கால் வீக்கம் - Swelling in Feet in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

November 24, 2017

April 28, 2023

கால் வீக்கம்
கால் வீக்கம்

சுருக்கம்

கால்களில் வீக்கம் என்பது எடிமா என்று அழைக்கப்படும், கால்களில் அதிகப்படியான திரவத்தின் சேகரிப்பால்(நீர் கோர்த்துக் கொள்ளுதல்) இது ஏற்படுகிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வலி இல்லாத கால் மற்றும் கணுக்கால்களில் ஏற்படும் வீக்கம் ஒரு பொதுவான பிரச்சினையாகும், வீக்கம் ஒரு ஆபத்தான நோய் அல்ல, ஆனால் அது வேறு ஒரு அடிப்படை நோய்க்கான ஒரு முக்கிய அறிகுறியாக இருக்க முடியும். இந்த வீக்கத்தை ஏற்படுத்தும் நோயை பொறுத்து மற்ற தொடர்புடைய அறிகுறிகளும் இருக்கக்கூடும். இந்த வீக்கத்தை ஏற்படுத்தும் தொடர்புடைய நோயை முழுமையான இரத்தம், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டுச் சோதனை, மற்றும் இமேஜிங் ஆய்வுகள் போன்ற ஆய்வக ஆராய்ச்சிகளின் உதவியுடன் கண்டறியலாம். வீக்கத்திற்கான சிகிச்சையில் உடற்பயிற்சி, எடை குறைப்பு, வீக்கத்தை உண்டாக்கும் அடிப்படை நோய்க்கான மருந்துகள், உணவு மாற்றங்கள், போன்றவை அடங்கும்.

கால் வீக்கம் அறிகுறிகள் என்ன - Symptoms of Swelling in Feet in Tamil

வீக்கம் காலையோ அல்லது கணுக்கால் பகுதியோ சம்பந்தப்பட்ட வலியற்றதாக இருக்கக்கூடும், இது நேரம் ஆக ஆக அதிகரிக்கலாம், மேலும் தோல் நிறம் மற்றும் அமைப்புமுறைகளில் மாற்றம் ஏற்படலாம். மற்ற அறிகுறிகள் தொடுதலின் போது ஒரு சூடான உணர்வுடன் தோலின் அதிகரித்த வெப்பநிலை இருக்கும் மற்றும் புண்னுடன் சீழ் சேர்ந்து வெளியேறும்.

வீக்கம் ஏற்படும் காரணத்தைப் பொறுத்து, பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்:

  • ஒரு விரலை வீக்கத்தின் மீது அழுத்தியபின் ஒரு குழி உருவாகும் மற்றும் விரலை அகற்றியவுடன் வீக்கம் மீண்டும் நிரம்பும்.
  • காலணிகள் மற்றும் அணிந்திருந்த காலுறைகளை(சாக்ஸ்) கழட்டிய பிறகு சிறிய குழிகள்/பள்ளங்கள் (தாழ்ந்த பகுதிகளில்) இருப்பது வீக்கத்திற்கான ஒரு முக்கிய அறிகுறியாகும்.
  • குழிகள் கருத்து காணப்படும் மற்றும் அந்த பள்ளங்களை  சுற்றியுள்ள தோல் சாதாரணமான தோலை விட பளபளப்பாக இருக்கும்.
Schwabe Urtica dioica MT
₹72  ₹85  15% OFF
BUY NOW

கால் வீக்கம் சிகிச்சை - Treatment of Swelling in Feet in Tamil

லேசான வீக்கம் (எடிமா) வழக்கமாக தானாகவே சரியாகிவிடும். குறிப்பாக உங்கள் இதயத்தின் மட்டத்தை விட பாதிக்கப்பட்ட பாதங்களை உயர்த்தி வைத்திருப்பதன் மூலம் அதை கட்டுப்படுத்தலாம். எந்த ஒரு மருத்துவ பிரச்சனை காரணமாகவும் இல்லாத காலில் வீக்கம் உங்கள் மருத்துவரின் வழிகாட்டுதலில் எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படலாம், ஆனால் ஒரு அடிப்படை உடல் நல கோளாறு காரணமாக ஏற்படும் வீக்கம் விரிவான வரலாறு, பொருத்தமான பரிசோதனை, மற்றும் பிற வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சேர்ந்த மருந்துகள் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படும்.

  • நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதால் உண்டாகும் வீக்கத்தை, ஓய்வு எடுப்பதால் சரிசெய்துவிடலாம்; பாதிக்கப்பட்ட பாதங்களை இதயத்தின் மட்டத்தை விட அதிகமாக உயர்த்தி தலையணையின் மீது வைத்து படுத்திருப்பதால் வீக்கம் மெல்ல மெல்ல நன்றாக குறையும்.
  • சூடான வானிலை காரணமாக வீக்கம் ஏற்பட்டால், சூடான வளிமண்டலத்தை தவிர்க்கலாம் மற்றும் உங்கள் கால்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம், உதாரணமாக, 15-20 நிமிடங்களுக்கு குளிர்ந்த நீரில் உங்கள் கால்களை ஊறவைக்கலாம்.
  • உங்கள் வீக்கம் திரவ சேமிப்பு அல்லது இதய நோய் காரணமாக இருந்தால், உப்பு உட்கொள்ளல் (குறைந்த உப்பு உணவு) மற்றும் அதிகப்படியான திரவங்கள் உட்கொள்ளல் ஆகியவற்றை குறைத்துக்கொள்ள மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார்.
  • உங்கள் வீக்கம் உங்கள் அதிக எடை காரணமாக இருந்தால், உங்கள் மருத்துவர் ஒரு சரியான உணவு முறையை பின்பற்றவும், எடை குறைப்புக்கு உதவும் வகையில் உடற்பயிற்சி செய்யவும் ஆலோசனை கூறுவார்.
  • இருக்கமான காலுறைகளை வீக்கத்தை குறைக்க பயன்படுத்துவது அவ்வளவாக பயனளிப்பதில்லை, மேலும் அது கடுமையான வீக்கம் கொண்ட நோயாளிகளால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது.
  • காலில் வீக்கம் கர்ப்பம் காரணமாக இருந்தால், எந்த சிகிச்சையும் தேவையில்லை, ஆனால் அதிகமான வீக்கம் புறக்கணிக்கப்படக் கூடாது, ஏனென்றால் அது வலிப்பு வர (எக்லம்பியாசியாவின்) அறிகுறியாக இருக்கலாம்.
  • 15 முதல் 20 நிமிடங்கள் வரை வீக்கமான பகுதியில் ஐஸ் கட்டி கொண்டு ஒத்தடம் கொடுங்கள். பின்னர், மூன்று முதல் நான்கு மணிநேரம் கழித்து மீண்டும் ஒத்தடம் கொடுங்கள். இது தற்காலிக நிவாரணத்தை கொடுக்கும்.
  • கடுமையான கால் வீக்கம் இருப்பின் சிலநேரம் மருந்துகள் தேவைப்படலாம். உங்கள் மருத்துவர் உங்களுக்கான மருந்துகளை அழிக்கலாம். டையூரிடிக் போன்ற மருந்துகள் உடலில் உள்ள தேவையற்ற நீரை அகற்றி வீக்கத்தை குறைக்கும். இவை இருதய நோய் அல்லது மாரடைப்பு போன்ற காரணிகளால் ஏற்படும்.
  • உங்கள் மருத்துவர் கால் வீக்கத்தால் உங்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்திருந்தால், அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் நன்றாக ஓய்வு எடுத்தல் ஆகியவற்றை பரிந்துரைக்கலாம்.
  • வலியுடன் வீக்கம் ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் பாராசிடமொல், இபுப்ரொஃபென்(paracetamol and ibuprofen) போன்ற வலி நிவாரணிகள் மற்றும் நன்றாக ஓய்வு எடுத்தல் ஆகியவற்றை பரிந்துரைக்கலாம்.
  • அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் கால் வீக்கத்தை குறைக்க உதவும்.
  • உங்கள் மருத்துவர் இரத்த சோகை மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு போன்ற இதய நோய்களுக்கு குறைந்த புரதம் கொண்ட உணவு, கால்சியம், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் ஆகிய மருந்து வகை உடன் சேர்த்து பிற மருந்துகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள சுட்டி காட்டுவது போன்ற அத்தியாவசியமான ஆலோசனைகளை செய்யலாம்.
  • காலில் வீக்கம் ஏதாவது மருந்துகள் உட்கொண்டதன் பக்க விளைவு காரணமாக ஏற்பட்டிருந்தால் , உங்கள் மருத்துவர் மருந்தின் அளவை குறைக்க அல்லது மருந்தை சாப்பிடாமல் நிறுத்தி வைக்க பரிந்துரைக்கலாம்.

வாழ்க்கை மேலாண்மை

தினசரி வாழ்க்கையில் பின்வரும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன:

  • உடற்பயிற்சி
    உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நிணநீர் ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எனவே உங்கள் மருத்துவர் அல்லது உடற்பயிற்சி வல்லுநரின் சரியான வழிகாட்டுதலுடன் குறைந்த பட்சம் ஒரு உடற்பயிற்சியையாவது செய்ய வேண்டும். நடைபயிற்சி அல்லது ஜாகிங் போன்ற வழக்கமான பயிற்சிகளை நீங்கள் பின்பற்றலாம்.
  • கால்களை உயர்த்தி வைத்திருத்தல்
    பாதங்களை உயர்த்தி வைத்திருப்பது சிரை-யின்  வீனஸ் பில்டரேஷன்அழுத்தத்தை குறைக்கிறது இதன் மூலம் சிரை-யில் வடிகட்டுதல் (வீனஸ் பிரஷர்)குறைகிறது, இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
  • ஒழுங்குபடுத்தப்பட்ட புற அழுத்தம்
    ஒழுங்குபடுத்தப்பட்ட புற அழுத்தம் நுண்துளை வடிகட்டுதலை எதிர்க்கிறது மேலும் சிரை அமைப்பில் திரவத்தை வைத்திருக்கிறது.
  • லிம்பாடிக் (நிணநீர்) மசாஜ்
    நிணநீர் மசாஜ் அடைப்புகளை நீக்கி ஓரளவு நிணநீர் ஓட்டத்தை ஏற்படுத்தி நிணநீர் வடிகாலை தூண்டுகிறது, அதன் சுழற்சியை மேம்படுத்துகிறது.

கால் வீக்கம் என்ன - What is Swelling in Feet in Tamil

காலில் வீக்கம் என்பது காலில் திரவம் திரட்டப்படுவதாகும். பாதம், கணுக்கால் மற்றும் காலின் வீக்கம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு விரலை அழுத்தி பார்க்கும் போது ஒரு குழி போன்று அமுங்கினால் அந்த வீக்கம் கடுமையானதாக இருக்கலாம். 

நீங்கள் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தாலோ அல்லது விரிவாக நெடுந்தூரம் நடந்துகொண்டிருந்தாலோ காலில் வீக்கம் மிகவும் பொதுவானது அதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. இந்த வீக்கம் மூச்சுத் திணறல், வலி அல்லது புண்களை போன்ற மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து நீண்ட காலமாக நீடித்தால், இது ஒரு கடுமையான உடல்நல பிரச்சினையின் அடையாளமாக இருக்கலாம்.

உங்கள் கால்களில் ஒன்று அல்லது இரண்டும் வீங்கியிருந்தால், அது அசௌகரியம், வலி ​​மற்றும் நாள் முழுவதும் செயல்படுவதில் சிரமம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். நீங்கள் கர்ப்பமாயிருந்தால், கால்களில் இயற்கையாகவே வீங்கியிறுக்கலாம், ஏனென்றால் கர்ப்பிணிப் பெண்ணின் உடல் சாதாரண சாதாரண உடலைக் காட்டிலும் அதிக தண்ணீரைக் கொண்டுள்ளது. சில நேரங்களில் கர்பமான தாய் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தால், நாள் முடிவில் காலின் வீக்கத்தின்  வலி மோசமாகிவிடும். அம்மா அல்லது குழந்தைக்கு அது ஒரு தீவிர பிரச்சினை இல்லை என்றாலும், அது அம்மாவுக்கு சங்கடமாக இருக்கலாம்.

கால்களில் வீக்கம் உண்டாவது பின்வரும் காரணங்களுக்குத் தொடர்பானது: நுண் துகள் வடிகட்டுதல் அதிகரிப்பால் இரத்த நுண்துகளிலிருந்து அதிக திரவத்தை வெளியேற்றப்படுவது; அல்லது/மற்றும் நிணநீர் வடிகட்டுதல் குறைவது உங்கள் உடலில் உள்ள நிணநீர் ஓட்டத்தைத் தடுப்பது; பல நோய்கள் பாதங்களில் வீக்கம் ஏற்பட காரணமாக இருப்பதால், இது பல்வேறு காரணங்களுக்காக விரிவான வரலாறு மற்றும் விசாரணைகளை உள்ளடக்கிய உங்கள் மருத்துவரின் ஒரு சரியான ஆய்வு தேவைபடுகிறது. வீக்கம் ஏற்பட எந்தவித நோய்களும் காரணமாக இல்லாவிட்டால், பொதுவாக சிகிச்சை தேவைப்படாது ஆனால் சில மருந்துகள் காரணமாகவோ அல்லது பிற நோய் காரணமாக பாத வீக்கம் உள்ளவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே வீக்கம் எந்த மருந்துகளாலும் வேறு நோயாளியாக இருப்பதால் ஏற்பட்டுள்ளது என நீங்கள் நினைத்தால் ஒரு மருத்துவரை அணுகுவது முக்கியம்.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Swelling
  2. National Health Service [Internet]. UK; Swollen ankles, feet and legs (oedema)
  3. Emma J Topham, Peter S Mortimer. Chronic lower limb oedema. Clinical Medicine Vol 2 No 1 January/February 2002. Clin Med JRCPL 2002;2:28–31
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Foot, leg, and ankle swelling
  5. Jennifer M. Vesely, Teresa Quinn, Donald Pine. Elder care: A Resource for Interprofessional Providers. University of Minnesota, University of Arizona, Health Resources and Services Administration. July 2013.
  6. Kumar Natarajan. [internet]. Chapter 72. Practical Approach to Pedal Edema.

கால் வீக்கம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for கால் வீக்கம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹110.0

₹65.0

Showing 1 to 0 of 2 entries