பெம்பெபிகஸ் - Pemphigus in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 04, 2019

July 31, 2020

பெம்பெபிகஸ்
பெம்பெபிகஸ்

பெம்பெபிகஸ் என்றால் என்ன?

பெம்பெபிகஸ் என்பது ஒரு தற்சார்பு எமக்கோளாறு ஆகும்.இதில் ஒரு நபரின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான தோல் செல்களை தாக்குகிறது.இது தோல் மீது கொப்புளங்கள் ஏற்படுத்தும் அரிய நோய்களில் ஒன்றாகும்.இது மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.இது ஒரு பரவும் நோய் அல்ல, எனவே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இது பரவுவதில்லை.பெரும்பாலான நிகழ்வுகள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடன் காணப்படுகிறது என்றாலும், எந்த வயதினரும் இந்த நோயால் பாதிக்கப்படலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

தோலில் பெரிய கொப்புளங்கள் தோன்றுகின்றன.வாய், மூக்கு, தொண்டை போன்ற சளிச்சவ்வின் உட்புறத்திலும்கூட கொப்புளங்கள் தோன்றலாம்.அவை எளிதில் உடைந்து வலிமிகுந்த புண்களை ஏற்படுத்தலாம்,குறிப்பாக வாயில் இருக்கும்போது, ​​ஏதாவது சாப்பிடவோ அல்லது குடிக்கவோ மிகவும் கடினமாக இருக்கும்.கொப்புளங்கள் குரல்வளையில் பரவியிருந்தால், பேச்சு கரகரப்பாகவும் வலியுடனும் இருக்கும் கண்களின் கண்விழி வெண்படலத்திலும் கொப்புளங்கள் தோன்றலாம்.சருமத்தில் இருக்கும் திறந்த புண்கள் நாளுக்கு நாள் வலிமிகுந்ததாகி, ஸ்கேப்புகளை உருவாக்கும் முன்பு புண்களை சுற்றி ஒரு மேலோட்டை ஏற்படுத்துகிறது.தோலில் நிரந்தர நிறமாற்றம் உருவாகலாம் மற்றும் தழும்புகள் பெரும்பாலும் காணப்படுவதில்லை.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பெம்பைஸ் ஒரு தற்சார்பு எமக்கோளாறு, எனினும், சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.உடலின் சொந்த அணுக்கள் அந்நிய அணுக்களாக அங்கீகரிக்கப்பட்டு நோயெதிர்ப்பு மண்டலத்தால் தாக்கப்படுகின்றன.இந்த நிலையின் ஆபத்தை அதிகரிக்கும் சில மரபணுக்கள் உள்ளன, இருப்பினும் குடும்ப பாரம்பரியம் பெரும்பாலும் காணப்படவில்லை.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

வாய் மற்றும் மூக்கின் சளிச்சவ்வு உட்புறத்தை சோதிப்பார் மற்றும் பகுப்பாய்வுக்காக ஒரு சிறிய திசு மாதிரியை சேகரிப்பார்.திசுப்பரிசோதனை மட்டுமல்லாமல், உடலில் உள்ள ஆன்டிபாடிக்களின் அளவை பரிசோதிக்கவும் நோயை உறுதிப்படுத்தவும் ஒரு இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படலாம்.பெம்பெபிகஸ் ஒரு நீண்டகால நாள்பட்ட நோயாகும்.இந்த நிலைக்கு எந்தவிதமான சிகிச்சையும் இல்லை.அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமே சாத்தியமான சிகிச்சை ஆகும்.

சிகிச்சையில் ஸ்டெராய்டுகளின் அதிக மருந்தளவுகளை உட்கொள்ளுதல் அடங்கும்.இது புதிய கொப்புளங்கள் உருவாவதை கட்டுப்படுத்துகிறது மற்றும் வலியைக் கட்டுப்படுத்துகிறது.ஸ்டீராய்டு மருந்துகள் படிப்படியாக குறையும் மருந்தளவுகளில் பயன்படுத்தப்பட வேண்டும்,மேலும் சில வாரங்களுக்கு தொடரப்பட வேண்டும்.பின்னர்,நோயாளிகளுக்கு நோயெதிர்ப்புத்திறன் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும், இதனால் இந்த நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.தொற்றுநோயைத் தடுப்பதற்கு கொப்புளங்களின் சுய பராமரிப்பு மிகவும் முக்கியமானது.தனிப்பட்ட உடல்நலம் பராமரிக்கப்படுவதுடன் சேர்த்து முறையாக காயத்தின் கட்டுகளை மாற்றுவதும் பரிந்துரைக்கப்படுகிறது.



மேற்கோள்கள்

  1. Chaidemenos G et al. High dose oral prednisone vs. prednisone plus azathioprine for the treatment of oral pemphigus: a retrospective, bi-centre, comparative study. J Eur Acad Dermatol Venereol. 2011;25(2):206–210. PMID: 20569289
  2. Burgan SZ, Sawair FA, Napier SS. Case report: oral pemphigus vulgaris with multiple oral polyps in a young patient. Int Dent J. 2003;53(1):37–40. PMID: 12653338
  3. Iamaroon A et al. Characterization of oral pemphigus vulgaris in Thai patients. J Oral Sci. 2006;48(1):43–46. PMID: 16617201
  4. Santoro FA, Stoopler ET, Werth VP. Pemphigus. Dent Clin North Am. 2013;57(4):597–610. PMID: 24034068
  5. National Institute of Arthritirs and Musculoskeletal and Skin Disease. [Internet]. U.S. Department of Health & Human Services; Pemphigus.

பெம்பெபிகஸ் டாக்டர்கள்

Dr. Abhas Kumar Dr. Abhas Kumar Allergy and Immunology
10 Years of Experience
Dr. Hemant C Patel Dr. Hemant C Patel Allergy and Immunology
32 Years of Experience
Dr. Lalit Pandey Dr. Lalit Pandey Allergy and Immunology
7 Years of Experience
Dr. Shweta Jindal Dr. Shweta Jindal Allergy and Immunology
11 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்