குடல் கட்டுப்பாடிழப்பு - Bowel Incontinence in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

December 27, 2018

March 06, 2020

குடல் கட்டுப்பாடிழப்பு
குடல் கட்டுப்பாடிழப்பு

குடல் கட்டுப்பாடிழப்பு என்றால் என்ன?

குடல் கட்டுப்பாடிழப்பு என்பது மலம் அல்லது கழிவுகள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலை. இதனால், மலம் வெளியேற்றம் தானாக அல்லது தற்செயலாக நிகழ்கிறது. பொதுவாக முதியவர்களிடம், குறிப்பாக பெண்களில் காணப்படுகிறது. இது எப்போதாவது ஏற்படலாம் மற்றும் அதன் தீவிரத்தை பொறுத்து, மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது அவசியம். சங்கடம் வந்துவிடும் என்ற அச்சம் காரணமாக இந்த இக்கட்டான நடவடிக்கை சமூக வாழ்விலிருந்து நம்மை தனிமைப்படுத்தலாம்.

நோயுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இரண்டு வகையான குடல் கட்டுப்பாடிழப்பு உள்ளது, வகைகளை பொறுத்து அறிகுறிகள் வேறுபடும்.

 • அவசர மலக் கட்டுபாடிழப்பு:

மலம் கழிக்கவேண்டுமென்கிற அவசர உணர்வு இருக்கும் ஆனால் கழிவறைக்குச் செல்லும்வரை கட்டுப்படுத்த இயலாது.

 • குடல் மலக் கட்டுபாடிழப்பு:

இந்த வகையில் மலம் கழிப்பதற்கு முன் ஒரு அவசரமோ அல்லது மலம் கழியும் உணர்வோ இருக்காது.

வாயுக்கோளாறை கட்டுப்படுத்துவதில் சிரமம் மற்றும் மலத்தின் துளிகள் அல்லது கறைகள் ஆகியவை குடல் கட்டுப்பாடிழப்புடன் தொடர்புடைய பிற அறிகுறிகளாகும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

குடல் கட்டுப்பாடிழப்புக்கான பல்வேறு காரணங்கள்:

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

மருத்துவர் உங்கள் அறிகுறிகள் மற்றும் பிற மருத்துவ நிலைமைகளின் வரலாற்றை தெரிந்துகொண்டு, பின்னர் ஒரு உடல் பரிசோதனை செய்வார். நோயின் நிகழ்வு மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையில் மருத்துவர், ஆனோஸ்கோபி (மலவாயின் உள்ளே பார்க்க), அனோரெக்டல் மானோமெட்ரி (மலவாய் தசைகளில் உள்ள பலவீனங்களை அடையாளம் காண), ஆண்டோ ஆனல் அல்ட்ராசோனோகிராபி மற்றும் டெபோகோகிராஃபி (உறுப்புகளின் உருவங்களை உருவாக்கி, மலவாய், மலக்குடல் அல்லது அதன் தசைகளில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் காண).

சிகிச்சைகள்:

 • உணவு பழக்கங்களில் மாற்றம் செய்து நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
 • வாழ்க்கைமுறை மாற்றங்கள்.
 • தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி.
 • ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிப்பதை நீங்களே பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
 • தேவையான மருந்துகள்.
 • காரணம் மற்றும் தீவிரத்தை பொறுத்து அறுவை சிகிச்சை.மேற்கோள்கள்

 1. American Society of Colon and Rectal Surgeons [Internet] Columbus, Ohio; Fecal Incontinence.
 2. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Bowel incontinence
 3. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Symptoms & Causes of Fecal Incontinence
 4. American College of Obstetricians and Gynecologists. Women's Health Care Physicians [internet], Washington, DC; Accidental Bowel Leakage
 5. American College of Obstetricians and Gynecologists. Women's Health Care Physicians [internet], Washington, DC; Accidental Bowel Leakage

குடல் கட்டுப்பாடிழப்பு டாக்டர்கள்

Pallavi Tripathy Pallavi Tripathy General Physician
3 वर्षों का अनुभव
Dr Sarath Dr Sarath General Physician
6 वर्षों का अनुभव
Dr. Mukesh Prajapat Dr. Mukesh Prajapat General Physician
3 वर्षों का अनुभव
Dr. Hitesh Suthar Dr. Hitesh Suthar General Physician
2 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

குடல் கட்டுப்பாடிழப்பு க்கான மருந்துகள்

குடல் கட்டுப்பாடிழப்பு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।