சயனைடு விஷம் - Cyanide Poisoning in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 30, 2018

March 06, 2020

சயனைடு விஷம்
சயனைடு விஷம்

சயனைடு விஷம் என்றால் என்ன?

ஒருவர் சயனைடுடன் தொடர்புக் கொள்ள நேரிடும்போது, வேகமாக-செயல்படும் நச்சு இரசாயனத்தின் காரணத்தால் சயனைடு விஷம் ஏற்படுகின்றது. சயனைடின் வாயு வடிவமானது ஹைட்ரஜன் சயனைடு எனவும், அதேசமயம் அதன் உப்பு வடிவமானது பொட்டாசியம் சயனைடு எனவும் அறியப்படுகிறது. லிம பீன்ஸ், பாதாம், மரவள்ளிக்கிழங்கு செடி போன்ற சில இயற்கை பொருட்கள், தொழிற்சாலை பொருட்களான பூச்சிக்கொல்லிகள், புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் திரவங்கள் மற்றும் நகைகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் திரவங்கள் ஆகியவை சயனைடின் சில மூல ஆதாரங்களுள் அடங்கியவை. இந்தியாவில் சயனைடு விஷம் பற்றிய புள்ளிவிவரங்கள் இன்னும் தெரியாத ஒன்றாகவே இருக்கிறது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

இரசாயனத்தை உட்கொண்டாலோ அல்லது சுவாசிக்கப்பட்டாலோ, இரத்த செறிவு தோராயமாக 40 மோல்/லி ஆகும்போது சயனைடு விஷத்தின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் தோன்ற ஆரம்பிக்கும். வழக்கமாக இதன் அறிகுறிகளின் ஆரம்பம் விரைவாக இருக்கும் மற்றும் வாயு வடிவத்தில் இருக்கும் சயனைடை சுவாசிக்க நேரிட்டாலோ  சில வினாடிகளுக்குள் அல்லது சயனைடு உப்பு வடிவத்தில் உட்கொண்டாலோ சில நிமிடங்களுக்குள் மரணத்தை விளைவிக்கும். சயனைடு முக்கியமாக மைய நரம்பு மண்டலம் மற்றும் இருதய அமைப்பை போன்றவைகளையே குறிவைக்கிறது. சுவாசித்தன் மூலம், தோலால் உறிஞ்சப்படுவதன் மூலம் அல்லது சயனைடு-கொண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இது உடலில் நுழைகிறது. சயனைடு விஷம் ஆரம்பத்தில் கீழ்கொடுக்கப்பட்ட ஏதேனும் சில அறிகுறிகளைக் காட்டலாம்:

ஏதேனும் ஒரு வழியில் அதிக அளவுகளை உட்கொள்ளும்போது, ​​பின்வரும் அறிகுறிகள் காணப்படுகின்றன:

சயனைடு விஷத்தை உட்கொண்டு தப்பிப்பிழைத்தவர்களுக்கு நரம்பியல் மனநல அறிகுறிகள் மற்றும் பார்வை செயல்நலிவு/இழப்புகளை வெளிப்படுத்தலாம்.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

சயனைடு விஷத்தன்மையால், உடல் உயிரணுக்களால் ஆக்ஸிஜனைப் பயன்படுத்த முடியாது, எனவே இது மரணத்திற்கு வித்திடுகிறது. சிறிய அளவுகளில், சயனைடு தியோசைனேட் வடிவில் மாற்றப்படுகிறது. பெரிய அளவு டோஸ்களை, உட்கொள்ளும்போது இது வலிமைபெற்று உயிரணு இறப்புக்கு வழிவகுக்கிறது. இது முக்கியமான உடல் பகுதிகளை செயலிழக்க செய்து இறப்புக்கு வித்திடுகிறது. இதன் நச்சுத் தன்மை 100-200 மிகி அளவில் உள்ளது.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

சில ஆய்வக சோதனைகள் உதவக்கூடியதாக இருப்பினும், இதன் நோய் கண்டறிதல் என்பது முற்றிலும் மருத்துவ விசாரணையை சார்ந்தே உள்ளது. ஆய்வக சோதனைகள் மூலம் சயனைடு விஷத்தினால் விளையும் பின்வரும் உயிரியல் இயல்புகளை கண்டறிய முடியும்:

  • வளர்சிதை அசிடோசிஸ்.
  • லாக்டிக் அமில அளவுகள் அதிகரிப்பது.
  • 90% க்கும் அதிகமான குருதி நாளங்களை சார்ந்த ஆக்ஸிஜனின் செறிவு.

நிகழ்த்தப்படும் சோதனைகள் பின்வருமாறு:

  • முழுமையான இரத்த எண்ணிக்கை.
  • இரத்த குளுக்கோஸ் அளவீடு.
  • பையோகெமிக்கல் சோதனைகள்.
  • ஈசிஜி கண்காணிப்பு.

பின்னர் மிக அரிதாக நிகழும் வலிப்புகளின் காரணத்தினால் இது கார்பன் மோனாக்ஸைடு விஷத்திலிருந்து வேறுபடுத்தக்கூடியது.

சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

  • தூய்மையாக்குதல்:
  • நச்சுமுறிவுப்பொருள் கிட்: இது சயனைடு வளர்சிதைமாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய மூன்று கூறுகளின் கலவையினை கொண்டிருக்கிறது.
  • ஹைட்ராக்ஸோகோபாலமின்: இது சயனைடுடன் பிணைந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது.

சுய-பாதுகாப்பு குறிப்புகள்:

  • சயனைடு வரியிழை கொண்ட ஏதேனும் ஆடைகள் இருந்தால் அதனை அகற்றவும்.
  • நிறைய தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கண்களை கழுவுங்கள் மற்றும் உங்கள் அளவு  தண்ணீரை விசிறியடித்து நன்கு கழுவுங்கள்.
  • ஒருவேளை சயனைடு உட்கொள்ளப்பட்டால், மரக்கரியினை கண்களில் அதிக பயன்படுத்தி அதன் உறிஞ்சுதல் தன்மையை தடுக்கலாம்.
  • சயனைடு அகற்றுவதற்காக ப்ளீச்(வெளுப்பி) பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
  • உடனடி மருத்துவ உதவியை நாடுதல்.

தடுப்பு குறிப்புகள்:

  • சயனைடு விஷத்தை பற்றிய கல்வியினை தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும், அதாவது சயனைடின் வெவ்வேறு வடிவத்தின் பயன்பாடுகளைப் பற்றி  தெரியப்படுத்த வேண்டும் இது தேவையில்லாத சூழ்நிலைகளை தவிர்க்க உதவும்.
  • தொழில்சார் ஆபத்துக்கள் பொதுவானவை, மற்றும் சயனைடு-கொண்ட பொருட்கள் கையாளப்படுவதற்கு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தலும் மற்றும் அதை பற்றிய விவரங்களை முன்பே அவர்களிடம் தெரியப்படுத்துதல் வேண்டும்.
  • சயனைடு விஷம் மற்றும் அதை தொடர்ந்து கவனிப்பதற்கான தகவல்களை தெரிந்துகொள்ள நோயாளிகளின் கையில் அதற்கான கையேடுகள் கிடைக்குமாறு செய்தல் வேண்டும்.

மற்ற விஷத்தன்மை போல் இல்லாமல், சயனைடு விஷம் மிகவும் ஆபத்தானது மற்றும் சரியான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் விரைவாக மரணத்திற்கு வழிவகுக்கூடியது. எதிர்மறையான பலன்களைத் தவிர்ப்பதற்கு, முன்னரே விளைவுகளை பற்றி நன்கு அறிந்து கொள்வது சிறந்தது.



மேற்கோள்கள்

  1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Facts About Cyanide
  2. Durga Jethava. et al. Indian J Anaesth. Acute cyanide Intoxication: A rare case of survival. 2014 May-Jun; 58(3): 312–314. PMID: 25024476
  3. Graham J, Traylor J. Cyanide Toxicity. [Updated 2018 Nov 18]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Toxic Substances Portal - Cyanide
  5. Baskin SI, Brewer TG. [Internet]. Johns Hopkins Center for Health Security. Baltimore, United States; Cyanide.