சென்ட்ரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி (காலத்திற்கு முந்தி பூப்படைதல்) - Central Precocious Puberty (CPP) in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 08, 2018

March 06, 2020

சென்ட்ரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி
சென்ட்ரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி

சென்ட்ரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி (சிபிபி) என்றால் என்ன?

சென்ட்ரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி (சிபிபி) என்பது குழந்தைகளிடம் மிக முன்னதாகவே பூப்படைவதற்கான அறிகுறிகள் தென்படும் குணாதிசயத்தை கொண்ட ஒரு நிலையாகும். எட்டு வயதிற்குமுன்னால் சிறுமிகளிடமும் 9 வயதிற்கு முன்னால் சிறுவர்களிடமும் பூப்படைவதற்கான அடையாளங்கள் தெரிந்தால் அவர்களுக்கு சிபிபி போன்ற உள்ளார்ந்த நிலைகளுக்கான சோதனைகள் செய்யப்பட வேண்டும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

சிபிபியின் தாக்கங்களும் அறிகுறிகளும் இயற்கையாக பூப்படைதலை போலவே இருக்கும். ஆனால் அவை மிகச்சிறிய வயதிலேயே தோன்ற ஆரம்பித்து விடும். சிறுமிகளிடம் காணப்படும் பூப்படைவதற்கான பொதுவான அறிகுறிகள்:

  • மார்பக வளர்ச்சி.
  • முதல் மாதவிடாய் சுழற்சி.

சிறுவர்களிடம் காணப்படும் பூப்படைவதற்கான பொதுவான அறிகுறிகள்:

  • வித்தகம் மற்றும் ஆண்குறி வளர்ச்சி.
  • சதை வளர்ச்சி.
  • ஆழ்ந்த குரல் மாற்றம்.
  • திடீர் வளர்ச்சி.
  • முகத்தில் முடி வளர்த்தல்.

சிறுமிகள் மற்றும் சிறுவர்களிடம் காணப்படும் பூப்படைவதற்கான பொதுவான அறிகுறிகள்:

  • முகப்பரு.
  • அந்தரங்க முடி மற்றும் உடலில் வளரும் முடி.
  • திடீர் வளர்ச்சி.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

சிபிபிக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் சில அரிதான காரணங்கள் சிபிபிக்கு வழிவகுக்கக்கூடும். அவை:

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

நீங்கள் உங்கள் குழந்தையிடம் மிக இளம் வயதிலேயே பூப்படைவதற்கான அறிகுறிகளை கவனித்தீர்கள் என்றால் ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். ஒரு உடல் பரிசோதனையை மேற்கொண்டபிறகு இந்த நிலையையும் அதன் காரணத்தையும் உறுதிப்படுத்துவதற்காக கீழ்காணும் சோதனைகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்:

  • உடலிலுள்ள ஹார்மோன் அளவுகளை தீர்மானிப்பதற்கு சிறுநீர் மற்றும் ரத்த சோதனை. அதிக அளவிலான ஹார்மோன்கள் பூப்படைதல் தொடங்கிவிட்டதை குறிக்கிறது. இது ஒரு மைய முந்தி பூப்படைதலா அல்லது புற முந்தி பூப்படைதலா என்பதை கணிப்பதிலும் இந்த ஹார்மோன்களின் அளவு மருத்துவருக்கு உதவி செய்கிறது.
  • மூளையில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிவதற்கு காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ) மற்றும் சி.டி ஸ்கேன் பயன்படுத்தபடுகிறது. குழந்தையின் எலும்பு வளர்ச்சி இயல்பானதாக உள்ளதா என்பதை தீர்மானிக்க எக்ஸ்-ரே தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.சிபிபியின் காரணத்தை அறிவதற்காக எம்.ஆர்.ஐ,சி.டி ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.
  • எலும்பின் வயதை தீர்மானிப்பதற்காக டி.ஈ.எக்ஸ்.ஏ ஸ்கேன் மற்றும் இடுப்பின் கேளா ஒலிவரைவி/அல்ட்ராசோனோகிராபி போன்றவை சிறுமிகளிடம் சிபிபி உள்ளதா என்பதை உறுதிபடுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த நிலையின் துவக்கம் எந்த வயதில் ஏற்படுகிறது என்பதை பொறுத்து இதன் சிகிச்சை அமைகிறது. இந்த நிலையின் துவக்கம் இயல்பாக பூப்படையும் வயதுக்கு அருகில் இருந்தால் எந்த சிகிச்சையும் அவசியமில்லை. ஆனால் மிக இளம் வயதிலேயே இது தொடங்கிவிட்டால் இதன் சிகிச்சை பின்வருமாறு:

  • கோனாடோட்ரோபினை வெளிப்படுத்தும் ஹார்மோனல் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்தி இரண்டாம்நிலை பாலின பண்புகளின் வளர்ச்சியை தடை செய்தல்.
  • சிறுமிகளின் மாதவிடாயை நிறுத்துவதற்கான மருந்துகளை அளித்தல். 
  • இந்த நிலைக்கான காரணத்திற்கு சிகிச்சை அளித்தல்.



மேற்கோள்கள்

  1. American Academy of Family Physicians. Central Precocious Puberty. [Internet]
  2. Antoniazzi F, Zamboni G. Central precocious puberty: current treatment options.. Paediatr Drugs. 2004;6(4):211-31. PMID: 15339200
  3. Melinda Chen et al. Central Precocious Puberty: Update on Diagnosis and Treatment. Paediatr Drugs. Author manuscript; available in PMC 2018 Mar 27. PMID: 25911294
  4. National Institutes of Health; [Internet]. U.S. National Library of Medicine. Study of Lupron Depot In The Treatment of Central Precocious Puberty
  5. National Organization for Rare Disorders. Precocious Puberty. [Internet]