எவிங் சர்கோமா - Ewing Sarcoma in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 01, 2018

March 06, 2020

எவிங் சர்கோமா
எவிங் சர்கோமா

எவிங் சர்கோமா என்றால் என்ன?

எவிங் சர்கோமா முதன்மையாக எலும்புகளை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோய் ஆகும். ஒஸ்டீயோசர்கோமாவிற்கு அடுத்து இது இரண்டாவது அடிக்கடி நிகழும் எலும்பு புற்றுநோயாகும்.குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர்  பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில், இந்த மில்லியனில் ஒரு நபருக்கு காணப்படுகிறது.

இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?

வலி மற்றும் நீர் கோர்த்துத் கொள்ளுதல் முதன்மையான அறிகுறிகள் ஆகும்.எலும்புமுறிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:

 • காரணம் இல்லாமல் உடல் வெப்பநிலை அதிகரித்தல்.
 • களைப்பாக உணர்தல்.
 • சருமத்திற்கு அடியில் கட்டி அல்லது முடுச்சுகள் தோன்றுதல் , குறிப்பாக அக்குள்களில், மூட்டுகளில், மார்பு, அல்லது இடுப்பு பகுதியில், முடுச்சுகள் தோன்றுதல்.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

இதன் உண்மையான காரணம் அறியப்படவில்லை; எனினும்,  இது ஒரு மரபணு குறைபாடு ஆகும்.இதில் சம்பத்தப்பட்ட இரண்டு மரபணுக்கள் பின்வருமாறு:

 • 22 குரோமோசோமில் இடபுள்யூஎஸ்ஆர்1.
 • 11குரோமோசோமில்  எஃப்எல்ஐ1.

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

இதனை கீழ்காணும் முறைகளில் கண்டறியலாம்:

 • நோயாளி முழுமையாக பரிசோதித்து மருத்துவ அறிக்கை எடுத்துக்கொள்வது.
 • இமேஜிங்:
  • காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) ஸ்கேன்.
  • சிடி ஸ்கேன்.
 • பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன்.
 • எலும்பு மஜ்ஜை:
  • எலும்பு மஜ்ஜையை எடுத்து பரிசோதித்தல்.
  • திசுப் பரிசோதனை.
 • இரத்த சோதனைகள் சி- எதிர்வினை புரதம், எரித்ரோசைட் வண்டல் பதிவு போன்றவை.

சிகிச்சை உள்ளடக்கியவை:

 • கீமோதெரபி.
 • கதிர்வீச்சு சிகிச்சை.
 • அறுவை சிகிச்சை.

புற்றுநோய் அதிகமாவதை  கண்டறிந்தால், ஸ்டெம் செல் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.மற்ற சிகிச்சைகள் பின்வருமாறு:

 • மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளை ஈடுபடுத்துதல்.
 • ஆன்டிஜென்-இலக்கு நோய் எதிர்ப்பு சிகிச்சை.

உயிர்வாழ்தல் விகிதமானது புற்றுநோயின் நிலை மற்றும் கட்டியின் அளவு, லாக்டேட் டீஹைட்ரோஜினேஸ் (எல்.டி.எச்) அளவுகள் போன்ற மற்ற காரணிகளை பொருத்ததாகும்.தனிநபர் புற்றுநோய் சிகிச்சைகளை எப்படி சகிப்புத்தன்மையோடு பொறுத்துக்கொள்கிறார் என்பதும்,நோயாளிகள் 10 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தலும், உயிர்வாழ்தல் விகிதத்தின் முக்கிய காரணிகளாக அமைகின்றன.

சிகிச்சையின் முன்னேற்றத்தை கவனிக்க அட்டவணைகளை பின்பற்றுவது சிறந்தது.சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தை மதிப்பிடுவதற்கு சிகிச்சைகளிலிருந்து 2-3 மாதங்கள் தொடர்ந்து அனைத்து சோதனையும் செய்ய அறிவுறுத்தப்படலாம்.இந்த கட்டிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு கூட மீண்டும் மீண்டும் வருகின்றன.

நோயாளிக்கு உணர்வுபூர்வமான ஆதரவை வழங்குவது முக்கியம்.மேற்கோள்கள்

 1. Orthoinfo [internet]. American Academy of Orthopaedic Surgeons, Rosemont IL. Ewing's Sarcoma.
 2. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Ewing Sarcoma Treatment
 3. Genetic home reference. Ewing sarcoma. USA.gov U.S. Department of Health & Human Services. [internet].
 4. Science Direct (Elsevier) [Internet]; Trends in incidence of Ewing sarcoma of bone in India – Evidence from the National Cancer Registry Programme (1982–2011)
 5. Ramaswamy A, Rekhi B, Bakhshi S, Hingmire S, Agarwal M. Indian data on bone and soft tissue sarcomas: A summary of published study results. South Asian J Cancer. 2016 Jul-Sep;5(3):138-45. PMID: 27606300
 6. American Cancer Society [internet]. Atlanta (GA), USA; Living as a Ewing Tumor Survivor

எவிங் சர்கோமா க்கான மருந்துகள்

Medicines listed below are available for எவிங் சர்கோமா. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹90.58

₹324.0

Showing 1 to 0 of 2 entries