கரோனரி ஆர்டரி டிசிஸ் (இதயத் தமனி நோய்) - Coronary Artery Disease (CAD) in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

November 30, 2018

March 06, 2020

கரோனரி ஆர்டரி டிசிஸ்
கரோனரி ஆர்டரி டிசிஸ்

கரோனரி ஆர்டரி டிசிஸ்(இதயத் தமனி நோய்) என்றால் என்ன?

கரோனரி இதய நோய் என்பது இதயத்திற்கு ஆக்ஸிஜன் மற்றும் இரத்தத்தை வழங்கும் இரத்தக் நாளங்கள் குறுகிய நிலையில் இருப்பதைப் பண்பிடக்கூடியது. இந்த நிலை கரோனரி தமனி நோய் என்றும் அறியப்படுகிறது மற்றும் இது இருதய நோயின் மிகவும் பொதுவான வடிவமாகும்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

கரோனரி இதய நோயின் அறிகுறிகள் சில நபர்களில் மிகவும் வெளிப்படையாக தோன்றாமல் இருக்கலாம். இதன் அறிகுறிகள் பெரும்பாலும் நோயின் ஆரம்ப கட்டங்களிலேயே ஏற்படுகின்றது.

கரோனரி இதய நோயின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

இதயம் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கு செல்லும் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கக்கூடிய இரத்தக் நாளங்களின் சுவர்களில் ஏற்படும் பிளேக்கின் உருவாக்கம் மற்றும் அதன் சேர்மானங்களே கரோனரி இதய நோயின் முக்கிய காரணம் ஆகும். பிளேக் என்பது வேறோன்றுமில்லை கொழுப்பு பொருட்களின் சேர்மானங்கள் இரத்த நாளங்களை குறுகச்செய்தலும் மற்றும் அதனை கடினமாக்குதலுமே ஆகும். இவ்வாறு இது இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களை பாதிப்பதால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைய ஆரம்பிப்பதோடு மார்பு வலி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் விளையவும் இதுவே காரணமாகலாம்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

கரோனரி இதய நோயைக் கண்டறிய, மருத்துவர் பின்வரும் சோதனைகளை மேற்கொள்ளலாம்:

  • இதயம் மற்றும் நுரையீரலை மதிப்பீடு செய்ய மார்பு எக்ஸ்-கதிர்கள்.
  • உடற்பயிற்சியின் போது இதய துடிப்பு மற்றும் செயல்பாட்டை அளவிட உடற்பயிற்சி அழுத்த சோதனை.
  • அல்ட்ராசவுண்ட் பயன்படுத்தி இதயத்தின் காட்சியை பெற எக்கோகார்டியோகிராம
  • இதயத்தின் செயல்திறனை தீர்மானிக்க கார்டியாக் வடிகுழாய
  • கரோனரி தமனிகளில் உள்ள தடுப்புகளை கண்காணிக்க கரோனரி ஆஞ்சியோகிராம

இதயத் தமனி நோயின் ஆபத்தினைக் குறைப்பதில் உதவக்கூடிய சில காரணிகள் பின்வருமாறு:

  • குறைந்த கொழுப்புடன் கூடிய சமச்சீரான உணவு பழக்கம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை பழக்கம், புகைபிடித்தலை நிறுத்துதல் மற்றும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை செய்துகொள்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் இதய நோயின் ஆபத்தை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
  • ஏற்கனவே அதிக ஆபத்தில் உள்ளவர்கள் அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற இதய துடிப்பு போன்ற ஆபத்து காரணிகளைக் குறைப்பதற்காக மருந்துகளை பயன்படுத்தலாம்.
  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை பின்பற்றுவதோடு மருந்துகளின் பயன்பாடுகளை கொண்டு அறிகுறிகளை கையாளுவதை உட்கொண்டதே கரோனரி இதய நோய்க்கான சிகிச்சை முறையாகும்.

இதய நோய்க்கான சிகிச்சையானது மருந்துகளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை  பின்பற்றுவதன் மூலம் அறிகுறிகளை குணமாக்க உதவுகிறது.

கரோனரி இதய நோய்க்கு சிகிச்சையளிக்க சில செயல்முறைகள் அல்லது அறுவை சிகிச்சைகள் செய்யப்படலாம்:

  • ஆன்ஜியோபிளாஸ்டி (ஸ்டென்ட் வைத்தல்).
  • கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை.
  • குறைந்தபட்சமாக ஊடுருவும் இதய அறுவை சிகிச்சை.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Coronary heart disease
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Coronary Artery Disease (CAD)
  3. Healthdirect Australia. Coronary heart disease and atherosclerosis. Australian government: Department of Health
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Heart Disease Facts
  5. National Health Portal. Coronary Heart Disease. Centre for Health Informatics; National Institute of Health and Family Welfare

கரோனரி ஆர்டரி டிசிஸ் (இதயத் தமனி நோய்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for கரோனரி ஆர்டரி டிசிஸ் (இதயத் தமனி நோய்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.