அகம்மகுளோபுளினிமியா - Agammaglobulinemia in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 27, 2018

March 06, 2020

அகம்மகுளோபுளினிமியா
அகம்மகுளோபுளினிமியா

அகம்மகுளோபுளினிமியா என்றால் என்ன?

மனித உடலில் இம்யூனோகுளோபுளின்ஸ் (எதிர்ப்புப்புரதங்கள்) எனப்படும் நோயெதிர்ப்பு ஊக்குவித்தல் புரதங்கள் உள்ளன.  ஒரு தனிநபருக்கு இந்த புரதங்களில் குறைபாடு இருக்கும்பட்சத்தில், உடலில் நோய்த்தடுப்பாற்றல் குறைந்த நிலைமை நிலவும், இந்த நிலைதான் அகம்மகுளோபுளினிமியா என அழைக்கப்படுகிறது. இந்த நோய் உள்ளவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தோற்றுநோய் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

எதிர்ப்புரதங்களின் குறைபாடு காரணமாக, அகம்மகுளோபுளினிமியா பாதித்த ஒரு நபர் நோய்த்தொற்றுக்கு எளிதில் ஆளாகிறார் மற்றும் அவர் பின்வரும் தொடர் சிக்கல்களை சந்திக்க நேரிடும்:

பொதுவாக குழந்தை பிறந்ததில் இருந்து 5 வயது வரையில் அதிகப்படியான நோய் தொற்றுகள் தாக்குகின்றன.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இந்த நிலை ஏற்படுவதற்கான முக்கிய காரணம், ஆண்களை பாதிக்கும் ஒரு மரபணு குறைபாடே ஆகும். இந்த குறைபாடு காரணமாக, நோயெதிர்ப்பு உயிரணுக்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது, இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு புதிய நோய் தொற்றுகள் தாக்கும் அபாயம் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே ஏற்பட்ட தொற்றுகளில் இருந்து முழுமையாக நிவாரணம் பெற முடியாத வகையில், அது மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற சிக்கலும் அதிகமாக உள்ளது. நுரையீரல், தோல், வயிறு மற்றும் மூட்டு பகுதிகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. இந்த நோயின் மரபணு இயல்பு காரணமாக, குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களும் அகம்மகுளோபுளினிமியா நோயால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

இதை எவ்வாறு கண்டறிவது  மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

எதிர்ப்புப்புரதங்கள் மற்றும் பி-லிம்போசைட்டுகள் ஆகியவற்றின் அளவை கண்டறிய இரத்த பரிசோதனை மேற்கொள்வது இந்த நோயை கண்டறிவதற்கான ஒரு முக்கியமான வழிமுறையாகும்.

இந்த நிலைக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கும் வகையில், மருத்துவர்கள் தோலின் அடியில் உள்ள திசுக்களில் ஊசி செலுத்தும் முறை வழியாக (ஸப்க்யூடேநீஅஸ் இன்ஜெக்ஷன்) அல்லது நரம்பு வழியாக எதிர்ப்புரதங்களை பிற்சேர்கிறார். இந்நோய் தீவிரமடைந்த நிலையில், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்றுநோயை எதிர்க்க உதவும் வகையில் வலுவான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கின்றார். நோயின் தீவிரத்தையும் தொற்றின் தொடர்ச்சியான நிகழ்வுகளைகளையும் குறைப்பது தான் அனைத்து சிகிச்சை முறைகளின் நோக்கமாகும்.



மேற்கோள்கள்

  1. National Organization for Rare Disorders. Agammaglobulinemia. USA. [internet].
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Agammaglobulinemia
  3. Clinical Trials. Agammaglobulinemia. U.S. National Library of Medicine. Agammaglobulinemia.
  4. National Organization for Rare Disorders. Agammaglobulinemia. USA. [internet].
  5. Genetic home reference. X-linked agammaglobulinemia. USA.gov U.S. Department of Health & Human Services. [internet].

அகம்மகுளோபுளினிமியா க்கான மருந்துகள்

Medicines listed below are available for அகம்மகுளோபுளினிமியா. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.