நீரிழிவு நியூரோபதி (டயாபடிக் நியூரோபதி) - Diabetic Neuropathy in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)

December 10, 2018

March 06, 2020

நீரிழிவு நியூரோபதி
நீரிழிவு நியூரோபதி

நீரிழிவு நியூரோபதி (டயாபடிக் நியூரோபதி) என்றால் என்ன?

நீரிழிவு நியூரோபதி என்பது நீரிழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக காணப்படும் ஒரு நரம்புக் கோளாறு ஆகும். கைகள் மற்றும் கால்களில் மட்டுமே இந்த நோயின் அறிகுறிகள் உண்டாகும். கிட்டத்தட்ட 50% நீரிழிவு நோயாளிகளுக்கு, நீரிழிவு நியூரோபதி இருக்கிறது மற்றும் இது நீண்ட காலமாக நீரிழிவு நோயுடன் இருப்பவர்களுக்கே வர அதிகம் வாய்ப்பிருக்கிறது. உங்கள் இரத்தத்தின் குளுகோஸ் அளவை சீராக வைத்திருப்பதன் மூலம் இந்த கோளாறு வராமல் தடுக்கலாம்.

நீரிழிவு நியூரோபதியின் வகைகள் பின்வருமாறு:

  • கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு, வலி அல்லது உணர்வின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் பெரிஃபரல் நியூரோபதி (புற நரம்பு இயக்கக் கோளாறு).
  • உங்கள் உடல் அமைப்பை கட்டுப்படுத்தும் நரம்புகளை பாதிக்கும் அடானமஸ் நியூரோபதி (தானியங்கு நரம்பு இயக்கக் கோளாறு).
  • கை, கால், தலை, மற்றும் முண்டப்பகுதி ஆகியவற்றின் ஒற்றை நரம்புகளை மட்டும் பாதிக்கும் ஃபோகல் நியூரோபதி (மைய நரம்பு இயக்கக் கோளாறு).
  • உடலின் ஒரு பக்கத்தை பாதிக்கும் ப்ராக்ஸிமல் நியூரோபதி (அண்மையிலுள்ள நரம்பு இயக்கக் கோளாறு).இது ஒரு பின்புற வகை நோய். இடுப்பு, பிட்டம், அல்லது தொடை நரம்புகளை பாதிக்கிறது. மேலும் அரிதாக மற்ற பக்கத்தை பாதிக்கிறது. இது கடுமையான வலி மற்றும் குறிப்பிடத்தக்க எடை குறைப்பை ஏற்படுத்துகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?           

நீரிழிவு நியூரோபதியின் அறிகுறிகள் அதனதன் வகைகளை பொறுத்து மாறுபடும்.

பெரிஃபரல் நியூரோபதியின் அறிகுறிகள்:

  • காலில் உணர்ச்சியின்மை, எரிச்சல் அல்லது ஊசி குத்துவது போன்ற வலி.
  • சமநிலை அல்லது ஒருங்கிணைப்புத் தன்மை இழப்பு.
  • தொடும்போது கூச்ச உணர்வு அதிகமாதல்.

அடானமஸ் நியூரோபதி உள்ளுறுப்புகளின் நரம்புகளை பாதிப்பதால், அதன் அறிகுறிகள் பின்வருமாறு:

ஃபோகல் நியூரோபதி ஒற்றை நரம்பை பாதிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட நரம்பைப் பொறுத்து பின்வரும் அறிகுறிகள் காணப்படுகின்றன:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

நீரிழிவு நியூரோபதி நோய்க்கான முக்கிய காரணம் இது வரை சரியாக தெரியவில்லை. இருபின்னும், இதற்கு பொறுப்பாகும் சில காரணிகள் பின்வருமாறு:

  • இரத்தத்தில் அதிக அளவு குளுகோஸ் இருப்பதால் நரம்பில் இரசாயண மாற்றத்தையும், நரம்பு பாதிப்பையும் ஏற்படுத்துகிறது மற்றும் நரம்புக்கு ஊட்டச்சத்தை கொண்டு செல்லும் இரத்த நாளங்களை பாதிக்கிறது.
  • மரபுசார் பண்புகள் காரணமாக மரபுவழியாக நீரிழிவு நியூரோபதி ஏற்படலாம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

முழு உடல் பரிசோதனைக்கு பிறகு, உங்கள் மருத்துவர் பின்வருவனவற்றை மேற்கொள்வார்:

  • தசையின் வலிமை மற்றும் எதிர்வினைகளை பரிசோதித்தல்.
  • இருப்பு நிலை, அதிர்வு, வெப்பநிலை, மற்றும் ஒளி தொடர்பான தசை உணர்திறனை சரிபார்த்தல்.
  • தசை மின் அலை வரைவு, நரம்பு கடத்துதல் ஆய்வுகள், மீயொலி, நரம்பு திசுப் பரிசோதனை போன்ற கூடுதல் சோதனைகளை செய்யுமாறு கேட்கலாம்.

வயது, ஆரோக்கியம் மற்றும் நோயாளியின் மருத்துவம் சார்ந்த வரலாற்றைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும். நோயாளியின் வலி மற்றும் அசௌகரியங்களுக்கு வலி நிவாரண மருந்துகள் கொடுக்கப்படுகிறது. நரம்புகளுக்கு கூடுதல் சேதம் வராமல் தடுக்க மனஅழுத்த நீக்கி மருந்துகள், மேற்பூச்சு கிரீம்கள், குறுக்குவெட்டு மின் நரம்பு தூண்டுதல் சிகிச்சை, தசை தளர்வு சிகிச்சை மற்றும் அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.



மேற்கோள்கள்

  1. American diabetes association. Additional Types of Neuropathy. Virginia, United States. [internet].
  2. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; What Is Diabetic Neuropathy?
  3. American diabetes association. Neuropathy (Nerve Damage). Virginia, United States. [internet].
  4. Oregon Health & Science University. Diabetic neuropathy. Portland, Oregon. [internet].
  5. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Diabetic Neuropathy

நீரிழிவு நியூரோபதி (டயாபடிக் நியூரோபதி) டாக்டர்கள்

Dr. Narayanan N K Dr. Narayanan N K Endocrinology
16 Years of Experience
Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 Years of Experience
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 Years of Experience
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

நீரிழிவு நியூரோபதி (டயாபடிக் நியூரோபதி) க்கான மருந்துகள்

Medicines listed below are available for நீரிழிவு நியூரோபதி (டயாபடிக் நியூரோபதி). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.