தீக்காயம் - Burns in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

November 29, 2018

March 06, 2020

தீக்காயம்
தீக்காயம்

தீக்காயம் என்றால் என்ன?

மிகப் பொதுவான காயங்களில் தீக்காயமும் ஒன்றாகும். ஒரு நபர் வீட்டிலிருக்கும்போதோ, சாலையில் இருக்கும்போதோ, பணியிலிருக்கும் போதோ- எங்கு வேண்டுமானாலும் தீக்காயங்களால் பாதிக்கப்படலாம். நம்மில் பெரும்பாலானோர் தீக்காயங்களை எரியும் புண்களின் விளைவாக ஏற்படும் உணர்ச்சியாகவே கருதுகிறோம், எனினும், தீக்காயங்களானது தோல் திசுக்களில் ஏற்பட்ட சேதத்தினால் பாதிக்கப்பட்ட செல்கள் இறந்து விடுவதைக் குறிக்கிறது.

தீக்காயங்களானது அவை ஏற்படுத்தும் சேதத்தின் அளவினை பொறுத்து வேறுபடுகிறது மற்றும் அவை: முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தரநிலை தீக்காயங்கள் என அதன் தீவிரநிலையின் முக்கியத்துவத்தை பொறுத்து வரையறுக்கப்படுகின்றன. நான்காவது தரநிலை தீக்காயம் என்பதில் தீக்காயத்தின் தாக்கம் தோலுக்கும் அப்பாற்சென்று சதை, எலும்பு மற்றும் தசை நாண்கள் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் தீக்காயங்களின் தரநிலையை பொறுத்து மாறுபடும்.

  • முதல் நிலை எரிகாயம்:
    • லேசான வீக்கம்.
    • செந்தடிப்பு.
    • கூர்மையான வலி.
    • அது குணமாகும் போது வறட்சி மற்றும் தோல் உரிதல் ஏற்படுகின்றது.
    • எரிந்த தோல் விழுந்தபின் வடு முற்றிலும் மறைந்துவிடுகிறது.
  • இரண்டாம் நிலை தீக்காயங்கள்:
    • இந்த நிலையில் தீக்காயமானது தோலின் முதல் அடுக்கையும் தாண்டி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
    • கடுமையான வேதனையளித்தல் மற்றும் சிவந்திருத்தல்.
    • தோல் மீது ஏற்படும் கொப்புளங்கள்.
    • ஈரப்பதமிக்க நீர் போன்ற திரவம் கொப்புளங்களில் இருக்கும், கொப்புளங்கள் வெடிக்கும்போது திரவம் கசியும்.
    • காயத்தின் மேல் தடித்த, மென்மையான திசு மேலோடாக உருவாகுதல்.
    • தீக்காயம் பட்ட இடத்தில் இருக்கும் நிறத்தில் மாற்றம்.
    • தோல் நிரந்தரமாக சேதமடைந்தால் ஒட்டுத்திசுவை கொண்டு செயற்கைமுறையில் அந்த தோலை மாற்றிவிட வேண்டும்.
  • மூன்றாம் நிலை தீக்காயங்கள்:
    • இந்த நிலையில் தீக்காயம் தோலின் அனைத்து அடுக்குகளின் வழியாகவும் செல்கிறது.
    • நரம்பு சேதம் மற்றும் உணர்வு இழப்புக்கு காரணமாக இருக்கிறது.
    • வெள்ளை நிறத்திலோ மற்றும் மெழுகு போன்றோ, கருகிய அல்லது பழுப்பு நிறத்திற்கு கூட தீக்காயங்கள் மாறலாம்.
    • தீக்காயம் பட்ட இடமானது தோல் போன்றும் உப்பியும் காணப்படும்.
    • பெரிய வடு மற்றும் சேதத்தை தவிர்க்க அறுவை சிகிச்சை தேவைபடலாம்.
    • முழுமையாக குணமடைய அதிக நாட்களையெடுத்துக் கொள்ளலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பல காரணிகளினால் தீக்காயங்கள் ஏற்படும். அவை பின்வருமாறு:

  • வேதியப்பொருள்கள் மற்றும் மின்சாரம்.
  • தீகதிர்கள் மற்றும் தீச்சுடர் /தீபிழம்புகள்.
  • சூடான நிலையில் இருக்கும் பொருட்கள்.
  • கொதிக்கும் சூடான திரவங்கள் அல்லது வெண்ணீர் ஆவியினால் ஏற்படும் காயம்.
  • அதிக நேரம் வெயிலில் இருப்பதால் ஏற்படும் சூரியனின் தாக்கம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

தீக்காயத்தின் அளவு மற்றும் தீவிரத்தை அறிவதற்காக முழுமையான பரிசோதனையே நோய் கண்டறிவதற்கான முதல் படியாகும். சேதத்தின் அளவு அதிகமாக இருந்தால் நோயாளிகள் பிரத்யேகமான கிளினிக்குகளுக்கோ அல்லது தீக்காயத்திற்கு சிகைச்சையளிக்கபடும் மையத்துக்கோ செல்லும்படி பரிந்துரைக்க படுகிறார்கள். எக்ஸ்ரே போன்ற சோதனைகள் மற்ற சாத்தியமான சேதங்களைத் அறிவதற்கு மேற்கொள்ளப்படலாம்.

சிகிச்சை என்பது தீக்காயத்தின் தர நிலையை சார்ந்தது. சில தீக்காயங்கள் வீட்டிலயேச் சரிசெய்ய கூடியது, அதேநேரத்தில் ஒரு  சிலருக்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம்.

  • முதல்-தர நிலை  தீக்காயங்கள்
    • காயம்பட்ட இடத்தை 10 நிமிடத்திற்கு குளிர்ந்த நீரில் நனைக்கவும்
    • வலி நிவாரணி உட்கொள்ளுதல்.
    • அந்த இடத்தில் வலிக்கு ஆறுதலளிக்கும் ஜெல் அல்லது சில்வர் நைட்ரேட் மேற்பூச்சு மருந்து போன்ற கிரீம்களை பயன்படுத்த வேண்டும்
    • நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் மென்மையான துணியினை கொண்டு காயம் பட்ட பகுதிகளை பாதுகாத்தல்.
  • இரண்டாம் தரநிலை தீக்காயங்கள்:
    • தீக்காயம்பட்ட இடத்தை சுத்தமாகவும் மூடியும் வைத்திருங்கள்.
    • சுமார் 15 நிமிடங்களுக்கு குளிர்ந்த ஓடுகின்ற நீரின் கீழ் தீக்காயம்பட்ட இடத்தை காட்டுதல்.
    • கொப்புளங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பி அடங்கிய க்ரீமினை பயன்படுத்துதல்.
    • பஞ்சு பயன்படுத்துவதையும் பாண்டேஜ் கொண்டு இறுக்கி கட்டுதலையும் தவிர்க்கவும்.
  • மூன்றாம் தரநிலை தீக்காயங்கள்:
    • அவசர மருத்துவ உதவியை நாடவும்.
    • வீட்டு மருந்து அல்லது சிகிச்சையை தவிர்த்தல்.
    • நரம்பின் வழியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் திரவங்களை செலுத்துதல்.
    • காயத்தை பிரத்யேகமாக சுத்தம் செய்து மேலும் மருந்து போடுதல்.
    • வலியிலிருந்து நிவாரணம் பெற மருந்துகள்.
    • வடு இருக்கும் பகுதிகளில் ஒட்டுதிசுக்களை கொண்டு சரிசெய்தல்.
    • தேவைப்பட்டால், மூச்சுத்திணறலுக்கான உதவியும் உணவு செலுத்துவதற்கான குழாய்களும் பயன்படுத்தலாம்.
    • தேவைப்பட்டால், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) செய்துகொள்ளலாம்.



மேற்கோள்கள்

  1. American Society for Surgery of the Hand. Burns. Chicago, USA. [internet].
  2. National Health Portal. Burns. Centre for Health Informatics; National Institute of Health and Family Welfare
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Burns
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Burns
  5. National Institute of General Medical Sciences. Burns. U.S. Department of Health and Human Services. [internet].

தீக்காயம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for தீக்காயம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.