கண்புரை - Cataract in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)

November 29, 2018

July 31, 2020

கண்புரை
கண்புரை

கண்புரை என்றால் என்ன?

நம் பார்வைக்கு முக்கியமான லென்ஸ்கள்/வில்லைகள் நம் அனைவருடைய கண்களிலும் உள்ளது. நாம் பயன்படுத்தும் மூக்கு கண்ணாடிகள் அல்லது கேமராவில் பயன்படுத்தும் லென்ஸைப் போல, நாம் பார்ப்பனவற்றின் தெளிவு  நம் கண்ணில் உள்ள லென்ஸின் தெளிவைப் பொறுத்தது ஆகும். கண் புரை என்பது கண் வில்லையில் (லென்ஸ்கள்) ஒளி ஊடுருவும் தன்மையைக் குறைக்கக்கூடிய மற்றும் தெளிவான பார்வையை தடுக்கக்கூடிய ஒரு நிலைமை ஆகும். இது பெரும்பாலும் முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய ஓர் நிலை ஆனாலும் இளம்வயதினரையும் இது பாதிக்கக் கூடும். பார்வை, தினசரி செயல்பாடு மற்றும் விவரங்களை பார்க்கும், படிக்கும் மற்றும் வண்டி ஓட்டும் திறன் ஆகியவற்றை கண்புரை பாதிக்கிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கண்புரையை ஆரம்பத்தில் உணர்வது சற்று கடினமாக இருக்கலாம்.  இது தீவிரமாகும் நிலை என்றாலும், நோயின் தாக்கங்கள் மெதுவாக இருப்பதால், நீங்கள் மாற்றங்களைக் கவனித்திருக்க மாட்டீர்கள். பெரும்பாலும்  பார்வையில் ஏற்படும் மாற்றங்கள் முதுமையை சார்ந்து இருக்கும். அறிகுறிகள் தென்படும் போது மட்டுமே அது கண்புரை என அடையாளம் காணப்படுகிறது. கண்புரையின் அறிகுறிகள் பின்வருமாறு:

  • மங்கலான அல்லது தெளிவற்ற பார்வை.
  • இரவு நேரங்களில் பார்ப்பதில் சிரமம்.
  • தெளிவாக பார்ப்பதற்கு பெரிய எழுத்துக்களாக இருத்தலும் கூடுதல் வெளிச்சமும் தேவைப்படுகிறது.
  • வண்ணங்கள் பிரகாசமற்று தெரிதல்.
  • சூரிய ஒளி அல்லது விளக்குகளை பார்க்கும் போது கண்களில் கூச்சம் ஏற்படுதல்.
  • இரட்டை பார்வை.
  • வெளிச்சமான/ஒளிரும் பொருட்களைச் சுற்றி ஒரு வளையம் அல்லது ஒளிவட்டம் தெரிதல்.
  • மருந்தின் முறை மற்றும் கண்கண்ணாடி எண்ணில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுதல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கண்புரை ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:

  • வயது அதிகரிப்பு.
  • லென்ஸை உருவாக்கும் திசுக்களில் மாற்றங்கள்.
  • மரபணு கோளாறுகள்.
  • நீரிழிவு நோய் போன்ற பிற உடல் நலப் பிரச்சினைகள்.
  • அறுவை சிகிச்சை, தொற்று போன்ற முந்தைய கண் பிரச்சினைகள்.
  • ஸ்டெராய்டுகளின் நீண்டகால பயன்பாடு.

இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

கண் பரிசோதனையும் மருத்துவம் சார்ந்த வரலாறும், இதற்கான முதன்மையான நோயறிதலாகும். இதனைத் தொடர்ந்து பின்வருவனவற்றை மேற்கொள்ள வேண்டும்:

  • ஒன்றை வாசிக்கும் போது, அதன் துல்லியத்தை சரிபார்க்க பார்வை சோதனை.
  • லென்ஸ், கருவிழி, கண்விழிப்படலம் மற்றும் அவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளிகளை சோதித்துப் பார்க்கும் ஸ்லிட் லேம்ப்/பிளவு விளக்கு பரிசோதனை.
  • கண்புரையை கண்டறிய விழித்திரை பரிசோதனை.

பரிந்துரைக்கப்பட்ட கண் கண்ணாடிகள் உதவாத போது, கண் புரையை சரி செய்ய மற்றும் பார்வை திறனை மேம்படுத்த அறுவை சிகிச்சையே சரியான வழியாகும். கண்புரைக்கான அறுவை சிகிச்சை என்பது நிரூபணம் செய்யப்பட்டது மற்றும் பாதுகாப்பானதாகும். இதனால் ஏற்படும் முன்னேற்றம் விரைவானதாகவும் தொந்தரவற்றதாகவும் இருக்கும். கண்புரையுடன் கூடிய லென்ஸ் ஒரு செயற்கை லென்ஸ் கொண்டு மாற்றப்படுகிறது. பின்னர் இது கண்ணின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. அறுவைசிகிச்சைக்கு பிறகு கண்ணாடியின் அவசியத்தை இந்த மாற்றப்பட்ட லென்ஸ்கள் அகற்றலாம். அறுவைசிகிச்சைக்கு பிறகு மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பதே இந்த நடைமுறையின் மிகவும் முக்கியமான பகுதியாகும்.



மேற்கோள்கள்

  1. American Optometric Association. Cataract. Lindbergh Boulevard,United States; [Internet]
  2. National Eye Institute. Facts About Cataract. U.S. National Institutes of Health[Internet]
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cataract
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Cataract
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Common Eye Disorders

கண்புரை க்கான மருந்துகள்

Medicines listed below are available for கண்புரை. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.