
    • உப்பைத் தவிர்த்தலும் மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவதும், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க மற்றும் இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளைக் குறைக்கவும் உதவுகிறது.
  • உடல் செயல்பாடு
    முறையான ஏரோபிக் உடற்பயிற்சிகள், அதிக கொழுப்பைக் குறைக்கவும், மேலும், உடல் பருமனைக் கையாள்வதிலும் உதவுகின்றன.
  • புகைப் பிடிக்காதீர்கள்
    கொழுப்பைக் கையாள புகைப்பிடித்தலை முழுமையாக நிறுத்துங்கள்.
  • மருந்துகளைப் பயன்படுத்துதல்
    கொழுப்பைத் திறமையாக கையாண்டு, அதனை இயல்பான அளவுகளுக்குள் கொண்டு வர, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • கொழுப்பைக் குறைப்பதற்கான உணவுகள்
    ஓட்ஸ், பார்லி, பருப்புகள் (அவரை, கொண்டைக்கடலை, துவரை), கத்தரிக்காய், வெண்டை (வெண்டைக்காய்), கொட்டைகள் (பாதாம் பருப்புகள், வாதுமைக்கொட்டைகள், நிலக்கடலைகள்), தாவர எண்ணெய் (சூரியகாந்தி எண்ணெய், செந்தூர எண்ணெய்), பழங்கள் (எலுமிச்சை இன பழங்கள், ஆப்பிள்கள், திராட்சைகள்), ஸ்டெரோல்கள் மற்றும் ஸ்டெனோல்களைக்(உணவிலிருந்து கொழுப்பை உறிஞ்சக் கூடிய தாவர பசைகள்)  கொண்ட உணவுகள், சோயா மொச்சை (சோயா, சோயா பால்), மீன் (வஞ்சிரம்,காணங்கத்தி), மலமிளக்கிகளில் காணப்படும் நார்ச்சத்துப் பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய சில உணவுகள், கொழுப்பு அளவைத் தொடர்ந்து கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

அதிக கொழுப்பு என்ன - What is High Cholesterol in Tamil

அதிக கொழுப்பு அளவுகள், பல்வேறு நோய்களுக்கான, குறிப்பாக இதயம் மற்றும் இரத்த சுழற்சி தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதால், அவை ஒரு முக்கியான உடல்நலப் பிரச்சினையாகும். அதிகரித்த இரத்த கொழுப்பு அளவுகள் மாரடைப்பு அல்லது நெஞ்சு வலிக்கான, அதேபோல், பக்கவாதம் போன்ற மூளையில் இரத்த சுழற்சி தொடர்பான பிரச்சினைகளுக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி,கிராமப்புற மக்களில் 15% முதல் 20% வரையாக இருப்பதோடு  ஒப்பிடும் போது, நகர மற்றும் புறநகர மக்களில் 25% முதல் 30% வரை, மக்கள் அதிக அளவிலான இரத்த கொழுப்பினைக் கொண்டிருக்கின்றனர். எல்லைக்கோட்டைத் தொடும் அதிக எல்.டி.எல்., ஒரு குறைந்த எச்.டி.எல்., அதிக அளவிலான டிரைகிளிசரைடுகள், இந்திய மக்களிடம் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.

கொழுப்பு என்றால் என்ன?

கொழுப்பு என்பது, கல்லீரலில் உற்பத்தியாகும் ஒரு திரண்ட மெழுகு போன்ற ஒரு பொருளாகும். அது தண்ணீரில் கரையாத காரணத்தால், அது தானாகவே, மொத்தமாக கொழுப்புப்புரதங்கள் என அறியப்படும், முக்கியமாக, கொழுப்புகளாக (லிபிட்க்கள் என அறியப்படும்) மற்றும் புரதங்களாக மாறுகிறது. ஹார்மோன்கள், வைட்டமின் டி உற்பத்தி செய்தல், வைட்டமின் ஏ, டி, இ மற்றும் கே போன்ற கொழுப்பு-கரைக்கின்ற வைட்டமின்களை உறிஞ்சுதல், செல் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற உடலின் முக்கியமான இயக்கங்களை செய்வதற்கு கொழுப்பு ஒரு முக்கியமானதாகும். இருந்தாலும், இரத்தத்தில் இயல்பான அளவை விட கொழுப்பு அளவுகள் அதிகமாகும் பொழுது, அது இதய நோய்கள், மாரடைப்பு  மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கக் கூடும் . இந்த அதிகப்படியான கொழுப்பு, பல்வேறு பொருட்களாகப் பிரிந்து (சுண்ணாம்புச்சத்து போன்று) இரத்தக் குழாய்களில் படிவுகளை உருவாக்கி (கொழுப்புப் படிவுகள்) அவற்றைக் கடினமானதாக்குகிறது (அதிரோஸ்கிளிரோஸ்). இது இரத்தம் பாய்வதில் பிரச்சினைகளை உருவாக்கி, உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு போதுமான அளவு இரத்தம் செல்லாத நிலைக்கு காரணமாகிறது. 



மேற்கோள்கள்

  1. Huff T, Jialal I. Physiology, Cholesterol. [Updated 2019 Mar 13]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cholesterol Medicines.
  3. InformedHealth.org [Internet]. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. High cholesterol: Overview. 2013 Aug 14 [Updated 2017 Sep 7].
  4. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; High Blood Cholesterol
  5. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Carotid Artery Disease
  6. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Peripheral Artery Disease
  7. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Stroke
  8. Health Harvard Publishing, Updated: February 6, 2019. Harvard Medical School [Internet]. 11 foods that lower cholesterol. Harvard University, Cambridge, Massachusetts.
  9. Srinivasa Rao Ch., Emmanuel Subash Y. The Effect of Chronic Tobacco Smoking and Chewing on the Lipid Profile. J Clin Diagn Res. 2013 Jan; 7(1): 31–34. PMID: 23449989
  10. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cholesterol Levels.
  11. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cholesterol Medicines

அதிக கொழுப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for அதிக கொழுப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for அதிக கொழுப்பு

Number of tests are available for அதிக கொழுப்பு. We have listed commonly prescribed tests below: