கால்சியம் குறைபாடு - Calcium Deficiency in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

April 24, 2019

July 31, 2020

கால்சியம் குறைபாடு
கால்சியம் குறைபாடு

கால்சியம் குறைபாடு என்றால் என்ன?

நம் உடலில் 99 % கால்சியமானது கடின திசுக்களாக பற்கள் மற்றும் எலும்புகள் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது செய்திகளைநரம்புகள் மூலமாக உடலில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பவும், ஹார்மோன்களின் சுரப்பு, இரத்த நாங்கள் மற்றும் தசைகள் சுருங்கி விரிதல் மற்றும் மிக முக்கியமாக எலும்புக்கூடுகளின் செயல்பாடு போன்ற மிக முக்கிய உடல் இயக்கங்களுக்கு தேவையான ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.

சிகிச்சையளிக்கப்படாத நாள்பட்ட ஹைப்போகால்செமியா  எலும்புகள் மெலிந்து போதல் (ஆஸ்டியோபெனியா) போன்ற சிக்கல்களுக்கு ஒருவரை ஆளாக்குகிறது. இது குழந்தைகளுக்கு பலவீனமான எலும்புகள் (எலும்பு முறிவுகள்-ரிக்கெட்ஸ்) மற்றும் எலும்பு அடர்த்தியின் அதிக இழப்பு (எலும்புப்புரை- ஆஸ்டியோபோரோசிஸ்). கால்சியம் குறைபாட்டிற்கு ஒரு சிறந்த தீர்வாக, உணவு பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் இதை குணப்படுத்த முடியும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஆரம்பக்கால கட்டங்களில் கால்சியம் சத்து குறைபாட்டை கண்டறிவது என்பது கடினம். உடலில் குறைபாட்டிற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிய பிறகு, கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றலாம்.

ஆரம்பகால அறிகுறிகளாக:

  • விரல்கள், பாதம், மற்றும் கால்கள் மறுத்து போதல் மற்றும் கூசுதல்.
  • தசைகளில் பிடிப்புகள் மற்றும் இழுப்புகள்(மேலும் படிக்க : தசை இழுப்பு சிகிச்சை).
  • சோம்பல் உணர்வு மற்றும் தீவிர சோர்வு.

நாள்பட்ட கால்சியம் குறைபாடு பல உடல் பாகங்களை பாதிக்கலாம். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

  • ஆஸ்டியோபினியா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ்- எலும்பு முறிவுக்கு ஒருவரை உள்ளாக்குவது.
  • பல் பிரச்சினைகள்-பல் மற்றும் எனாமல் ஹைப்போபிளாஷியா என்று சொல்லக்கூடிய, எனாமல் குறை வளர்ச்சி, முனை மழுங்கிய பல் வேர் வளர்ச்சி, மற்றும் பற்கள் தாமதமாக வளர்தல் போன்றவை.
  • பலவீனம் மற்றும் உடையத்தக்க நகங்கள்.
  • வறண்ட மற்றும் அரிக்கும் தோல் - எக்ஸிமா.
  • மன அழுத்தம் மற்றும் குழப்பத்தில் இருத்தல்.
  • பசியின்மை (மேலும் படிக்க: பசியின்மைக்கான காரணங்கள்).
  • அசாதாரண இதய துடிப்பு (மேலும் படிக்க: அரித்மியா தடுப்பு).
  • இரத்தம் உரைவதில் தாமதம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன

வயதுவந்தோருக்கு குறைந்தபட்சம் 700 மிகி மற்றும் பெரியவர்களுக்கு குறைந்தபட்சம் 1200 மிகி அளவு கால்சியம் தேவைப்படும். 

கால்சியம் குறைபாடு காரணமாக மிக அதிக பாதிப்புக்குள்ளாவோர்:

  • பெண்கள், குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு.
  • வயதானோர்.
  • லாக்டோஸ் சகிப்புத்தன்மை அற்ற நபர்கள்.
  • வளர் இளம் பருவத்தினருக்கு.

கால்சியம் சத்துக் குறைபாட்டின் மிகவும் பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

  • உணவு சரியாக உண்ணப்படாமை.
  • செலியாக் நோய் போன்ற செரிமான கோளாறுகளால் வரும் உணவு உடலில் உறிஞ்சப்படுதலில் கோளாறுகள் உண்டாதல்.
  • ஹைப்போ பாராத்தைராய்டிசம்.
  • உடலில் உயர் மற்றும் குறைந்த அளவிலான மெக்னீசியம் இருத்தல்.
  • அதிக அளவு பாஸ்பேட்.
  • பெனிடோயின், பெனோபார்பிட்டல், ரிஃபம்பின், கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் கீமோதெரபி போன்ற மருந்து எடுத்துக்கொள்ளும் நபர்கள்.
  • செப்டிக் ஷாக் உள்ள நபர்கள் (மேலும் படிக்க : செப்சிஸ் சிகிச்சை).
  • சிறுநீரக செயலிழப்பு.
  • கணைய அழற்சி.
  • குறைந்த அளவு வைட்டமின் டி.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவர்கள் முதலில் நோயாளிகளை மருத்துவ முன்னிறிவிப்பின் படி அல்லது அறிகுறியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளுவார். மருத்துவ அறிகுறிகளை உறுதிப்படுத்துவதற்கான அடுத்த படியாக, சீரம் கால்சியம், பாராத்தைராய்டு ஹார்மோன், சீரம் பாஸ்பேட், மெக்னீசியம், 25-ஹைட்ராக்ஸிவிட்மின் டி, மற்றும் 1, 25-டைஹைட்ரோஸி வைட்டமின் டி. ஆகிய சோதனைகள் செய்யப்படும்.  மருத்துவர் குறைபாடுள்ள நபரை, கால்சியம்- ரிசப்டர்களுக்கு காரணமாக அமையும் ஜி புரோட்டீன் துணையலகு ஆல்பா 11. மரபணு பிறழ்வு சோதனையை செய்யும்படி பரிந்துரைக்கலாம்.

கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மட்டுமே ஹைப்போகால்செமியாவை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் அது வாராமல் முதலிலேயே தடுக்கிறது. கால்சியம் அதிகமாக இருக்கும் உணவுகள்:

  • பால் மற்றும் பிற பால் பொருட்கள் - சீஸ், சுவையேற்றப்பட்ட தயிர், தயிர்மற்றும் பன்னீர்.
  • காய்கறிகள் - பசலை கீரை,ப்ரோக்கோலி, பீன்ஸ் - அவரை மற்றும் பட்டாணி.
  • வலுவூட்டப்பட்ட தானியங்கள், முழு தானியங்கள்.
  • கால்சியம் நிறைந்த கனிம நீர்.
  • கடல் உணவு, கொழுப்பு குறைவான இறைச்சிகள் மற்றும் முட்டை.
  • பருப்புகள், விதைகள், சோயா வகை உணவுகள் – டோஃபு.

மருத்துவர் பரிந்துரைக்கும் கால்சியம் பிற்சேர்ப்பு, கால்சியம் அளவை மேம்படுத்த உதவலாம்.

  • சுய சிகிச்சையைத் தவிர்க்கவும்.
  • கால்சியம் அதிக அளவில் எடுத்துக்கொள்வது தவிர்க்கவும் - ஏனென்றால் இது உடல் எடையை அடிப்படையாக கொண்டது.அதிக அளவு டிகோக்ஸின் நச்சுத்தன்மையை உண்டாக்கலாம். கால்சியம் குறைபாடு ஒரே இரவில் உருவானது இல்லை, அதனால் இது குணமாக நேரம் எடுத்துகொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • கால்சியம் பிற்சேர்ப்பிகள் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைக்க எடுத்துக்கொள்ளும் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் டெட்ராசைக்ளின் மற்றும்ஃப்ளோரோக்வினொலோன்கள் போன்ற மருந்துகளுடன் எதிர்ச்செயலாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.



மேற்கோள்கள்

  1. Judith A. Beto. The Role of Calcium in Human Aging. Clin Nutr Res. 2015 Jan; 4(1): 1–8. PMID: 25713787
  2. Maoqing Wang. et al. Calcium-deficiency assessment and biomarker identification by an integrated urinary metabonomics analysis. BMC Med. 2013; 11: 86. PMID: 23537001
  3. Connie M. Weaver. et al. Calcium. Adv Nutr. 2011 May; 2(3): 290–292. PMID: 22332061
  4. Fujita T. Calcium paradox: consequences of calcium deficiency manifested by a wide variety of diseases.. J Bone Miner Metab. 2000;18(4):234-6. PMID: 10874605
  5. Diriba B. Kumssa. et al. Dietary calcium and zinc deficiency risks are decreasing but remain prevalent. Sci Rep. 2015; 5: 10974. PMID: 26098577

கால்சியம் குறைபாடு டாக்டர்கள்

Dr. Narayanan N K Dr. Narayanan N K Endocrinology
16 Years of Experience
Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 Years of Experience
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 Years of Experience
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

கால்சியம் குறைபாடு க்கான மருந்துகள்

Medicines listed below are available for கால்சியம் குறைபாடு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.