துவாரங்கள் (பல் சொத்தை) - Cavities (Dental Caries) in Tamil

Dr Razi AhsanBDS,MDS

December 01, 2018

March 06, 2020

துவாரங்கள்
துவாரங்கள்

பல் துவாரங்கள் (பல் சொத்தை) என்றால் என்ன?

பல் துவாரங்கள் அல்லது பல் சொத்தை என்பது பல்லில் கனிமநீக்கல் மற்றும் கனிமமாக்கலின் மாற்றம் நிகழும் போது பல் கட்டமைப்பில் உருவாகும் ஒரு துவாரமே ஆகும். பல் சொத்தை என்பது பற்களின் உயிர்திரையின்-உந்துதலினால் உண்டாகும் சர்க்கரை-சார்ந்த நோய், மேலும் இது எந்த வயதிலும் ஏற்படக்கூடியது.

பற்சிதைவு பால் பற்கள் (முதன்மையாக ஏற்படும் பல்) மற்றும் நிரந்திர பற்கள் (இரண்டாம் நிலையில் ஏற்படும் பல்) ஆகிய இரண்டிலும் ஏற்படக்கூடியது, இது பற்களின் கட்டமைப்பில் சேதத்தை விளைவிக்கிறது.

உலக மக்கள் தொகையில் 32% மக்கள் பல் சொத்தையினால் பாதிக்கப்பட்டிருக்கும் காரணதினாலேயே இந்நிலை பொதுவான சளிக்கு அடுத்ததாகவும் உலகின் இரண்டாவது பொதுவான நோயாகவும் கருதப்படுகிறது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

பல் துவாரங்கள் (பல் சொத்தை) நோயின் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

ஆரம்ப கால அறிகுறிகளுக்குள் அடங்குபவை:

  • சூடாக அல்லது குளிர்ச்சியாக உண்ணும்போது ஏற்படும் உணர்திறன்.
  • உணவினை கடித்து உண்ணும்போது ஏற்படும் வலி அல்லது அசௌகரியம்.
  • பல்லின் நிறம் மாறுதல்.

தாமதமாக ஏற்படும் அறிகுறிகளுக்குள் அடங்குபவை:

  • ஈறுகளில் வீக்கம்.
  • தொடர்ந்து தாங்கமுடியாத வலி ஏற்படுதல்.
  • இரவில் ஏற்படும் வலி.
  • பல் முற்றிலுமாக உடைந்து போதல்.

எப்போதாவது, நீங்கள் எந்த வலியையும் உணராமலும் இருக்கநேரிடும், அப்போது பல் மருத்துவர் உங்கள் பற்களில் சொத்தையை கண்டரியும் போது நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

வாயில் இருக்கும் பாக்டீரியாவே பல்லில் சொத்தை ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதோடு, இவை சுக்ரோஸ், மற்ற சர்க்கரைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுகளுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் அமிலத்தை உருவாக்கி, பல்லின் வலிமை மிகுந்த அடுக்கான எனாமலை அரித்துவிடுகிறது.

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மோடன்ஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகோகஸ் சோபிரினஸ் ஆகிய பாக்டீரியாக்களே பல் சொத்தைக்கு முக்கியமான காரணங்களாகும்.

இரவுநேரத்தில் சர்க்கரை கலந்த பாலை குழந்தைகளுக்கு புகட்டும் போது நர்சிங் பாட்டில் பற்சிதைவு உண்டாகிறது.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

  • பல் மருத்துவர் முதலில் கருவிகளை வைத்து பற்களின் சிதைவுகளை ஆய்வு செய்வார், அதாவது பார்வை மற்றும் தொட்டு உணரும் பரிசோதனை.
  • தேவைப்பட்டால், பல் மருத்துவர் ஊடுகதிர் படமெடுப்பு எடுப்பதன் மூலம் காட்சி ஆய்வுகளையும் உறுதி செய்துகொள்வார்.
  • இறுதியில், கண்டறிந்தவைகளுடன் நோயாளியின் அறிகுறிகளையும் தொடர்புபடுத்திப் பார்த்து, பல் மருத்துவர் சிகிச்சை திட்டத்தை அறிவுறுத்தலாம்.
  • பல் துவாரம் பரவியிருக்கும் அளவினைப் பொறுத்து, பல் மருத்துவர் சிகிச்சை முறையை தீர்மனம் செய்யக்கூடும்.
  1. ஆரம்பகட்ட சிகிச்சை - ஃபுளோரைட் வார்னிஷின் பயன்பாடு எனாமலை மீண்டும் கனிமமாக்குத்தலுக்கு உதவியாக இருக்கும்.
  2. அடுத்தகட்ட சிகிச்சைகள், பல்லை பழைய நிலைக்கு கொண்டுவர ஃபில்லிங்ஸை பயன்படுத்துதல் அல்லது வேர்க்கால் சிகிச்சை செய்தல் மற்றும் கடுமையான சிதைவு இருக்கும் நிகழ்வுகளில் பல் மருத்துவர் பல்லை அகற்றிவிடக்கூடும்.
  • பல்லில் ஏற்படும் கட்டி போன்ற பல் தொற்றுகளை சார்ந்து காய்ச்சல் ஏற்படலாம்.
  • இருப்பினும், சுய பாதுகாப்பு கருதி, ஊட்டசத்துள்ள உணவு மற்றும் குறைந்த சர்க்கரை உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது மிக அவசியம்.

வேறுபட்ட நோய் கண்டறிதல் முறை:

  • ஆரம்பத்தில், பல்லின் மேல் உருவாகும் வெள்ளைப் புள்ளியானது பல்லின் கனிமபொருள் அகற்றப்படுதலைக் குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த வெள்ளை புள்ளிகள் சிலசமயம் இயற்கையாகவும் உருவாகியிருக்கலாம் அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அந்நிலை பல் ஃபுளோரோசிஸ் என அறியப்படுகிறது.
  • பற்களின் அடிப்பகுதியில் உண்டாகும் காயத்தின் அதிர்ச்சியினால் கூட பற்கள் நிறம் மாறலாம். எனவே, எல்லாசமயத்திலும் பல்லில் ஏற்படும் நிறமாற்றம் பல் சிதைவின் காரணத்தினாலேயே ஏற்படக்கூடியதென்று கருதக்கூடாது.
  • பற்களின் குழி மற்றும் பிளவுகளில் காபி மற்றும் டியின் கறைகள் படிந்திருக்கலாம். எனவே, பல் மருத்துவர் முதலில் பற்களை பார்வை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே சிகிச்சை திட்டத்தை தீர்மானிப்பார்.

சிகிச்சை முறையின் அளவுகளை பொறுத்து சிகிச்சை காலம் மாறுபடலாம். சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உதவியினால், முதல் முறை மருத்துவரை சந்திக்கவரும்போதே முழு நிவாரணம் அளிக்கப்படும் சிகிச்சைகள் கூட சாத்தியமே. பல் சிகிச்சை மிக அரிதாக வலிமிகுந்ததாக இருக்கலாம். அடிக்கடி, வலியில்லாத நிவாரணத்தை பெற குறிப்பிட்ட இடத்தில் மயக்கமருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. பல் சொத்தை ஃபுளோரைட் ஜெல் பூசியோ அல்லது பல் நிரப்புத்தலை கொண்டு பற்களின் பிளவை நிரப்பியும் சிகிச்சையளிக்கப்படும். ஒருவேளை பல்லில் ஏற்பட்டிருக்கும் பிளவுகள் ஆழமாக இருந்தால், அதை சுத்தம் செய்தப்பிறகு பல் தொப்பிகளின் உதவியால் பிளவை மூடிவிடலாம். ஒருவேளை பல் சொத்தை கடுமையானதாக இருந்தால், பாதிக்கப்பட்ட பல்லை அகற்றுதல் அவசியம்.

பல் சொத்தைகளை தடுக்கும் வீட்டு-பராமரிப்பு சிகிச்சைகள் பின்வருமாறு:

  • தினமும் இருமுறை பல் துலக்கவேண்டும்.
  • ஃபுளோரைட் பற்பசையை உபயோகிக்க வேண்டும்.
  • பற்களுக்கு வழக்கமான சுய-பரிசோதனை அவசியம்.
  • வாய்க்கழுவியை பயன்படுத்துதல்.
  • உணவுவேளைக்கு பின் இடையில் உணவருந்தும் பழக்கத்தை குறைத்த.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Tooth decay
  2. Yoon Lee. Diagnosis and Prevention Strategies for Dental Caries. J Lifestyle Med. 2013 Sep; 3(2): 107–109. PMID: 26064846
  3. Cologne, Germany [Internet]: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG). Tooth decay; 2006-.2006 Mar 17 [Updated 2017 Sep 21].
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Tooth Decay
  5. National Health Portal [Internet] India; Oral Health

துவாரங்கள் (பல் சொத்தை) டாக்டர்கள்

Dr. Parampreet Kohli Dr. Parampreet Kohli Dentistry
10 Years of Experience
Dr. Priya gupta Dr. Priya gupta Dentistry
2 Years of Experience
Dr. Shrishty Priya Dr. Shrishty Priya Dentistry
6 Years of Experience
Dr. Hanushri Bajaj Dr. Hanushri Bajaj Dentistry
3 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

துவாரங்கள் (பல் சொத்தை) க்கான மருந்துகள்

Medicines listed below are available for துவாரங்கள் (பல் சொத்தை). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.