முடி கொட்டுதல் - Hair Loss in Tamil

முடி கொட்டுதல் என்றால் என்ன?

முடி கொட்டுதல் என்பது உச்சந்தலையில் இருந்து (அல்லது முழு உடலில் இருந்து) முடி கொட்டும் ஒரு வெறுப்புண்டாக்கும் நிலை ஆகும். ஒவ்வொரு நாளில் 100 முடி இழைகள் வரை கொட்டுவது மிகவும் சாதாரணமானது, ஏனென்றால் இவை புதிதாக வளரும் முடிகளால் மாற்றப்படுகின்றன. இருப்பினும், புதிய முடி வளர்ச்சியை விட முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும்போது பிரச்சினை ஏற்படுகிறது. இது ஆண்களில் மிகவும் பொதுவாக நிகழ்கிறது. முடி இழப்பு அதிகமாக இருந்தால், அது வழுக்கைக்கு வழிவகுக்கும்.

அதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

முடி இழப்பு என்பது சில அடிப்படை நோய்களைக் குறிக்கும் ஒரு பொதுவாக அறிகுறி ஆகும். முடி இழப்பு சில அறிகுறிகளுடன் தொடர்புடையது, அவை:

 • முடி உதிர்தல் வெவ்வேறு வடிவங்களில் நடக்கும்:
  • ஆண், பெண் - வகை முடி இழப்பு.
  • உச்சந்தலையின் மீது முழுமையான வழுக்கைப் தடங்கள்.
  • குறிப்பிட்ட இடங்களில் முழுமையான முடி இழப்பு.
  • முழு உடலிலும் முடி இழப்பு.
 • உச்சந்தலையில் செதில் போன்ற தோற்றம் மற்றும் வறட்சி.
 • உச்சந்தலையில் அரிப்பு.
 • முடி வறட்சி மற்றும் பிளவுபட்ட முடி.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

முடி இழப்பு ஐம்பது மிகவும் பொதுவானது மற்றும் பல காரணங்களுடன் தொடர்புடையது. பொதுவான காரணங்கள் சில பின்வருமாறு:

 • பரம்பரை - பெற்றோருக்கு இருக்கும் முடி இழப்பு போன்ற ஒரு வலுவான குடும்ப வரலாறு, முடி கொட்டுதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
 • ஆண்கள் - வகை வழுக்கைக்கு வழிவகுக்கும் ஹார்மோன் மாற்றங்கள் (ஆண்களில் மிகவும் பொதுவானவை).
 • பூஞ்சை தொற்றுகளைப் போன்ற உச்சந்தலை தொற்றுகள்.
 • ஐயோட்ரோஜெனிக் (மருந்து மூலம் தூண்டுதல்) - பொதுவாக கீமோதெரபி ஏஜெண்டுகள், எதிர்ப்பு மன தளர்ச்சி மருந்துகள் போன்றவற்றில் காணப்படுகிறது.
 • கதிர்வீச்சு சிகிச்சை.
 • மன அழுத்தம் - மன அழுத்தம் முடி கொட்டுவதற்கான ஒரு முக்கிய காரணம் ஆகும்.
 • ஊட்டச்சத்து குறைபாடுகள் - வைட்டமின் இ, துத்தநாகம் மற்றும் செலினியம் குறைபாடு முடி கொட்டுதலை ஏற்படுத்தலாம்.
 • முடி சிகிச்சை - முடி வண்ணப்பூச்சுகளை அடிக்கடி உபயோகித்தல், முடியை பெறப்படுத்துதலுக்கு பய்னபடுத்தப்படும் பொருட்கள் மற்றும் பிற இரசாயன சிகிச்சைகள் முடி கொட்டுதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கபடுகிறது?

வழக்கமாக, ஒரு முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் முடி கொட்டுதலை உறுதிப்படுத்த முடியும். இருப்பினும் சில சோதனைகள், முடி கொட்டுதல் மற்றும் இந்த நிலைமைகளை சரிசெய்ய அல்லது உதவுவதில் பயனுள்ளதாக இருக்கும் சிகிச்சை வகைகளை தீர்மானிக்க உதவும்.அந்த சோதனைகள் பின்வருமாறு:

 • இரத்தத்தின் வைட்டமின் மற்றும் தாது அளவு போன்ற இரத்தப் பரிசோதனைகள் அவற்றின் குறைபாடுகளை அறிய உதவும்.
 • புல் சோதனை மற்றும் ஒளி நுண்ணோக்கி - முடி மென்மையாய் இழுக்கப்படுவதன் மூலம், இறுக்கமான வலிமை மற்றும் நுண்ணறை இணைப்புகளை கண்டறியலாம். அதே சமயம் நுண்ணோக்கியின் மூலம் மயிர்க்கால்களில் அடர்த்தி மற்றும் முடியின் வடிவத்தை பரிசோதிக்க முடியும்
 • உச்சந்தலை திசுப்பரிசோதனை - இது தொற்று போன்ற காரணியை தீர்மானிக்க உதவுகிறது.

முடி இழப்புக்கான சிகிச்சை அதன் காரணியை முற்றிலும் சார்ந்துள்ளது. சில சூழ்நிலைகளில், இதை குணப்படுத்த முடியாது, ஆனால் ஆதரவு சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். முடி இழப்புக்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

 • மருந்துகள் - துத்தநாகம், செலினியம், வைட்டமின் இ மற்றும் பல ஊட்டச்சத்துக்களை கொண்ட மல்டிவைட்டமின் மாத்திரைகள், மோனொக்சிடில், ஃபினாஸ்டிரைடு, ஹார்மோன் மாற்று மருந்துகள் மற்றும் பல..
 • லேசர் சிகிச்சை - உச்சந்தலையை லேசர் கதிர்களுக்கு வெளிப்படுத்தி முடி அடர்த்தியை மேம்படுத்துதல்.
 • மாற்று அறுவை சிகிச்சை - தலையில் அடர்ந்தயான முடிகள் உள்ள இடத்தின் சிறுபகுதியை எடுத்து, முடி உதிர்தல் இருக்கும் ஒரு இடத்தில் இடமாற்றப்படுகிறது.
 • ஹேர் வீவிங்.