ஈட்டிங் டிஸ்ஆர்டர் - Eating Disorder in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 06, 2018

July 31, 2020

ஈட்டிங் டிஸ்ஆர்டர்
ஈட்டிங் டிஸ்ஆர்டர்

ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்றால் என்ன?

ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்பது ஒழுங்கற்ற உணவு பழக்கத்தினை சார்ந்ததாகும், அதிகப்படியான உணவு அல்லது குறைவான உணவு உட்கொள்ளுதல். இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் படிப்படியாக இந்த நோயினால் கடத்திச் செல்லப்படுகின்றனர் மற்றும் இந்த நோயினை சரியான நேரத்தில் கண்டறிவது நல்லது.

இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?

முன்கூட்டியே இந்த நோயினை கண்டறிவது நோயளிக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நாம் உணவுக் குறைபாடுகளின் பொதுவான அறிகுறிகளை கவனித்தல் நல்லது:

  • பசியற்ற நிலை அதாவது, மிகவும் குறைந்த அளவிலான உணவை உண்ணும் மக்களுக்கு பசியின்மை உண்டாகுதல்.
  • பலவீனம் மற்றும் உடல் மெலிதல்.
  • கவலை.
  • சமூகத்துடன் ஒன்றாமை அல்லது தனிப்படுத்தப்பட்ட நிலை.
  • பெரும்பசி, இதனால் நோயாளி அடிக்கடி மிக அதிக அளவிலான உணவை சாப்பிடுதல்.
  • அளவுக்கு மீறி உணவு உட்கொள்ளுதல், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நோயாளி பெருமளவில் உணவை உட்கொள்தல்.
  • பசி இல்லாத நேரத்திலும் கூட சாப்பிடுதல்
  • சுயமரியாதையை குறைவாக மதிப்பிடுதல்.
  • அலைபாயும் மனநிலை.
  • உடல் எடை மற்றும் வடிவத்தில் திடீரென கவனம் செலுத்துதல்.
  • உடல் எடையில் திடீர் மற்றும் முக்கிய மாற்றங்கள்.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

உணவுக் குறைபாடுகள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இருப்பினும், மிகவும் பொதுவானவைகளில் சில கீழே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன:

  • உளவியல் காரணங்களான மன அழுத்தம், தன்னை பற்றி தானே குறைவாக மதிப்பிடுதல் மற்றும் மெலிந்த தோற்றம் ஆகியவை இதில் அடங்கும்.
  • ஊட்டச்சத்து குறைபாடுகள், மரபணு ஒப்பனை, ஹார்மோன் விளைதல் அல்லது பிற மருத்துவ பிரச்சினைகள் ஆகியவை உயிரியல் காரணிகள் ஆகும்.
  • கடந்த கால நிகழ்வுகள் போன்ற தனிப்பட்ட பிரச்சினைகள் நோயாளியைப் பாதிக்கலாம் அல்லது தொந்தரவு செய்யக்கூடும்.
  • எதிர்பாராத கலாச்சார வேறுபாடுகள்.
  • குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவதற்கு ஒரு நிபுணத்துவ ஆலோசனையை நாடுதல் நல்லது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

மேற்கூறிய அறிகுறிகள் சிலவற்றை நீங்கள் கவனிக்க நேர்ந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும். உங்கள் அறிகுறிகள், உண்ணும் பழக்கம் மற்றும் உங்கள் தினசரி பழக்கவழக்கங்களை பற்றிய கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு, உங்களுக்கு உண்ணல் சீர்கேடு நோய் உள்ளதா என்பதை மருத்துவர் முடிவெடுப்பார்.

  • இந்த நோயினை கண்டறிவதற்கு, உங்களை உடல் ரீதியாக பரிசோதிக்கலாம் மற்றும் தேவைப்பட்டால், ஒட்டுமொத்த சுகாதார நிலை மற்றும் குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடுகளை மதிப்பிடுவதற்கு சில ஆய்வக பரிசோதனைகளை செய்ய சொல்லலாம்.
  • டாக்டர் நோயறிதலை உறுதிப்படுத்த ஒரு உளவியல் பரிசோதனை செய்வார்.

உணவுக் கோளாறு சிகிச்சை முறை என்பது ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடர்பான பல அம்சங்களை உள்ளடக்கியது. எனினும், உணவு குறைபாடுகள் சிகிச்சைக்கான பொதுவான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

  • தியானம்.
  • ஆரோக்கியமான உணவு.
  • அறிவாற்றல் நடத்தை சிகிச்சை மற்றும் உங்கள் மனநிலை மாற்றங்கள், உணவு பழக்க வழக்கங்களை கவனித்தல் போன்ற பழக்க வழக்க சிகிச்சை முறைகள் அதிக உணவு உட்கொள்ளும் மனநிலையிலிருந்து உங்களை கடக்க செய்கிறது.
  • உண்ணுதல் குறைபாடுகளை குணப்படுத்த எந்த மருந்துகளும் இல்லை, இருப்பினும், மனஅழுத்தம் நீக்கி மருந்துகள் மற்றும் ஆன்டி - அன்சிட்டி மருந்துகள் தேவையற்ற நேரங்களில் உணவு பழக்கத்திலிருந்து மீண்டுவர உங்களுக்கு பரிந்துரைக்கப்படலாம்.
  • எந்த குறைபாடுகளையும் சமாளிக்க ஊட்டச்சத்துக்கள் பரிந்துரைக்கப்படலாம்.



மேற்கோள்கள்

  1. Pamela M Williams. Treating Eating Disorders in Primary Care. Am Fam Physician. 2008 Jan 15;77(2):187-195. American Academy of Family Physicians.
  2. National Eating Disorder Informative Centre. Clinical Definitions. Canada; [Internet]
  3. National Institute of Mental Health [Internet] Bethesda, MD; Eating Disorders. National Institutes of Health; Bethesda, Maryland, United States
  4. Am Fam Physician. 2015 Jan 1;91(1):online. [Internet] American Academy of Family Physicians; Eating Disorders: What You Should Know.
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Eating Disorders