டெங்கு - Dengue Fever in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

February 07, 2019

September 11, 2020

டெங்கு
டெங்கு

சுருக்கம்

டெங்கு என்பது, கொசுக்களால் பரவுகிற ஒரு வகை வைரஸ் நோய் தொற்றாகும். இந்த நோயை ஏற்படுத்துகிற நான்கு விதமான வைரஸ்கள் இருக்கின்றன, மற்றும், இவற்றில் எ தன் மூலமாக வேண்டுமானாலும் டெங்கு ஏற்படக் கூடும். ஒருமுறை, ஏதேனும் ஒரு வகை டெங்கு வைரஸால், ஒரு நபர் நோய் தொற்றுக்கு உள்ளான பிறகு, மற்ற வகைகளுக்கு ஒரு குறுகிய-கால (கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்), அல்லது பகுதி எதிர்ப்புடன், அந்தக் குறிப்பிட்ட வகைக்கு ஒரு வாழ்நாள் நோய் எதிர்ப்பு உருவாகிறது ஆனால், இறுதியாக, இந்த நான்கு வகைகளும் ஒரு நபரைப் பாதிக்கலாம். நோய் தொற்று பரவலின் பொழுது, டெங்கு வைரஸின் ஏதேனும் அல்லது நான்கு வகைகளும் சுழற்சியில் இருக்கக் கூடும்.

டெங்கு வைரஸ், பெண் ஏடிஸ் எஜிப்டி கொசு மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்குப் பரப்பப்படுகிறது. இந்தக் கொசு, ஒரு நோய் தொற்றுள்ள நபரிடம் இருந்து, இரத்தத்தைக் குடிக்கும் பொழுது தனக்கு வைரஸைப் பெற்றுக் கொள்கிறது. டெங்குவின் அறிகுறிகளில், திடீரென்று அதிக-அளவு காய்ச்சல் தோன்றுவது, கடுமையான தலைவலி, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, மூட்டு வலி, அதீத களைப்பு,  உடல் வலி, பசியின்மை மற்றும் உடல் அரிப்பு ஆகியவை அடங்கும். காய்ச்சல் மற்றும் மற்ற அறிகுறிகள் வழக்கமாக, ஒரு வார அளவிற்கு நீடிக்கும் பொழுது, அதனுடன் இணைந்த பலவீனம் மற்றும் பசியின்மை பல வாரங்களுக்கு நீடிக்கலாம்.

தற்சமயம் டெங்கு காய்ச்சலுக்கு, தனிப்பட்ட வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை இல்லை. காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள், திரவ மாற்று மற்றும் படுக்கையில் ஓய்வு போன்ற உதவுகின்ற கவனிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சிக்கல்கள், சிகிச்சையளிக்காமல் விட்டால், டெங்கு அதிர்ச்சி நோயாக வளரக் கூடிய, இரத்தப்போக்கு டெங்கு காய்ச்சலை உள்ளடக்கியவையாகும்.

டெங்கு அறிகுறிகள் என்ன - Symptoms of Dengue in Tamil

ஒரு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், வழக்கமாக, நோய் பரவியுள்ள பிரதேசத்துக்கு சமீபத்தில் சென்று வந்த அல்லது அங்கே வசிக்கும் ஒருவர் அவரைப் பார்க்க வந்த வரலாறைக் கொண்டிருக்கிறார். டெங்கு, பின்வரும் குறிகள் மற்றும் அறிகுறிகளோடு இணைந்திருக்கின்றன:

 • திடீரென்று ஏற்படும் ஒரு அதிக காய்ச்சல் (40°செல்சியஸ்/ 104° ஃபாரன்ஹீட்), மற்றும் வெப்பநிலை நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் ஒரு இடைவெளியோடு, அதன் பிறகு மறுபடி பொங்கி எழுந்து அதிகரிக்கிற, ஒரு தொடர்ச்சியான அல்லது சென்று-திரும்பும் வடிவத்தில் இருக்கிறது. இந்தக் காய்ச்சல், வழக்கமாக ஏழு முதல் எட்டு நாட்களுக்கு நீடிக்கிறது.
 • ஒரு தீவிரமான தலைவலி.
 • குமட்டல் மற்றும் வாந்தி.
 • மூட்டுகள், தசைகள் மற்றும் கண்களின் பின்புற த்தில் வலி.
 • பலவீனம்.
 • ஒரு மாறுபட்ட சுவை உணர்வு மற்றும் குறைந்த பசியுணர்வு (பசியிழப்பு).
 • தொண்டை புண்.
 • சுரப்பிகள் மற்றும் நிணநீர் முடிச்சுகளில் வீக்கம்.
 • அரிப்புகள், முதல் சில நாட்களில் ஒரு மந்தமான தசை அரிப்பு தோன்றுவதுடன், தோலின் ஆரம்பகட்ட சிவந்து போதலை உள்ளடக்கியவை. அழுத்தும் பொழுது வெளிறிப் போகிற, சிறிய இணைந்த புடைப்புகளால் மூடப்பட்ட,  தட்டையான சிவந்த அரிப்புகள், மூன்றாம் நாளிலிருந்து ஐந்தாம் நாளுக்குள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அவை வழக்கமாக உடல் பகுதியில் தோன்றுகின்றன, அங்கிருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவுகின்றன. உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும் மட்டுமே தப்பிக்கின்றன. ஒரு அரிப்பு தோன்றுவது, வழக்கமாக உடல் வெப்பநிலை குறைதலோடு இணைந்திருக்கிறது. இந்த அரிப்பு, செதிள்களாக அல்லது இரத்தப் புள்ளிகள் என அழைக்கப்படும் சிறிய சிவந்த புள்ளிகளை (இரத்தக் கசிவின் பொழுது) ஏற்படுத்துவதோடு வருகிறது.
 • மிதமான இரத்தக் கசிவு அறிகுறிகளானவை, ஈறுகளில் இரத்தக் கசிவு, மூக்கில் இரத்தக் கசிவு, மாதவிடாயின் போது அசாதாரணமான அதிக இரத்தப் போக்கு, சிறுநீரில் இரத்தம் தோன்றுவது போன்றவற்றை உள்ளடக்கியதாகும். 

நோய் தொற்றுள்ள ஒரு கொசு, வைரஸை ஒரு நபருக்குப் பரப்பிய பிறகு, அறிகுறிகள், இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு, ஒரு அடைகாத்தல் காலத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு முதல் பத்து நாட்களுக்கு நிலவுகின்றன.

கடுமையான டெங்கு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகையால், ஒரு மிகவும் தீவிரமான சிக்கலாகும். இது, முதல் அறிகுறிகள் தோன்றிய பிறகு, மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் தோன்றுகிறது. உடல் வெப்பநிலையில் ஒரு குறைவு (38°செல்சியஸ்ஸை விடக் குறைவாக) ஏற்படுவதோடு, கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகளில் அடங்கியவை:

 • தொடர்ச்சியான வாந்தி.
 • இரத்தம் கலந்த வாந்தி.
 • வேகமான மூச்சு அல்லது மூச்சு விடுவதில் சிரமம் (சுவாசம் சம்பந்தமான கஷ்டம்).
 • ஈறுகளில் இரத்தம்.
 • கடுமையான வயிற்று வலி.
 • சோர்வு.
 • அமைதியின்மை.
 • டெங்கு அதிர்ச்சி நோய்
  இது, டெங்கு காய்ச்சலின் ஒரு தீவிரமான சிக்கலாகும். இது, ஏற்கனவே ஒரு டெங்கு வைரஸால் நொய் தோற்று ஏற்பட்டிருக்கும் ஒரு நபர், வேறு ஒரு டெங்கு வைரஸ் மூலம் இன்னொரு நோய் தொற்றுக்கு ஆளாவதன் விளைவாக ஏற்படுகிறது. பல-உறுப்பு செயலிழப்புடன் கூடிய, டெங்கு அதிர்ச்சி நோயின் வளர்ச்சி, மரணத்தை உறுதி செய்கிறது.

நோயிலிருந்து மீண்டு வரும் காலம், நீண்ட நாட்களுக்கு நீடிக்கிறது, இரண்டு வாரங்கள் வரை தேவைப்படலாம். அறிகுறிகள் குறைந்திருக்கிற பிறகும் கூட, அந்த நபர் நீண்ட நாட்களுக்கு சோர்வாகவும், சக்தியில்லாமலும் உணரக் கூடும். 

டெங்கு சிகிச்சை - Treatment of Dengue in Tamil

இன்றைய தேதி வரை, டெங்குகாய்ச்சலுக்கு தனிப்பட்ட வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை கண்டறியப்படவில்லை. இந்த நோய், வழக்கமாக தானே-கட்டுப்படக்கூடியது. அதாவது, இது, ஒரு காலகட்டத்திற்கு மேல் தானே சரியாகக் கூடியது. இருந்தாலும், அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், தீவிரத்தைக் குறைக்கவும், சுய-கவனிப்பும் வாழ்க்கைமுறை மாற்றங்களும் தேவைப்படுகின்றன.

டெங்கு வைரஸ் பரவியிருக்கும் ஒரு பகுதியிலிருந்து, நீங்கள் திரும்பிய இரண்டு வாரங்களுக்குள், ஒரு காய்ச்சல் அல்லது ஃப்ளு போன்ற அறிகுறிகள் உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் ஒரு மருத்துவரை கண்டிப்பாகத் தொடர்பு கொள்ள வேண்டும். கூடவே, நீங்கள் டெங்கு வழக்கமாக இருக்கிற ஒரு பகுதியில் வசித்தால், ஒருவேளை உங்களுக்கு இவை போன்ற அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரிடம் செல்லுங்கள்.

போதுமான நீர்ச்சத்து மற்றும் படுக்கையில் ஓய்வுடன், காய்ச்சலைக் குறைக்க மருந்துகளுடன் ஆதரவான கவனிப்பும் பரிந்துரைக்கப்படுகிறது. காய்ச்சலைப் போக்க ஆக்ட்டோமினோஃபென் பயன்படுத்தப்படலாம். டெங்குவிற்கு, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், வலி நிவாரணிகள் (ஆஸ்பிரின் போன்றவை) மற்றும் கார்டிகோஸ்டெராய்டுகளைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடல் அரிப்புகளின் நிவாரணத்துக்கு, நீங்கள் காலமைன் களிம்புகளைத் தடவலாம். வெளிநோயாளிப் பிரிவிலேயே முன்னேற்றம் காணப்படும் நபர்களுக்கு.

இவை இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அறிவுறுத்தப்படுகிறது:            

 • தொடர்ச்சியான வாந்தி.
 • வாந்தியில் இரத்தம்.
 • நீர் வற்றிப்போதல் அறிகுறிகள்.
 • வேகமான மூச்சு விடுதல் (சுவாசம் சம்பந்தமான கஷ்டம்).
 • ஈறுகளில் இருந்து இரத்தக் கசிவு.
 • வயிற்றில் கடுமையான வலி.
 • கடுமையான சோர்வு மற்றும் அமைதியின்மை.

வாழ்க்கைமுறை மேலாண்மை

டெங்கு காய்ச்சல் உள்ள நபர்கள், விரைவில் குணமடைய, தங்கள் வாழ்க்கைமுறையில் சில மறுதல்களைக் செய்ய வேண்டியிருக்கலாம். அவை:

 • அந்த நபர் திரவபானங்களை வாய்வழியாக எடுத்துக் கொள்ள முடிந்தால், ஓ.ஸ்.ஆர் (வாய்வழி மறுநீர்ச்சத்து கரைசல்) குடிப்பது.
 • பழச்சாறுகள் குடிப்பது.
 • போதுமான அளவு ஓய்வெடுப்பது.
 • சோர்வையும், பலவீனத்தையும் மோசமாக்கக் கூடிய உடலியல் செயல்பாடுகளைத் தவிர்ப்பது. 
 • மற்ற வகை டெங்கு வைரஸ்களால், இரண்டாம் நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்க, பூச்சிக்கொல்லி-ஏற்றிய கொசு வலைகளைப் பயன்படுத்துவது.
 • கொசு விரட்டிகளையும் பூச்சிக்கொல்லிகளையும் வீட்டிற்கு உள்ளேயும், அதே போல் வெளியிடங்களிலும் பயன்படுத்துவது.


மேற்கோள்கள்

 1. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Dengue control.
 2. Center for Disease Control and Prevention [Internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Dengue and Dengue Hemorrhagic Fever .
 3. Malavige GN, Fernando S, Fernando DJ, Seneviratne SL. Dengue viral infections. Postgrad Med J. 2004 Oct;80(948):588-601. PMID: 15466994
 4. Stephenson JR. Understanding dengue pathogenesis: implications for vaccine design. Bull World Health Organ. 2005 Apr;83(4):308-14. Epub 2005 Apr 25. PMID: 15868023.
 5. Brian Walker Nicki R Colledge Stuart Ralston Ian Penman. Davidson's Principles and Practice of Medicine E-Book. 22nd Edition Churchill Livingstone; Elsevier: 1st February 2014. page 322.
 6. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Dengue and severe dengue.
 7. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Control strategies.
 8. Hang VT, Nguyet NM, Trung DT, Tricou V, Yoksan S, Dung NM, Van Ngoc T, Hien TT, Farrar J, Wills B, Simmons CP. [Link]. PLoS Negl Trop Dis. 2009;3(1):e360. doi: 10.1371/journal.pntd.0000360. Epub 2009 Jan 20. PMID: 19156192.

டெங்கு டாக்டர்கள்

Dr Rahul Gam Dr Rahul Gam Infectious Disease
8 वर्षों का अनुभव
Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 वर्षों का अनुभव
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 वर्षों का अनुभव
Dr. Lalit Shishara Dr. Lalit Shishara Infectious Disease
8 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

டெங்கு க்கான மருந்துகள்

டெங்கு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।