எரியும் வாய் நோய்க்குறி - Burning Mouth Syndrome in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

November 29, 2018

March 06, 2020

எரியும் வாய் நோய்க்குறி
எரியும் வாய் நோய்க்குறி

எரியும் வாய் நோய்க்குறி என்றால் என்ன?

எரியும் வாய் நோய்க்குறி (பிஎம்எஸ்) அல்லது ஸ்கால்டட் வாய் நோய்க்குறி எனும் நிலை ஒருவரது நாக்கு, மேல்வாய் அன்னம் மற்றும் உதடுகளில் ஏற்படும் கடுமையான எரிச்சல் உணர்வே ஆகும்.

இது அரிதாக ஏற்படக்கூடிய நிலை மற்றும் இதன் அறிகுறிகளும் காரணங்களும் பெரும்பாலும் நோயாளிக்கு நோயாளி மாறுபடும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

எரியும் வாய் நோய்க்குறியின் முக்கிய அறிகுறிகளும்  தாக்கங்களும் பின்வருமாறு:

  • நாக்கில் ஏற்படும் சுடு புண் போன்ற உணர்வைத் தருவதுமான வலிமிகுந்த எரிச்சல்.
  • சூடான தேநீர், அல்லது அசிடிக் பானங்கள் போன்ற குறிப்பிட்ட பானங்களை பருகுவதனால் இதன் நிலை மேலும் மோசமடையக்கூடும்.
  • ஒருவர் உதடுகளிலோ அல்லது வாய் மூலையிலோ எரிச்சலை உணரலாம்.
  • சுவை உணர்வின் மாற்றத்தால் உணவு உட்கொள்வதில் கடினம்.
  • அரிதாக, நோயாளி வாயில் உணர்வின்மை இருப்பதாக முறையிடலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பிஎம்எஸ்-ன் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • முதன்மை பிஎம்எஸ் என்பது ஒரு குறிப்பிட்ட நிலையையோ அல்லது காரணத்தையோ சார்ந்தது இல்லை. இது பெரும்பாலும் தானாக தோன்றுகிறது அல்லது புலப்படாத காரணத்தினாலேயே ஏற்படுகிறது.
  • இரண்டாம்நிலை பிஎம்எஸ் என்பது ஒரு குறிப்பிட்ட காரணியாலோ அல்லது உள்ளார்ந்த நோயினாலோ  ஏற்படக்கூடியதாகும்.
    • வாய் தொற்றுகளான கேண்டைடா, அல்லது வாயில் ஏற்படும் புண்கள் போன்றவைகளும் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
    • உமிழ்நீர் உற்பத்தி குறைவாக இருக்கும் போது நாவறட்சி அல்லது வாய் வறண்டுவிடுதல் ஏற்படுகிறது. வாயின் வறட்சி கூட பிஎம்எஸ்க்கு வழிவகுக்கும்.
    • நீரிழிவு நோய் அல்லது தைராய்டு குறைபாடுகள் உள்ளவர்கள் பெரும்பாலும் நாக்கில் எரிச்சல் உள்ளதாக முறையிடுவார்கள். ஹார்மோனல் சமநிலையின்மையின் காரணமாக நாவறட்சி உருவாகி எரிவது போன்ற உணர்வுக்கு வழிவகுக்கிறது.
    • அமிலப் பின்னோட்ட நோய் அல்லது  இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (ஜிஇஆர்டி) போன்ற இரைப்பை சார்ந்த நிலைகளும் எரியும் வாய் நோய்க்குறிக்கு  காரணமாக இருக்கலாம்.
    • அக்ரிலிக்கால் ஆன செயற்கைப் பற்கள் கூர்மையான விளிம்புகளைக் கொண்டிருப்பதால், இது கன்னத்தின் உட்பூச்சு அல்லது வாயின் தரை பகுதியில் புண்களையோ அல்லது எரிச்சலையோ ஏற்படுத்தலாம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

  • நோயாளியின் அறிகுறிகள் மற்றும் உடலியல் பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்டு பிஎம்எஸைக் கண்டறிவது மிகவும் எளிது. எனினும், காரணத்தை தீர்மானிக்க சில சோதனைகளை மேற்கொள்ளவது அவசியம்.
    • நீரிழிவு நோய், தைராய்டு நோய்களுக்கான இரத்த சோதனைகளை மேற்கோள்தல்.
    • உமிழ்நீரின் அளவு மற்றும் தரத்தை ஆராய்வதற்கு உமிழ்நீர் பரிசோதனை உதவுகிறது.

பிஎம்எஸ் சிகிச்சை பின்வருபவற்றை உள்ளடக்கியது:

  • எந்த ஒரு அடிப்படைக் காரணத்துக்கும் தொடர்பில்லாத முதன்மை எரியும் வாய் நோய்க்குறி, எரிச்சல் உணர்வுக்கு நிவாரணம் அளிப்பது மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. இதற்கு, குறிப்பிட்ட சில உணவு பழக்கங்களை மாற்ற வேண்டியது அவசியம்: 
    • காரமான உணவு, அசிடிக் உணவு மற்றும் எரிச்சலூட்டும் உணவுகளை தவிர்க்க வேண்டும். புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் இதை மேலும் மோசமாக்கலாம், எனவே, அவற்றை தவிர்க்கவும்.
    • தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நன்கு-சமநிலையான உணவையே உண்ணுங்கள்.
  • இரண்டாம்நிலை எரியும் வாய் நோய்க்குறிக்கான சிகிச்சையானது, காரணியை கண்டறிவதை உள்ளடக்குகிறது.
    • அமிலப் பின்னோட்ட நோய் உணவு பழக்கங்களை மாற்றுவதன் மூலமும் அமிலநீக்கி மாத்திரைகள் மூலமும் கட்டுப்படுத்தப்படுகிறது.
    • ஹார்மோன் கோளாறுகள் இன்சுலின், மருந்துகள், மற்றும் உடற் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
    • நோய் தொற்றுக்கு பூஞ்சை மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயனுள்ளதாக இருக்கும்.
  • ஐஸ் சிப்ஸ்களை மெல்லுவது, குளிர்ச்சியான பானங்கள் குடிப்பது, அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் சோற்றுக்கற்றாழை சாறை தடவுவது போன்றவை இந்த நோயை வீட்டில்-கவனித்து குணப்படுத்தக்கூடிய குறிப்புகளாகும்.



மேற்கோள்கள்

  1. Zakrzewska J, Buchanan JA. Burning mouth syndrome. BMJ Clin Evid. 2016 Jan 7;2016. PMID: 26745781.
  2. Klasser GD, Grushka M, Su N. Burning mouth syndrome. Oral Maxillofac Surg Clin North Am. 2016 Aug;28(3):381-96. PMID: 27475513.
  3. National institute of dental and craniofacial research. Burning Mouth Syndrome. National institute of health. [internet].
  4. National institute of dental and craniofacial research. Burning Mouth Syndrome. National institute of health. [internet].
  5. Clinical Trials. The Efficacy of Melatonin in the Burning Mouth Syndrome (BMS). U.S. National Library of Medicine. [internet].

எரியும் வாய் நோய்க்குறி க்கான மருந்துகள்

Medicines listed below are available for எரியும் வாய் நோய்க்குறி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.