ரோட்டா வைரஸ் - Rotavirus in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

May 14, 2019

July 31, 2020

ரோட்டா வைரஸ்
ரோட்டா வைரஸ்

ரோட்டா வைரஸ் என்றால் என்ன?

ரோட்டா வைரஸ் என்பது ஒரு பரவக்கூடிய வைரஸ் ஆகும், இது செரிமானப் பாதையை தாக்குகிறது மற்றும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.இந்நிலை சிறு பிள்ளைகள் மற்றும் கை குழந்தைகளில் சாதாரணமாக ஏற்படும் ஒரு நிலை ஆகும்.எனினும் இதனை நோய்த்தடுப்பாற்றல் தடுப்பூசி போடுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்தல் மூலம் தடுக்கலாம்.குழந்தைகளின் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு நோய்க்கிருமியே பொதுவாக காரணமாகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மாசுபட்ட உணவு அல்லது நீரை உட்கொண்டு ஏறக்குறைய 2 நாட்களில் ரோட்டா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் தென்படத் துவங்குகின்றன.அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:

ஏற்கனவே இந்நிலையால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு, இக்கிருமிக்கான நோயெதிர்ப்பு இல்லாததால், ரோட்டா வைரஸ் மீண்டும்  உருவாக வாய்ப்பு உள்ளது.எனினும், இந்நோயின் முதல் தொற்று மிகவும் தீவிரமாக இருக்கும்.

நோய்தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன?

ரோட்டா வைரஸ் என்பது பின்வரும் காரணங்களால் பரவக்கூடிய ஒரு தொற்றுநோய் ஆகும்:

  • பாதிக்கப்பட்ட குழந்தையின் மலைக்கழிவுகளின் நேரடித் தொடர்பு.
  • பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு.
  • பாதிக்கப்பட்டவரின் படுக்கை, உணவு மற்றும் சோப்புகளைத் தொடுதல்.
  • சரியான சுகாதாரமின்மை.

ரோட்டா வைரஸ் ஒரு பரவக்கூடிய தொற்று நோய் என்பதால் இது குடும்பம், பள்ளி மற்றும் பொது இடங்களில் சுலபமாக பரவும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

தீவிர நிலைகளில், நீர்ப்போக்கு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு ரோட்டா வைரஸ் தொற்று வழிவகுக்கும்.மனித மலக்கழிவில் வைரஸ் இருப்பதைக் கண்டறிவதன் மூலம் இந்நோயைக் கண்டறியலாம்.இந்நோய் நிலையைக் கண்டறிய மருத்துவர் மலக்கழிவு பரிசோதனையை பரிந்துரைப்பார். மேலும் நொதி தடுப்பாற்றல் (என்சயிம்  தடுப்பாற்றல்) மற்றும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பாலிமரேஸ் செயின் ரியாக்சன் (பிசிஆர்) ஆகிய பரிசோதனைகள் நோய் கண்டறிதலில் உதவுகிறது.

சிகிச்சை:

ரோட்டா வைரஸ் நிலையைப் பொறுத்தவரை வரும்முன் காப்பது நல்லது என்ற பழமொழி மிகவும் பொருத்தமானது.எனவே பொது இடங்களைத் தவிர்த்தலும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதும் பரிந்துரைக்கப்படுகின்றன.மேலும் உங்களை பாதுகாத்துக்கொள்ள பாதிக்கப்பட்டவரின் உடை மற்றும் படுக்கைகளைத் தொடாமல் இருப்பது நல்லது.

வீட்டில் செய்த எலுமிச்சை சாறு, மோர், இளநீர், சர்க்கரைத் தண்ணீர் (ஒரு லிட்டர் கொதிக்க வைத்த தண்ணீரில் 6 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் அறைத் தேக்கரண்டி அயோடின் கலந்த உப்பைக் கரைத்து) போன்ற வாய்வழி நீர்ம வழிகள் பயன்படுத்தப்படலாம்.உடல் பூரணமாக குணமாகும்வரை வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ரோட்டா வைரஸ் சிகிச்சை ப்ரத்யேகமாக அறிகுறிகளின் அடிப்படையில் அமைவதால் மருத்துவர்கள் முழுநேர படுக்கை ஓய்வை பரிந்துரைப்பர்.நம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் சமைக்காத உணவை தவிர்ப்பதும் நல்லது.

அதேபோல், குழந்தைகளுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடுவதன் மூலம் வைரஸிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

  • ரோட்டாடெக் (ஆர்வி5) தடுப்பூசியை  2,4 மற்றும் 6 மாதங்களில் போடவேண்டும்.
  • 2 மற்றும் 4 மாதக் குழந்தைகளுக்கு ரோட்டாரிக்ஸ் (ஆர்வி1) தடுப்பூசியை போடவேண்டும்.



மேற்கோள்கள்

  1. Office of Infectious Disease. Rotavirus. U.S. Department of Health and Human Services [Internet]
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Rotavirus
  3. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Immunization, Vaccines and Biologicals.
  4. National Health Service [Internet]. UK; Rotavirus vaccine.
  5. National Foundation for Infectious Diseases [Internet] Bethesda, MD; Frequently Asked Questions About Rotavirus
  6. Department of Health Rotavirus. Australian Government [Internet]

ரோட்டா வைரஸ் க்கான மருந்துகள்

Medicines listed below are available for ரோட்டா வைரஸ். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.