ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி - Penile Inflammation (Balanitis) in Tamil

Dr. Ayush PandeyMBBS

November 27, 2018

March 06, 2020

ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்
ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி
ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி
ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி அல்லது பாலனிட்டிஸ் என்றால் என்ன?

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி அல்லது பாலனிட்டிஸ் என்றால் மெல்லிய ஆண்குறியில் ஏற்படும் அழற்சி (ஆண்குறியின் நுனிபகுதியில் இருக்கும் வீக்கம்) ஆகும். விருத்தசேதனம் செய்யப்படாத ஆண்களின் மத்தியில் (அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்படாத நுனித்தோல்) சுகாதாரம் இல்லாத காரணத்தினால் ஏற்படும் ஒரு பொதுவான நிலை மற்றும் உடலில் குவிந்துள்ள ஈஸ்ட் மற்றும் நுனித்தோலின் கீழிருக்கும் பிற நுண்ணுயிர்களின் காரணத்தினாலும் இவ்வாறு ஏற்படுகிறது. இது பாலனோபாஸ்ட்டிடிஸ் (சுரப்பி மற்றும் மொட்டு முனைத்தோலில் ஏற்படும் வீக்கம்) வித்திடுவது மட்டுமின்றி சுற்றியுள்ள ஆண்குறி திசுக்களிலும் அழற்சியை ஏற்படுத்துகிறது. இது மிக பொதுவாக எச்.ஐ.வி., நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள  நபர்களிடம் காணப்படுகிறது.

இதன் முக்கிய குறியீடுகள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பொதுவாக பாலனிட்டிஸ்ல் காணப்படும் மருத்துவக்கூறுகள் பின்வருமாறு:

 • அரிப்புத்தன்மை.
 • மிக மென்மையாக இருப்பது.
 • குறிப்பிட்ட பகுதியில் வலி அல்லது வலிமிகுந்த விறைப்பு.
 • சிவந்திருத்தல் மற்றும் தடித்தல்.
 • வீக்கம்.
 • மிகுந்த வாடையுடன் வெளியேற்றம்.

பாலனிட்டீசில் காணப்பட்ட அறிகுறிகளைப் பிரதிபலிக்கும் மற்ற நிலைமைகள் பின்வருமாறு:

 • பிமோஸிஸ் (முனைத்தோலின் இறுக்கம்).
 • பராஃபிமோஸிஸ் (ரெட்ராக்டட் மொட்டு முனைத்தோலை அதன் அசல்நிலையை நோக்கி மீண்டும் இழுக்க முடியாதது).

 இதன் முக்கிய காரணங்கள் என்ன?

இது நுண்ணுயிரிகளின் அதிகவளர்ச்சியின் காரணத்தினால் ஏற்படுகிறது மேலும் இது பொதுவாக சுரப்பிகளின் தோல் பகுதியால் அமைந்திருக்கும். சூடான ஈரபதம் மிகுந்த சூழல் இத்தகைய உயிரினங்களின் வளர்ச்சிக்கு சாதகமானதாக இருக்கிறது. இது முக்கியமாக பஃங்கஸ் கேண்டிடா அல்பிகான்ஸ் எனப்படும்  நோய்தொற்றின் காரணதினாலேயே ஏற்படுகிறது. நீரிழிவு மற்றும் குறிப்பிட்ட சில தோல் நிலைமைகளால் கூட பாலனிடிஸ் ஏற்படுவதில்லாமல் அதை மேலும் மோசமாக்கிவிடும். மோசமான சுகாதாரத்தின் காரணத்தினால் கூட பாலனிடிஸ் ஏற்படும். வியர்வை, பாக்டீரியா, குப்பைகள் மற்றும் இறந்த தோல்கள் அனைத்தும் முனைத்தோலின் கீழ் சேர்ந்துவிடுவதால், அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது. இப்பகுதியை ஒழுங்காகக் கழுவி சுத்தம் செய்யவில்லையெனில் இறுக்கமான முனைத்தோல் இந்த பிரச்சனையை மேலும் மோசமடையச் செய்துவிடும்.

பிற காரணங்கள் கீழ்கண்டவாறு:

 • டெர்மட்டிட்டீஸ் /மிகுந்த ஒவ்வாமை நிலைமைகள்: தோலில் அழற்சி ஏற்படுவதற்கு காரணமான சோப்புகள், வாசனை திரவியங்கள், டிட்டர்ஜன்ட்ஸ்  மற்றும் விந்தணுக்கொல்லி போன்றவைகளில் இருக்கும் எரிச்சலூட்டிகளின் தொடர்பினாலேயே தடிப்புகள் மற்றும் எரிச்சலை ஏற்படுகிறது.
 • நோய்த்தொற்றுகள்: சில பால்வினை நோய்களான கோனோரியா (மேக வெட்டை நோய்), ஹெர்பெஸ் மற்றும் சிபிலிஸ் போன்றவைகள் பாலனிட்டிசின் அறிகுறிகளை உண்டாக்கும்.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிற?

பாலனிட்டிஸ் நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது:

 • மருத்துவ அறிகுறிகள்: எரித்திமடௌஸ் தடிப்புடன் கூடிய அரிப்பு மற்றும் வேதனை.
 • தோற்றம்: சிறிய பருக்களை கொண்ட சிவப்பு திட்டுகளாகவோ அல்லது மங்கலான சிவப்பு நிறத்துடன் பளப்பான தோற்றதில் இருக்கும்.
 • நுண்நோக்கி: நோய்தொற்றுக்கு காரணமான உயிரினத்தை கண்டறிதல்.
 • தோல் திசுச்சோதனை : நோய் கண்டறிதல் தெளிவாக இல்லை என்றால் மட்டுமே திசுசோதனை செய்யப்படும்.
 • சிறுநீர் பகுப்பாய்வு: குளுக்கோஸ் இருப்பதை சரிபார்ப்பதற்காக செய்யப்படுவது.

 சிகிச்சைக்குள் உள்ளடங்கியது:

 • பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் ஆன்டிபையோடிக்ஸ் .
 • வீக்கத்திற்கான ஸ்டீராய்டு கிரீம்கள்.
 • பூஞ்சை தொற்றுநோய்களைக் கவனிப்பதற்காக ஆன்டி-பஃங்கல் மருந்துகளை பயன்படுத்தப்படுகிறது.
 • பல சந்தர்ப்பங்களில், விருத்தசேதனம் சிறந்த தேர்வாக இருக்கலாம், ஏனெனில் இறுக்கமான தோல் குறிப்பிட்ட பகுதிகளை சுத்தம் செய்வதற்கு இடையூறாக இருக்கும்.
 • குறிப்பிட்ட பகுதியை சுத்தம் செய்ய இயல்பான சலைன் வாஷை பயன்படுத்தலாம்.

 சுய-பாதுகாப்பு குறிப்புகள்:

 • வலி முழுமையாக அடங்கும் வரை, பாலியல் தொடர்பு மற்றும் சுயஇன்பத்தை தவிர்த்தல் வேண்டும்.
 • தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளக்கூடிய வலி நிவாரணி மருந்துகளை குறித்துக் கொள்ளுங்கள்.
 • வீக்கமடைந்த பகுதியில் ஐஸ்கட்டியை வைப்பது வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.
 • வலிமிகுந்த பகுதிக்கு இதமாக, இறுக்கமாக-பொருந்தும் உள்ளாடைகளை பயன்படுத்தலாம்.
 • ஆண்குறியை சுற்றியோ அல்லது சிறுநீரிலோ ஏதேனும் இரத்தம் இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்கவும், இது கடுமையான வீக்கத்தையோ அல்லது காயத்தையோ வெளிப்படுத்தும் மற்றும் அத்தகைய சந்தர்ப்பங்களில் மருத்துவரிடம் கலந்தலோசிப்பது மிக அவசியம்.
 • கடுமையான இரசாயனங்கள் இருக்கும் சோப்புகளை பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும். சோப்பு-இல்லாத கழுவுதல் பரிந்துரைக்கப்படுகிறது.
 • சிறுநீர் கழிக்கும் போது குறிப்பிட்ட இடத்தை சுத்தம் செய்யும்போது முனைத்தோலை ரிட்ராக்ட் செய்ய முயற்சிக்கவும் மற்றும் மேலும் ஏற்படவிருக்கும் நோய் தொற்றுக்குரிய வாய்ப்பை தடுக்கவும். 
 • இணையர்களுக்கு அறிகுறிகள் இல்லாதவரை பொதுவாக அவர்களுக்கு சிகிச்சை செய்யப்படுவதில்லை.மேற்கோள்கள்

 1. Brian J. Morris, John N. Krieger. Penile Inflammatory Skin Disorders and the Preventive Role of Circumcision. Int J Prev Med. 2017; 8: 32. PMID: 28567234
 2. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Penile Disorders
 3. Healthdirect Australia. Penis swelling or pain. Australian government: Department of Health
 4. Government of south Australia. Balanitis and balanoposthitis diagnosis and management.Department for Health and Wellbeing
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Balanitis
 6. Healthy Male. Foreskin Hygiene. Monash University; Australian Government Department of Health.

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி டாக்டர்கள்

Dr. Virender Kaur Sekhon Dr. Virender Kaur Sekhon Urology
14 वर्षों का अनुभव
Dr. Rajesh Ahlawat Dr. Rajesh Ahlawat Urology
44 वर्षों का अनुभव
Dr. Prasun Ghosh Dr. Prasun Ghosh Urology
26 वर्षों का अनुभव
Dr. Pankaj Wadhwa Dr. Pankaj Wadhwa Urology
26 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி க்கான மருந்துகள்

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

दवा का नाम

कीमत

₹81.0

20% छूट + 5% कैशबैक


₹52.5

20% छूट + 5% कैशबैक


₹39.2

20% छूट + 5% कैशबैक


₹82.0

20% छूट + 5% कैशबैक


₹49.0

20% छूट + 5% कैशबैक


₹36.4

20% छूट + 5% कैशबैक


₹65.0

20% छूट + 5% कैशबैक


₹52.9

20% छूट + 5% कैशबैक


₹43.5

20% छूट + 5% कैशबैक


₹51.5

20% छूट + 5% कैशबैक


Showing 1 to 10 of 54 entries