வழுக்கி வட்டு - Slipped Disc in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

February 07, 2019

March 06, 2020

வழுக்கி வட்டு
வழுக்கி வட்டு

சுருக்கம்

வழுக்கி வட்டு என்பது, ஒரு கீழே இறங்கிய வட்டு அல்லது வீங்கிய வட்டு போன்ற, முதுகெலும்பு வட்டுக்களின் பிரச்சினைகளைக் குறிக்கின்ற ஒரு பொதுவான சொல்லாகும். ஒரு வழுக்கி வட்டு, வயது-தொடர்பான திசுக்களின் தேய்மானம் மற்றும் கிழிதல் காரணமாக, முதியவர்களிடம் மிகவும் வழக்கமான ஒன்றாகும். இருந்தாலும், உடல் பருமன் மற்றும் சரியான நிலையில் இல்லாமை போன்ற கடுமையான மற்ற அபாய காரணிகளும், ஒரு வழுக்கி வட்டு ஏற்படுவதற்குரிய வாய்ப்புக்களை அதிகரிக்கின்றன. மிகவும் பொதுவான ஒரு வழுக்கி வட்டின் வடிவம், கீழ்முதுகோடு தொடர்புடைய கீழ்முதுகுத் தண்டுவட வழுக்கி வட்டு ஆகும். அந்த வழுக்கிய வட்டு, வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடியவாறு, ஒரு நரம்பை அழுத்தக் கூடும். இருந்தாலும், சிலர் எந்த அறிகுறியுமே இல்லை எனத் தெரிவிக்கிறார்கள். உடலியல் பரிசோதனை மற்றும் இமேஜிங் சோதனைகள் போன்ற நோய் கண்டறியும் கருவிகள், வழுக்கி வட்டின் இடத்தைக் கண்டறியவும் மற்றும் அதன் கடுமையைப் புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. ஒரு வழுக்கி வட்டு உள்ள நபர்களுக்கு, 3-4 வாரங்களுக்குள் சரியாக ஆரம்பிக்கும் அதே வேளையில், பிசியோதெரபி மற்றும் வலி நிவாரணிகள் போன்ற மருத்துவ சிகிச்சைகள், குணமாகும் செயல்பாட்டின் வேகத்தை அதிகரிக்கக் கூடும். முற்றிய நிலைகளில் ஒரு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.

வழுக்கி வட்டு என்ன - What is Slipped Disc in Tamil

வழுக்கி வட்டுக்கள் என்பது, எலும்புகளுக்கும், தண்டுவடத்திற்கும் இடையேயுள்ள, திசுக்களின் ஒரு மென்மையான பகுதி இடம் பெயர்தலைக் குறிக்கிறது. இந்த நிலை, நரம்புகளில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கவும், பெரிய அசௌகரியம் ஏற்படுத்தவும் செய்யலாம். நமது முதுகெலும்பு, முள்ளெலும்புகள் எனப்படும் 26 எலும்புகளால் உருவாக்கப்பட்டது. இந்த எலும்புகளுக்கிடையே, அவற்றை சரியான இடத்தில் வைத்திருக்க, மென்மையான-மெத்தை போன்ற வட்டுக்கள் இருக்கின்றன. இந்த வட்டுக்களும், குனிதல் மற்றும் நீட்டுதல் போன்ற இயக்கங்களுக்கு உதவி புரிகின்றன. இந்த வட்டுகளில் முறிதல் அல்லது உடைதல் ஏற்பட்டால், அது ஒரு வழுக்கி வட்டு அல்லது வீங்கிய வட்டுக்கு வழிவகுக்கிறது. இது ஏற்படும் பொழுது, வட்டின் மையத்திலுள்ள மென்மையான ஜெல்லி போன்ற பகுதி வெளியே தள்ளப்பட்டு, தண்டுவடத்தின் ஒரு நரம்புக்கெதிராக அழுத்துகிறது. வழுக்கி வட்டுக்கள், முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் (கீழ்ப்பகுதி தண்டுவடம்), மிகவும் வழக்கமானதாக இருக்கிறது. இது, 30-50 வயது உள்ள நபர்களுக்கிடையே மிக வழக்கமானது மற்றும் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடியது.

Joint Pain Oil
₹494  ₹549  10% OFF
BUY NOW

வழுக்கி வட்டு அறிகுறிகள் என்ன - Symptoms of Slipped Disc in Tamil

ஒரு வழுக்கி வட்டினால் ஏற்படும் வலி, வழக்கமாக உடலின் ஒரு பக்கம் மட்டும் ஏற்படும். சேதமடைந்த வட்டு இருக்குமிடத்தின் படி, அறிகுறிகள் மாறுபடுகின்றன.

தண்டுவடத்தின் கீழ்ப் பகுதியில் (பின் முதுகு) உள்ள ஒரு வழுக்கி வட்டின், பொதுவான அறிகுறிகள்:

  • முதுகு வலி.
  • குனியும் பொழுது கூர்மையான வலியை உணருதல்.
  • உட்காரும் பொழுது அல்லது எந்த ஒரு அசைவின் போது, திடீர் வலி.
  • கால் வலி.
  • ஒரு கால் அல்லது கையில் மரப்புத்தன்மை.
  • வலி, கீழே கால்களுக்கு செல்லுதல்.
  • ஒரு காலில் பலவீனம்.
  • இடுப்புப் பகுதியில் வலி.
  • உள்ளங்கால் பின் தசையில் வலி.

ஒருவேளை அந்த வழுக்கி வட்டு, தண்டுவடத்தின் கழுத்துப்பகுதியில் இருந்தால், அதனால் வலி, கழுத்துப்பகுதி அல்லது கைகளில் உணரப்படலாம். அறிகுறிகள் பின்வருமாறு இருக்கக் கூடும்:

  • கழுத்தில் துல்லியமில்லாத அசௌகரியம்.
  • கழுத்தை அசைக்கும் போது வலி.
  • கழுத்தின் அடிப்பகுதியில் குத்துவது போன்ற வலி.
  • தோள்பட்டை இணைப்பின் அருகில் வலி. (மேலும் படிக்க - தோள்பட்டை வலி சிகிச்சை)
  • வலி, கீழே கைகளில் இருந்து விரல்களுக்குப் பரவுதல்.
  • கழுத்து, தோள்பட்டை அல்லது கையில் மரப்புத்தன்மை.
  • கழுத்து வலியோடு இணைந்து,  கைகளில் கூச்ச உணர்வு.

அறிகுறியின் தீவிரங்கள், வட்டு, நரம்பை அழுத்திக் கொண்டிருக்கும் கோணத்தைப் பொறுத்து இருக்கின்றன. ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபடும் பொழுது, ஒரு வழுக்கி வட்டினால் ஏற்படும் வலி தீவிரமாகிறது. சில நேரங்களில், வாகனம் ஓட்டுதல், இருமல், தும்முதல் மற்றும் ஓடுதலின் பொழுது, உடலில் ஏற்படும் சிறிய அதிர்வகளும் வலியைத் தூண்டக் கூடும். ஒரு திடீர் அசைவு, அந்த நரம்பின் மீது அதிக அழுத்தத்தைக் கொடுத்து வலிக்கு காரணமாவதால், இது ஏற்படுகிறது.

வழுக்கி வட்டு சிகிச்சை - Treatment of Slipped Disc in Tamil

வழுக்கி வட்டு உள்ள பெரும்பாலான நபர்கள், 4-6 வார காலகட்டத்திற்குள் முன்னேற்றம் தெரிவதாகக் கூறுகிறார்கள். சிலர் 3-4 மாதங்களுக்குள் அறிகுறிகளிலிருந்து முழுமையாக விடுபடக் கூடும். இருப்பினும், மற்றவர்கள் திரும்பத் திரும்ப வரும் வலியினை உணரக் கூடும். வழுக்கி வட்டினைக் கையாளும் முறைகளில் அடங்கியவை:

அறுவை சிகிச்சை-இல்லாத மருத்துவம்

ஒரு அறுவை சிகிச்சை இல்லாத மருத்துவம், வலி போன்ற அறிகுறிகளிலிருந்து நிவாரணம் வழங்குவதில் பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. அறுவை சிகிச்சை இல்லாத மருத்துவத்தில் அடங்கியவை:

  • படுக்கையில் ஓய்வு
    மூன்று நாட்கள் வரை படுக்கையில் ஓய்வெடுப்பது பயனுள்ளதாகவும், சேதமடைந்த திசுக்கள், குணமடைய கொஞ்ச காலத்தை வழங்கக் கூடியதாக, இருக்கக் கூடும். இருந்தாலும், நீண்ட நாட்கள் செயல்பாடற்று இருப்பது அறிவுறுத்தப்படவில்லை. ஒருதரம் அறிகுறிகள் நன்றாக ஆரம்பித்து விட்டால், நீங்கள் உங்கள் தினசரி நடவடிக்கைகளுக்குத் திரும்ப முடியும், ஆனால், பாதிக்கப்பட்ட பகுதியை சிரமப்படுத்தும் செயல்களிலிருந்து விலகி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • வலி மருந்துகள்
    வலியிலிருந்து நிவாரணம் வழங்க உதவுகின்ற, ஐபுப்ரோஃபென் மற்றும் நேப்ராக்ஸன் போன்ற வலி நிவாரணிகள் உட்பட, ஸ்டெராய்டு-இல்லாத அழற்சி-எதிர்ப்பு மருந்துகள் (என்.எஸ்.ஏ.ஐ.டி.க்கள்).
  • பிசியோதெரபி
    பிசியோதெரபி, முதுகுத் தசைகளை வலிமையாக்குவதற்காகப் பரவலாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பிசியோதெரபி நிபுணரால் பரிந்துரைக்கப்படும் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள், இயக்கத்தைத் திரும்பக் கொண்டு வரவும், மற்றும் அறிகுறிகளை சமாளிக்கவும் உதவும். பிசியோதெரபி நிபுணர், வெப்ப சிகிச்சை, திசுக்கள் குணமாகிக் கொண்டிருக்கும் பொழுது, ஆதரவை வழங்க முதுகு அல்லது கழுத்துக்கு குறுகிய கால பிடிப்புக் கருவி அல்லது வலியைக் குறைப்பதற்கு மின் சிகிச்சை, போன்ற மற்ற சிகிச்சை மாதிரிகளையும் பரிந்துரைக்கலாம்.
  • கீழ்ப்பகுதி தண்டுவட ஊசி
    அழற்சியிலிருந்து ஒரு குறுகிய-கால நிவாரணத்தை வழங்க, ஒரு கீழ்ப்பகுதி தண்டுவட ஸ்டெராய்டு ஊசி கொடுக்கப்படலாம்.
  • மற்ற மருந்துகள்
    இவை, தசைப் பிடிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் தசை-தளர்த்திகள் மற்றும் வலி உண்டாக்கிகள் எதிர்ப்பிகளை உள்ளடக்கியவையாகும்.

ஒரு சில ஆசிய சிகிச்சை முறைகள், வழுக்கி வட்டிற்கு சிகிச்சையளிப்பதில் சில வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. அந்த உத்திகளில் அடங்கியவை:

  • அக்குபஞ்சர் (பாதிக்கப்பட்ட பகுதியின் துன்பம் ஏற்படுத்தும் புள்ளிகளைக் கண்டறிய, கூர்மையான ஊசிகளைப் பயன்படுத்துதல்).
  • ரெய்க்கி (குறிப்பிட்ட கை வைத்தல்களைப் பயன்படுத்தி வலி நிவாரணம்).
  • மோக்சிபஸ்டன் (வலி நிவாணரத்துக்கு வெப்பத்தைப் பயன்படுத்துதல்).

அறுவை சிகிச்சை மருத்துவம்

அறுவை சிகிச்சை மருத்துவம், வழுக்கி வட்டுக்கு வழக்கமானது அல்ல. இது, மருந்துகளின் உதவியால் அறிகுறிகளிலிருந்து விடுபட முடியாமல் இருந்தால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. தசை பலவீனங்கள், இயங்கு சக்தி பிரச்சினைகள் மற்றும் மலம் கழித்தல் குறைபாடு உள்ள நபர்கள், அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கு உட்பட வேண்டியிருக்கலாம். அறுவை சிகிச்சை வாய்ப்புகளில் அடங்கியவை:

  • மைக்ரோடிஸ்க்டமி
    இது, வழுக்கு வட்டுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மிகவும் வழக்கமான ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இந்த நடைமுறையில், நரம்புகள் மீது எந்த அழுத்தமும் இல்லாமல் செய்யுமாறு, வட்டின் வீங்கிய பகுதி நீக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, ஒருவர், சிகிச்சையளிக்கப்பட்ட பகுதி நீட்டப்பட அல்லது அழுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளும் பொழுது, படிப்படியாக தினசரி வாழ்க்கை நடைமுறைகளுக்குத் திரும்பலாம்.
  • செயற்கை வட்டு பொருத்துதல்
    இது, சேதமடைந்த வட்டுக்களுக்குப் பதிலாக, உலோகம் அல்லது உயிரி பாலிமரில் செய்த செயற்கைத் தட்டுக்களைப் பயன்படுத்தி செய்யப்படும், மற்றொரு அறுவை சிகிச்சை நடைமுறையாகும். தேவையின் படி, முழு வட்டு மாற்றப்படலாம் அல்லது வட்டின் மென்மையான மையம் (உட்கரு என அறியப்படும்) மட்டும் மாற்றப்படலாம். இருப்பினும், இந்த சிகிச்சை கிடைப்பது குறைவாகவே இருக்கிறது.

வாழ்க்கைமுறை மேலாண்மை

வழுக்கு வட்டுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு வீட்டு சிகிச்சை நடவடிக்கைகள் உள்ளன. அவற்றுள் அடங்கியவை:

  • நிற்கும் போதும், உட்காரும் போதும் ஒரு சரியான நிலையில் இருப்பதைப் பின்பற்றுவது, முதுகில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவும். இருக்கும் நிலை பற்றிய மிகவும் பொதுவான, உதவிகரமான வழிகாட்டுதல், நேராக நிற்பது மற்றும் உட்காருவது ஆகும்.
  • எதையாவது தூக்கும் பொழுது, முதுகை நேராக வைத்துக் கொண்டு, உங்கள் முழங்கால்களையும், இடுப்பையும் வளையுங்கள்.
  • எதையாவது சுமந்து செல்லும் பொழுது, அந்தப் பொருளை உங்கள் உடலுக்கு நெருக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இது, உங்கள் தண்டுவடம் சக்தியைக் கொடுப்பதைத் தடுக்கிறது.
  • நீங்கள் வழுக்கி வட்டுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, உயரமான குதிகால் உள்ள காலணிகள் அல்லது உங்கள் முதுகுக்கு சிரமத்தை அளிக்கக் கூடிய எந்த வகைக் காலணிகளையும் அணிவதைத் தவிருங்கள்.
  • வயிற்றில் குப்புறத் தூங்குவதைத் தவிருங்கள்.  
  • நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்து இருக்காதீர்கள்.
  • பிஸியோதெரபி நிபுணரின் அறிவுறுத்தலின் படி, இயக்க அசைவுகளை மீண்டும் பெறவும், இறுக்கம் மற்றும் முதுகு வலியைக் குறைக்கவும் உதவுகின்ற, நெகிழ்வுத்தன்மை உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
  • யோகா பயிற்சி மேற்கொள்ளுவது, உங்கள் வயிற்றுத் தசைகளை நேராக்கி, பதிலுக்கு முதுகுத் தசைகளுக்கு தாங்குதிறனை அளிக்க உதவிகரமாக இருக்கக் கூடும்.

பெரும்பாலான நபர்களுக்கு, முறிந்த வட்டு அல்லது வழுக்கி வட்டு, போதுமான அளவு ஓய்வு கொடுப்பது மற்றும் கவனம் எடுத்துக் கொள்வதன் மூலம் நாளாவட்டத்தில் குணமடைகின்றது. எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், எதிர்காலத்தில், வழுக்கி வட்டு ஏற்படக் கூடிய சாத்தியத்தைத் தடுக்க உதவுகின்றன.

Joint Support Tablet
₹449  ₹695  35% OFF
BUY NOW


மேற்கோள்கள்

  1. Jo Jordon, Kika Konstantinou, John O'Dowd. Herniated lumbar disc. BMJ Clin Evid. 2009; 2009: 1118. Published online 2009 Mar 26. PMID: 19445754.
  2. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Back pain – disc problems.
  3. National Health Service [Internet]. UK; Slipped disc.
  4. InformedHealth.org [Internet]. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. Slipped disk: Non-surgical treatment options. 2012 Aug 2 [Updated 2017 Jun 1].
  5. North American Spine Society [Internet]; Artificial Disc Replacement (ADR).
  6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Herniated disk.

வழுக்கி வட்டு க்கான மருந்துகள்

Medicines listed below are available for வழுக்கி வட்டு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.