ஆஞ்சினா (இதயவலி) - Angina in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

November 27, 2018

March 06, 2020

ஆஞ்சினா
ஆஞ்சினா

ஆஞ்சினா (இதயவலி) என்றால் என்ன?

ஆஞ்சினா (இதயவலி) என்பது இதய தசைகளுக்கு போக வேண்டிய ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தின் அளவு குறைந்துவிடுவதன் காரணமாக, மார்பில் ஏற்படும் ஒரு விதமான அசௌகரியம் ஆகும். இது ஒரு நோயல்ல, ஆனால் அறியப்படாத இதய நோய்கான ஒரு அறிகுறியாகும், அதாவது கரோனரி இதய நோய் போன்றது, இங்கே தமனிகள் சுருங்கி போவதனால், இதயத்திற்கு அனுப்பப்படும் பிராணவாயு கலந்த இரத்தத்தின் அளவு குறைவடைகிறது.

ஆஞ்சினா நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஆஞ்சினா மூன்று வகைப்படுகிறது: அவை நிலையான, நிலையற்ற, மற்றும் மாறுபடும் ஆஞ்சினா எனப்படும். பொதுவாக, இதயவலியின் வகையை பொறுத்தே அதன் அறிகுறிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. நெஞ்சு வலி என்பது முக்கிய அறிகுறியாக உணரப்படுகிறது. மார்பில் இறுக்கம் அல்லது நெஞ்சு கணம் போன்ற உணர்வுகள்; இந்த வலி, கை, கழுத்து, தாடை, தோல்பட்டை அல்லது பின்புறம் வரை பரவுதல்; குமட்டல்சோர்வுமூச்சு திணறல்; வியர்வை; மற்றும் தலைச்சுற்று ஆகியவைகளும் பிற அறிகுறிகளில் அடக்கம். இந்த வலி அசிடிட்டி அல்லது அஜிரணத்தின் வலியை ஒத்ததாக இருக்கலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஆஞ்சினா என்றால் வெளியில் அறியப்படாத இதய பிரச்சனையின் அறிகுறி ஆகும். பிலெக்ஸ் எனப்படும் கொழுப்பு படிவம் தமனிகளில் படிவதால், அவை சுருக்கமடைகின்றன. இக்காரணத்தினால் இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் (இஸ்கிமியா) குறைந்துவிடுகிறது. இந்த பிராணவாயு நிறைந்த இரத்த ஓட்டம் பொதுவாக ஓய்வு நேரங்களில் பராமரிக்கபடுகிறது, ஆனால் ஒருநபர் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போது இதய தசைகளுக்கு பிராணவாயு நிறைந்த இரத்த ஓட்டம் அதிக அளவில் தேவைப்படும்வதால், அது பற்றாக்குறையாக மாறிவிடுகிறது. எனவே, நெஞ்சு வலியானது கழுத்து, தோல்பட்டை, பின்புறம் மற்றும் பிற உடல் பாகங்களுக்கும் பரவுகிறது. இதுவே நிலையான ஆஞ்சினாவில் காணப்படும் அறிகுறிகளாகும்.

நிலையற்ற ஆஞ்சினாவில், சில தருணங்களில் பிலெக்ஸ் தமனி சுவரிலிருந்து பிரிந்து, இரத்தத்துடன் சேர்ந்து பாய்கின்றது, இதனால் தமனியில் அடைப்போ அல்லது பகுதியளவு அடைப்போ ஏற்பட்டு திடீர் இதய வலி மற்றும் பிற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. ஓய்வு நேரத்திலும் நெஞ்சு வலி வரக்கூடும், மேலும் ஏதேனும் வேலைகள் செய்யும்போது, வலி மேலும் அதிகரிக்கக்கூடும்.

மேலும், உணர்ச்சி வசப்பட்ட மன அழுத்தத்தின் காரணமாகவும், புகைபிடித்தல், குளிர் காலநிலை, அதிக உணவு அல்லது உடல் செயல்பாடு காரணமாகவும், கரோனரி தமனி குறுகி ஆஞ்சினா அறிகுறிகளுக்கு வித்திடுகிறது; இந்த வகையே மாறுபடும் ஆஞ்சினா என்று அழைக்கப்படுகிறது.

இதனை கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

இதய வலியைத் தொடர்ந்து, உங்களது மருத்துவர் உங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகள், வலி ஏற்படும்போது என்ன நடவடிக்கையை மேற்கொண்டீர்கள், குடும்ப மருத்துவ வரலாற்று தகவல்கள், உணவு பழக்கவழக்கம், புகை பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சி முறை, உடல் எடை, உயரம், இடுப்பு, மற்றவற்றுடன் உடல் நிறை குறியீட்டெண் போன்ற விவரங்களை கேட்கலாம். அதன்பிறகு, உங்கள் மருத்துவர் எலக்ட்ரோகார்டிரியோகிராம் (ஈசிஜி), இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை, இரத்த கொழுப்பு, மார்பு எக்ஸ்-ரே, கரோனரி ஆஞ்சியோகிராபி, கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராஃபி ஸ்கேன் மற்றும் ஈசிஜி அழுத்த சோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். நிலையற்ற ஆஞ்சினாவினால் ஏற்படும் மாரடைப்பை தடுக்க உடனடி நோய் கண்டறிதல் மற்றும் அவசர சிகிச்சையளித்தல் அவசியமானது.

உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை முழுவதுமாக பகிர்ந்துகொள்வது மற்றும் உங்கள் மருத்துவர் மீது நீங்கள் வைக்கக்கூடிய முழு நம்பிக்கையே ஆஞ்சினாவின் வெற்றிகரமான சிகிச்சைக்கு அடிப்படையான தேவை ஆகும். நோயை கண்டறிந்து உறுதிப்படுத்திய பின்னர்,ஆஞ்சினா வகையினை பொறுத்தே மருத்துவர்கள் மருந்துவத்தை துவங்குவர். மருந்துகளுடன் சேர்த்து, வாழ்க்கைமுறை மாற்றங்கள், நல்ல உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை போன்றவையும் ஆரம்பகட்டத்தில் தேவைப்படுகிறது.

ஆரம்ப ஆஞ்ஜினா தாக்குதலின்போதே மற்றொரு தாக்குதலை தவிர்க்க மருத்துவர்கள் உடனடியாக கிளைசெரில் டிரினிட்ரேட் (ஜி.டி.என்) பரிந்துரை செய்வார்கள். ஜி.டி.என் சிறிய டேப்ளட் வடிவத்திலோ அல்லது ஸ்ப்ரேயாகவோ கிடைக்கிறது. ஒரு ஆஞ்சினா தாக்குதலுக்குப் பிறகு, வேலை செய்வதை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, ஜி.டி.என்-ஐ எடுத்துக்கொள்ளவும், முதல் டோஸ் வேலை செய்யாவிட்டால், ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அடுத்த டோசை எடுத்துக்கொள்ளவும். ஜி.டி.என், பீட்டா பிளாக்கர்கள் மற்றும் கால்சியம் சேனல் பிளாக்கர்கள் போன்ற மருந்துகளை ஆஞ்ஜினா தாக்குதல்களை தடுப்பதற்கு பயன்படுத்தலாம். ஆஞ்சினா என்பது மாரடைப்பினால் ஏற்படும் அதிக ஆபத்திற்கான எச்சரிக்கை அறிகுறி; எனவே, மாரடைப்பைத் தடுக்க பிற மருந்துகளும் தேவைப்படுகின்றன, அவற்றுள் குறைந்த டோஸ் ஆஸ்பிரின், ஸ்டேடின்ஸ், மற்றும் ஆஞ்சியோடென்சின்-மாற்றும் என்சைம் இன்ஹிபிட்டர்ஸ் ஆகியவைகளும் அடக்கம்.

மருந்துகளால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை எனில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இதில் கிராஃப்ட் வழிமுறையில் இரத்த ஓட்ட பாதையை மாற்றி அமைத்தல், உடலின் மற்ற பாகங்களில் உள்ள இரத்த நாளத்தை பயன்படுத்துவது (கரோனரி தமனி பைபாஸ் கிராஃப்ட் அறுவை சிகிச்சை) அல்லது ஸ்டெண்ட்ஸ் பயன்படுத்தி தமணிகளை விரிவுபடுத்துவது (பெர்குட்டானியஸ் கரோனரி தலையீடுகள்). நிலையற்ற ஆஞ்சினாவிற்கு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவுகளை தடுப்பதற்கான மருந்துகள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. உங்களுக்கு உடனடியாக குறைந்த அளவு ஆஸ்பிரின், க்ளோபிடோக்ரெல், மற்றும் ஊசியின் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக்கும் மருந்து கொடுக்கப்படும். இந்த நிலை நீடித்து மேலும் சிக்கல்கள் ஏற்பட நேர்ந்தாலோ அல்லது இது தொடர்பான மற்றொரு வியாதி உருவாகும் நிலை வந்தாலோ, அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Treatment of Angina
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Angina
  3. British Heart Foundation. Angina - Causes, Symptoms & Treatments. England & Wales. [internet].
  4. American Heart Association, American Stroke Association [internet]: Texas, USA AHA: Angina (Chest Pain)
  5. American Academy of Dermatology. Rosemont (IL), US; Acute Coronary Syndrome: Current Treatment

ஆஞ்சினா (இதயவலி) க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஆஞ்சினா (இதயவலி). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.