முள்ளந்தண்டழல் (முதுகெலும்பு அழற்சி) - Spondylitis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 27, 2018

March 06, 2020

முள்ளந்தண்டழல்
முள்ளந்தண்டழல்

முள்ளந்தண்டழல் என்றால் என்ன?

முள்ளந்தண்டழல் என்பது முதுகெலும்பு சம்பந்தமான ஒரு கீழ் வாதம் ஆகும். இதனால் முதுகெலும்புக்கு இடையே அழற்சி ஏற்படும் மற்றும் முதுகெலும்பு மற்றும் முதுகெலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டுகளிலும், இடுப்பு, தசைநார்களிளும் காணப்படும். இது மனிதர்களிடையே மிகவும் பொதுவானது மற்றும் கடுமையானதும் ஆகும். எப்பொழுதாவது இது மற்ற மூட்டுகளிலும் ஏற்படலாம்.

புதிய வகைப்பாட்டின்படி முள்ளந்தண்டழல் அச்சு முள்ளந்தண்டழல் (இடுப்பு மற்றும் முதுகெலும்புகளை பாதிக்கிறது) புற முள்ளந்தண்டழலிலும் பாதிப்புகளை ஏற்படுகிறது (மற்ற மூட்டுகளை பாதிக்கறது).

முள்ளந்தண்டழலின் முக்கிய அறிகுறிகள் என்ன?

முள்ளந்தண்டழலின் முக்கிய அறிகுறிகளாவன:

 • விளா, பிட்டம், இடுப்பு,பின் முதுகு,தோள்பட்டை மற்றும் குதிகால் ஆகியவைகளில் மிகுந்த வலி ஏற்படுதல் மற்றும் விறைப்பு தன்மை.
 • முதுகெலும்பின் இயக்கம் ஒரு எல்லைக்குட்பட்டது. ஆனால் இது அந்த இயக்கத்தினையே மாற்றுகிறது.
 • காய்ச்சல் மற்றும் சோர்வு.
 • கண் அல்லது குடலில் அழற்சி.
 • அரிதாக இதில் இதயம் அல்லது நுரையீரல் சம்பந்தப்படும்.
 • தசை, தோல்,கண்கள், சிறுநீர்ப்பை மற்றும் பிறப்புறுப்புகளில் வலி மற்றும் அழற்சி ஏற்படும்.
 • குதிகால் வலி, விழித்தசை நார் மற்றும் முழங்கால்களில் வீக்கம் ஏற்படும்.

முள்ளந்தண்டழலின் முக்கிய காரணங்கள் யாவை?

இதன் காரணங்கள் தெளிவாக இல்லை.என்றாலும் மரபணு காரணிகள் சம்பந்தப்பட்டு இருக்கலாம். HLA-B27 தொடர்புடையதாக இருக்கலாம். ஆனாலும் இது தெரியப்படாத நிலையிலேயே உள்ளது. இன்னும் பிற காரணங்களால் முள்ளந்தண்டழல் ஏற்படுவதாக கருதப்படுகிறது:

 • சுற்றுசூழல் காரணிகள்.
 • நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை - உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள். பல்வேறு திசுக்களில் வீக்கம் ஏற்படுவதை தடுக்கும் சக்தியாக செயல்படுகிறது.
 • நீண்ட நாட்களாக கடுமையான குடல் வீக்கம்.

இது எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது?

முள்ளந்தண்டழல் நோய் தனிப்பட்ட அறிகுறிகளை சார்ந்து கண்டறியப்படுகிறது: பின்வரும் படிநிலைகளை மருத்துவர் உறுதிப்படுத்த வேண்டும்.

 • முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
 • முக்கியமாக சாக்ரோலியாக் மூட்டுகள் மற்றும்  முதுகெலும்புகளில் எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.
 • HLA-B27-க்கு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும், இருந்தாலும் இது நோய் அறிதலை உறுதிப்படுத்தாது.

முள்ளந்தண்டழல் சிகிச்சைகள்:

தற்போது முள்ளந்தண்டழல் நோயை குணப்படுத்த இயலாது. எனவே இதன் சிகிச்சையின் நோக்கம் வலி மற்றும் விறைப்பை குறைக்க வேண்டும் என்பதே, மற்றும் குறைபாட்டை தடுத்தல் மற்றும் செயலப்பாட்டை பாதுகாத்தல், நோய் தாக்கத்தை மெதுவாக குறைதல் மற்றும் அதன் நிலையை பராமரித்தல் மட்டுமே ஆகும்.

 • வழக்கமான உடற்பயிற்சிகள் நீட்டித்தல் மற்றும் பலப்படுத்துதல் குனிந்து நிமிர்ந்து ஆழ்ந்த மூச்சு பயிற்சியை உடற்பயிற்சியுடன் செய்ய வேண்டும். ஒரு உடற்பயிற்சியை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் பிசியோதெரபிஸ்ட்கள் பங்கு மிக முக்கியமாகும்.
 • மருந்துகளும், சிகிச்சைகளும்:
  • ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிப்பு மருந்துகள் (NSAID) பெரும்பாலும் அறிகுறிகளை கட்டுப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றன.
  • கார்டிசோன் அல்லது ப்ரெட்னிசோன் உள்ளிட்ட ஸ்டீராய்டுகள் அரிதாகவே பயன்படுத்தபடுகிறது.
  • சல்ஃபாசலாசைன் அல்லது மெத்தோட்ரெக்ஸேட் மருந்துகளை ஒருவேளை பயன்படுத்தபடலம், ஆனால் இவைகள் முதுகெலும்பு நோய்க்கு குறைவாகவே உதவுகின்றது.
  • தற்போது உயிரியல் TNF-α எதிர்ப்பு முகவர்களான இன்ஃப்லெக்சிமாப், இடானர்செப்ட் மற்றும் அடலிமுமாப் ஆகியவற்றை உபயோகிக்கின்றனர். இவைகள் அறிகுறிகளை குறைப்பதோடு மட்டுமில்லாமல், மெதுவாக நோய்தாக்கத்தையும் குறைக்க உதவுகிறது. அவை நரம்புகள் மூலம் உட்செலுத்தப்படுகின்றன.
  • தம்ப முள்ளந்தண்டழல் (அன்கோலோசிங் ஸ்போண்டிலிடிஸ்) ற்கான அறுவை சிகிச்சைகள் குறைவாகவே உள்ளன. முதுகெலும்புகளுக்கான குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகள் எதுவும் இல்லை. எனினும் இடுப்பு அல்லது தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சைகள் பல சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருக்கும்.மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Ankylosing Spondylitis
 2. Cleveland Clinic. Spondylitis: Management and Treatment. Euclid Avenue. [internet[
 3. Spondylitis Association of America. Overview of Types of Spondylitis. US; [internet]
 4. Canadian Spondylitis Association. Spondylitis. Canada; [internet]
 5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Ankylosing spondylitis

முள்ளந்தண்டழல் (முதுகெலும்பு அழற்சி) டாக்டர்கள்

Dr. Tushar Verma Dr. Tushar Verma Orthopedics
5 वर्षों का अनुभव
Dr. Urmish Donga Dr. Urmish Donga Orthopedics
5 वर्षों का अनुभव
Dr. Sunil Kumar Yadav Dr. Sunil Kumar Yadav Orthopedics
3 वर्षों का अनुभव
Dr. Deep Chakraborty Dr. Deep Chakraborty Orthopedics
10 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

முள்ளந்தண்டழல் (முதுகெலும்பு அழற்சி) க்கான மருந்துகள்

முள்ளந்தண்டழல் (முதுகெலும்பு அழற்சி) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।