உணவு ஒவ்வாமை - Food Allergies in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

December 06, 2018

July 31, 2020

உணவு ஒவ்வாமை
உணவு ஒவ்வாமை

உணவு ஒவ்வாமை என்றால் என்ன?

உடலின் இயற்கையான பாதுகாப்பிற்காக ஒரு குறிப்பிட்ட உணவு பொருளுக்கு நமது உடல் அதிகப்படியான எதிர் செயல் ஆற்றி, நோய் எதிர்ப்பொருள்கள் மற்றும் பிற பொருட்கள் வெளிப்படுவதே உணவு ஒவ்வாமை ஆகும். உணவு ஒவ்வாமைகள் அதிகரித்து வருகின்றன மேலும் இதற்கு விரைவாக சிகிச்சையளிக்கப்படாவிடில், இது தீவிரமான நோய்க்கு அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கக்கூடும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பொதுவாக, உணவு உட்கொண்ட பிறகு விரைவாக உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் ஏற்படுகின்றன.

  • கடுமையான அறிகுறிகளாவன:
    • வாய் வீங்கி காணப்படுதல்.
    • சத்தமாக மூச்சுவிடுதல்.
    • குரல்வளையில் நீர்க்கட்டு மற்றும் தொண்டையில் வீக்கம் மற்றும் இறுக்கம் ஏற்படுதல்.
    • தொடர்ச்சியான தலைச்சுற்றல் மற்றும் மயக்கநிலை.
    • வலிப்பு.
    • காப்புப்பிறழ்ச்சி.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஒரு சில வகை உணவுகளால் மட்டுமே 90% ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. அவைகளாவன:

உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கான ஆபத்தான காரணிகள் பின்வருமாறு:

  • மரபியல் முற்காப்பு.
  • மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை, உணவு முறை, மற்றும் சுகாதாரம் போன்ற சுற்றுசூழல் காரணிகள்.
  • தாய்ப்பாலுக்குப் பதிலாக கொடுக்கப்படும் ஃபார்முலா பால்.
  • பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை உண்ணுதல்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவ பின்புலம் மற்றும் அறிகுறிகள் உணவு ஒவ்வாமையை பெரிய அளவில் கண்டறிய உதவுகின்றன. ஒரு நபரிலிருந்து மற்றோரு நபருக்கு அறிகுறிகள் வேறுபடும் என்பதை அறிவது அவசியமானது.

  • இதற்கான ஆய்வுகள் பின்வருமாறு:
    • ஒவ்வாப்பொருளை அறிய தோல் ப்ரிக் சோதனை.
    • குறிப்பிட்ட உணவு பொருளின் நோய்எதிர்ப்புரதம் இ பிறபொருளெதிரியை அளவிட இரத்த பரிசோதனை.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்வருமாறு:
    • ஒவ்வாமை ஏற்படுத்தும் குறிப்பிட்ட உணவுப் பொருளை தவிர்ப்பது என்பது ஒவ்வாமைக்கு சிகிச்சை எடுப்பதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். ஒவ்வாப்பொருளுக்கு இரண்டாவது முறை வெளிப்படுவது காப்புப்பிறழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    • உணவுகளில் சேர்க்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பொருளை பற்றிய தகவல்களை அறிவது ஒவ்வாமையை தவிர்க்க அவசியமானதாகும்.
  • கடுமையான எதிர்வினைகளை கையாள்வது:
    • இலேசானது முதல் மிதமான ஒவ்வாமை எதிர்வினைகளுக்கு ஹிசுட்டமின் எதிர்ப்பிகள் குறிப்பிடப்படுகிறது.
    • உயிருக்கு ஆபத்தான காப்புப்பிறழ்ச்சி இருக்கும் நிலையில், எப்பிநெப்பிரின் இயக்குநீர் (அட்ரினலின்) அடங்கிய ஊசி பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் திரவங்களின் பயன்பாடு அறிகுறிகளைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.



மேற்கோள்கள்

  1. American College of Allergy, Asthma & Immunology. Food Allergy. Illinois, United States. [internet].
  2. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Food allergy and intolerance
  3. Zukiewicz-Sobczak WA, Wróblewska P, Adamczuk P, Kopczyński P. Causes, symptoms and prevention of food allergy. Postepy Dermatol Alergol. 2013 Apr;30(2):113-6. PMID: 24278058
  4. U.S food and drug administration. What You Need to Know about Food Allergies. US. [internet].
  5. U.S food and drug administration. Food Allergens. US. [internet].

உணவு ஒவ்வாமை டாக்டர்கள்

Dr. Abhas Kumar Dr. Abhas Kumar Allergy and Immunology
10 Years of Experience
Dr. Hemant C Patel Dr. Hemant C Patel Allergy and Immunology
32 Years of Experience
Dr. Lalit Pandey Dr. Lalit Pandey Allergy and Immunology
7 Years of Experience
Dr. Shweta Jindal Dr. Shweta Jindal Allergy and Immunology
11 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்