புரூசெல்லா நோய் - Brucellosis in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

November 29, 2018

July 31, 2020

புரூசெல்லா நோய்
புரூசெல்லா நோய்

புரூசெல்லா நோய் என்றால் என்ன?

பாக்டீரியாக்களில் ஒரு குழுவின் பெயர்தான் புரூசெல்லா. அதன் காரணமாக இந்நோய்க்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அரிதான நோய் மற்றும் எந்த ஒரு சிக்கல்களும் இல்லாதவரை இதனால் உயிருக்கு ஆபத்து இல்லை.

புரூசெல்லா ஒரு தொற்று நோய் ஆகும் இது விலங்குகள் மற்றும் மனிதர்களை பாதிக்கிறது. அசுத்தமான உணவின் மூலம் இந்த பாக்டீரியா பரவுகிறது. இது காற்றின் வழியாக கூட பரவும் அல்லது திறந்த காயத்தின் மூலமாகவும் பரவுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

புரூசெல்லாவின் அறிகுறிகள் சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஒத்திருக்கின்றன. அவை பின்வருமாறு:

புரூசெல்லா நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

புரூசெல்லா பாக்டீரியா, பெரும்பாலும் இறைச்சியில் மற்றும் பதப்படுத்தப்படாத பாலில் காணப்படுகிறது, நோய் தாக்குதலுக்கு இதுவே காரணமாகும். பாக்டீரியாவை நுகர்தல், மாசற்ற உணவை உட்கொள்ளுதல் அல்லது நோயுற்ற விளங்கினாள் உண்டாகும் ஒரு திறந்த புண் ஆகியவை இந்த தொற்றிற்கான பொதுவான வழிகள். இந்த நோய் பொதுவாக காணப்படுவதில்லை என்றாலும், அது பாலியல் தொடர்பு மற்றும் தாய்ப்பால் மூலமாக பரவும். பண்ணையில் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மற்றும் விலங்குகளிடம் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் மக்கள் இந்த நோயால் அதிகமாக பாதிப்பு அடைகிறார்கள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

தொடர்ச்சியான காய்ச்சல் போன்ற நிலை அல்லது சிகிச்சைக்கு பலனளிக்காத நிலையில், புரூசெல்லா நோய்க்கான சோதனை செய்யப்படலாம். நோயை கண்டறிதல் சிறிது கடினமாக கூட இருக்கலாம் ஏனென்றால் சில நேரங்களில் உடலில் ஏதேனும் மாற்றங்கள் வெளிப்பட ஒரு மாதத்திற்கும் மேலாக எடுத்துக்கொள்ளலாம். நோய் கண்டறிதலில் அடங்குவது:

  • இரத்த பரிசோதனை.
  • சிறுநீர் பரிசோதனை.
  • தண்டுவட திரவ சோதனை.
  • எலும்பு மஜ்ஜை வளர்ப்பு சோதனை.

புரூசெல்லாவிற்கு மருந்து கொடுப்பது சிகிச்சையின் பிரதான அம்சமாகும். நுண்ணுயிர் எதிர்ப்பிகள், டாக்சிசைக்ளின் மற்றும் ரிஃபாம்பின் ஆகியவற்றின் கலவை பொதுவாக பரிந்துரைக்கபடுகிறது. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண சில வாரங்களுக்கு எடுக்கலாம், ஆனால் வாழ்க்கையில் இந்த நோய் மீண்டும் உண்டாகும் வாய்ப்புகள் பொதுவானது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். எனவே, விலங்குகளிடம் நெருக்கமாக இருப்பதை குறைப்பது, அவைகளை சுற்றி எச்சரிக்கையாக இருப்பது சமைக்கப்படாத இறைச்சியை தவிர்ப்பது மற்றும் மற்றும் பதப்படுத்தபடாத பால் பொருட்களை தவிர்ப்பது மிகவும் முக்கியமாகும்.

நோய் அதுவாக இருக்கையில் மரணம் விளைவிக்காது, ஆனால் தொடர்ந்து தோற்று ஏற்படுதல் ஆபத்தானது; அதுமட்டுமல்லாமல் மூளை ஆற்றும் அதனை சுற்றியுள்ள சவ்வுகளில் அழற்சியை உண்டாக்கலாம். இது இதயத்தின் உட்பூச்சின் தோற்று ஏற்படுத்தலாம் மற்றும் எலும்பு மற்றும் மூட்டுகளில் காயங்களை உண்டாக்கலாம்.



மேற்கோள்கள்

  1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Brucellosis
  2. Center for food security and public health. Brucellosis. Iowa State University of Science and Technology, United States. [internet].
  3. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Brucellosis (human)
  4. Department of Health. Brucellosis. New York State. [internet].
  5. Center for health protection. Brucellosis. Department of health: Government of Hong Kong special administration region. [internet].