வலிப்பு - Epilepsy in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

January 10, 2019

September 10, 2020

வலிப்பு
வலிப்பு

சுருக்கம்

வலிப்பு நோய்(எபிலிப்சி) என்பது ஒரு நாள்பட்ட அல்லது நீண்டகால மூளை கோளாறு ஆகும். இதனால் அசாதாரண மூளை செயல்பாடுககள் ஏற்பட்டு கால்-கை வலிப்பு வரலாம். இது அசாதாரண உணர்வுகள் மற்றும் நினைவு இழப்புக்கு வழிவகுக்கும். வலிப்பு வயது, பாலினம், இனம் அல்லது எந்த வித பின்னணி போன்ற வரம்பு இல்லாமல் எவரையும் பாதிக்கலாம். வலிப்பின் அறிகுறிகள் ஒரே இடத்தை முறைத்து பார்ப்பது போன்ற லேசானது முதல் கடுமையான கை கால் இழுவை வரை மோசமானதாக இருக்கலாம். குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் வாழும் 75% மக்கள் இதற்காக போதுமான சிகிச்சை பெறுவதில்லை மற்றும் உலகின் பல பகுதிகளில் மக்கள் சமூக களங்கம் மற்றும் பாகுபாடுகளுக்கு உட்பட்டுள்ளனர். வலிப்புக்கான சிகிச்சையில் மயக்க மருந்துகள் உள்ளன, மற்றும் 70% மக்களுக்கு இது சாதகமாக வேலைசெய்கிறது. மருந்துகள் நிவாரணமளிக்காத சில சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை வலிப்பு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சிலருக்கு, ஒளிரும் விளக்குகள், அதிகமான சத்தங்கள், தூக்கம் இல்லாமை மற்றும் மிகுந்த மனஅழுத்தம் போன்ற பொதுவான வலிப்பு ஏற்படுவதை தூண்டும் காரணங்களை தவிர்ப்பதோடு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படலாம்.

வலிப்பு (கால்-கை வலிப்பு) அறிகுறிகள் என்ன - Symptoms of Epilepsy in Tamil

வலிப்புக்கான அறிகுறிகள், அது ஏற்பட காரணமான மூளையில் பாதிக்கப்பட்ட அது தொடர்பான பகுதியினை பொறுத்தது. அறிகுறிகள் பின்வருமாறு:

  • உணர்வு இழப்பு.
  • குழப்பம்.
  • ஒரு இடத்தையே வெறித்தது பார்த்தல்.
  • கை மற்றும் கால்களின் நழுவிய இயக்கங்கள்.
  • பார்வை, கேட்டல், சுவைத்தல் போன்ற உணர்ச்சிகளில் இடையூறு.
  • பயம் மற்றும் பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்கள்.

வலிப்பு (கால்-கை வலிப்பு) சிகிச்சை - Treatment of Epilepsy in Tamil

வலிப்புக்கான முக்கிய சிகிச்சைகள் பின்வருமாறு:

வலிப்பு-எதிர்ப்பு மருந்துகள்

வலிப்பு-எதிர்ப்பு மருந்துகளே பொதுவாக தேர்வு செய்யப்படும் சிகிச்சையாகும். இந்த மருந்துகள் 70% க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அறிகுறிகளை குறைக்கவோ அல்லது வலிப்புத்தாக்கங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது நிவாரணம் அளிக்கவோ உதவுகின்றன என தெரியவந்துள்ளது. இந்த மருந்துகள் மூளையில் உற்பத்தி செய்யப்படும் இரசாயனங்களின் அளவுகளை மாற்றுவதன் மூலம் வலிப்பின் வீரியம் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் ஏற்படும் அளவினை குறைக்க உதவுகின்றன. இந்த மருந்துகள் வலிப்பு நோயை குணப்படுத்த உதவாது என்றாலும், வழக்கமான சிகிச்சைகள் மூலம் வலிப்பு ஏற்படும் அத்தியாயங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். இந்த மருந்துகள் பல வடிவங்களில் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் குறைந்த அளவு வீரியம் கொண்ட மருந்தே சிகிச்சையில் வழங்கப்படுகிறது மற்றும் வலிப்பு ஏற்படும் அத்தியாயங்கள் நிறுத்தப்படும் வரை மருந்தின் வீரியத்தின் அளவு மெதுவாக அதிகரிக்கிறது. குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் அல்லது வேலை செய்யவில்லை என்றால் மருத்துவர் மருந்துக்களை மாற்றலாம். மருந்துக்கள் வலிப்பின் வகையினை பொறுத்து மாறுபடும், இந்த மருந்துகள் ஒரு மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும். வலிப்பு நோயாளி வேறு ஏதாவது மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், மருத்துவரிடம் அது அறிவிக்கப்பட வேண்டும்.

இந்த மருந்துகளின் பக்க விளைவுகள்:

இத்தகைய பக்க விளைவுகள் இருந்தால், உடனடியாக அதை மருத்துவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.எனவே, மருத்துவர் பரிந்துரைத்த அதே சரியான மருந்துகளை பயன்படுத்துவது சிறந்தது. மருந்தின் எந்த மாற்றத்தையும் அல்லது மருந்தின் பொதுவான பதிப்பையும் பற்றி மருத்துவரிடம் பேசுங்கள். மருத்துவர் அனுமதி இல்லாமல் மருந்து சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். நடத்தை அல்லது மனநிலையில் எந்த மாற்றங்களும் இருந்தால், அவை மருத்துவரிடம் அறிவிக்கப்பட வேண்டும். காலப்போக்கில், பெரும்பாலான வலிப்பு-எதிர்ப்பு மருந்துகள் நிறுத்தப்பட்டு, நோயாளி எந்த அறிகுறிகளும் இல்லாமல் வாழ முடியும்.

அறுவை சிகிச்சை

மருந்துகள் போதுமான நிவாரணம் அளிக்கவில்லை அல்லது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றால், அறுவை சிகிச்சை அறிவுறுத்தப்படலாம். அறுவைச் சிகிச்சையின் போது, மூளை பாதிக்கப்பட்ட பகுதியில் அகற்றப்படுகிறது. மூளையின் ஒரு சிறிய பகுதி பாதிக்கப்பட்டு மேலும் அறுவை சிகிச்சை பேச்சு, கேட்டல், நடை, மோட்டார் செயல்பாடு போன்ற பிற முக்கிய செயல்பாடுகளை பாதிக்காது  என்ற போது மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

வாழ்க்கைமுறை மேலாண்மை

அபாயகரமானவையாகவும் சிக்கல்களைத் தோற்றுவிப்பதனாலும் வலிப்புத்தாக்கங்களை கட்டுப்படுத்துவது முக்கியம்.

  • மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர் அனுமதி இல்லாமல் எந்த மருந்தையும் தவிர்க்கவும் அல்லது நிறுத்தவும் வேண்டாம்
  • வலிப்புத்தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறியவும். மிகவும் பொதுவான வலிப்புத்தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் ஆல்கஹால், தூக்கம் இன்மை, மன அழுத்தம், பிரகாசமான ஒளி, உரத்த சத்தம் போன்றவை.
  • கடைசி முறை வலிப்பு எந்த வேலை செய்து கொண்டிருந்தபோது வந்தது, எப்படி வந்தது, எதனால் வந்தது, எவ்வளவு நேரம் இருந்தது, அதன் வீரியம் எவ்வளவு போன்ற விவரங்களை தொடர்ந்து ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • வலிப்புத்தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை பின்வரும் செயல்களால் சமாளிக்க முயற்சிக்கவும்: 
    • சீக்கிரம் தூங்க முயற்சிக்கவும்.
    • லேசான சுவாச பயிற்சிகள் செய்தல்.
    • மது உட்கொள்ளவதைக் குறைத்தல்.
  • வலிப்புத்தாக்கங்கள் அடிக்கடி வந்தால், வண்டி ஓட்டுதல், நீச்சல் மற்றும் சமையல் போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கவும். ஏனெனில் அந்த வேலைகள் செய்து கொண்டிருக்கும்போது வலிப்பு வந்தால் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.
  • வீட்டில் புகைவதை கண்டறியும் இயந்திரங்களை நிறுவவும்.
  • மென்மையான விளிம்புகளுடன் கூடிய வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்தவும்.
  • குளிக்கும் போது கதவுகளை பூட்ட வேண்டாம்.
  • டப்பில் குளிப்பதற்கு பதில் ஷவரில் குளிக்கலாம். இது வலிப்புத்தாக்குதல் அதிகரிக்கிறது என்றால் குளிக்கும் நீரில் மூழ்குவதை தடுக்கும்.
  • வலிப்புத்தாக்குதலின் போது காப்பாற்றக்கூடிய ஒரு கூட்டாளியுடன் நீச்சல் செய்ய போகவும்.
  • வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும் போது ஒரு தலை கவசத்தை பயன்படுத்தவும்.

வலிப்பு (கால்-கை வலிப்பு) என்ன - What is Epilepsy in Tamil

கால்-கை வலிப்பு என்பது பொதுவான நரம்பியல் குறைபாடு ஆகும், இது தற்போது உலகெங்கிலும் சுமார் 50 மில்லியன் மக்களை பாதித்துள்ளது. 80% க்கும் மேலாக குறைவான வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் உள்ள மக்களே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வலிப்பினால் முழு உடல் அல்லது பகுதி உடலில் கட்டுப்பாடற்ற நழுவல் இயக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் நினைவு இழப்பு மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் மலக் குடல் இயக்கங்களின் கட்டுப்பாடு இழப்பும் ஏற்படுகிறது. மூளை செல்களின் அதிகப்படியான மின் தூண்டுதலின் வெளியீடு காரணமாக வலிப்புத்தாக்கங்கள் ஏற்படுகின்றன. ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் பல முறை வலிப்பு ஏற்படக்கூடும்.



மேற்கோள்கள்

  1. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Epilepsy.
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Types of Seizures
  3. Oguni H. Epilepsy and intellectual and developmental disabilities.. Journal of Policy and Practice in Intellectual Disabilities. 2013 Jun;10(2):89-92. [Internet]
  4. healthdirect Australia. Head injuries. Australian government: Department of Health
  5. healthdirect Australia. What causes epilepsy?. Australian government: Department of Health
  6. Silverman IE, Restrepo L, Mathews GC. Poststroke seizures. Archives of neurology. 2002 Feb 1;59(2):195-201. PMID: 11843689
  7. Senthil Amudhan, Gopalkrishna Gururaj, Parthasarathy Satishchandra. Epilepsy in India I: Epidemiology and public health. Ann Indian Acad Neurol. 2015 Jul-Sep; 18(3): 263–277. PMID: 26425001
  8. Ottman R, Barker-Cummings C, Leibson CL, Vasoli VM, Hauser WA, Buchhalter JR. Accuracy of family history information on epilepsy and other seizure disorders. Neurology. 2011 Jan 25;76(4):390-6. PMID: 21263140
  9. Ding K, Gupta PK, Diaz-Arrastia R. Epilepsy after Traumatic Brain Injury. In: Laskowitz D, Grant G, editors. Translational Research in Traumatic Brain Injury. Boca Raton (FL): CRC Press/Taylor and Francis Group; 2016. Chapter 14
  10. National Health Service [Internet]. UK; Epilepsy.
  11. Duman P, Varoglu AO, Kurum E. The long-term prognosis of epilepsy patients with medically treated over a period of eight years in Turkey. Pakistan journal of medical sciences. 2017 Jul;33(4):1007. PMID: 29067083
  12. National Institute of Neurological Disorders and Stroke [Internet] Maryland, United States; Epilepsy Information Page.

வலிப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for வலிப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.