இரைப்பை அழற்சி - Gastritis in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

February 07, 2019

March 06, 2020

இரைப்பை அழற்சி
இரைப்பை அழற்சி

சுருக்கம்

இரைப்பை அழற்சி என்பது மிகவும் பொதுவான செரிமான பாதை கோளாறுகளில் ஒன்றாகும். இது வயிற்றின் உட்புற வரிசையில் வீக்கம் மற்றும் எரிச்சல் காரணமாக ஏற்படுகிறது. இந்த வயிற்று வீக்கம் வலி, மேல் வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், ஏப்பம், உணவை வெளியே தள்ளுதல், குமட்டல் மற்றும் அவ்வப்போது வாந்தியெடுத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இந்த இரைப்பை அழற்சி நீண்ட காலமாக வலி நிவாரணிகள் பயன்படுத்துதல் (NSAID கள்), பாக்டீரியா தொற்று, புகைபிடித்தல், ஆல்கஹால் மற்றும் சில நோயெதிர்ப்பு அமைப்பின் தன்னியக்க நிலைமைகள் ஆகியவற்றின் விளைவாக இருக்கலாம். சில நேரங்களில் இது ஏற்பட பல வருடங்கள் தாமதமாகலாம். இதனை எண்டோஸ்கோபி மூலம் கண்டறியலாம். சிகிச்சை முறையில் ஆன்டாக்டிட்ஸ், நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் உணவு மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

இரைப்பை அழற்சி என்ன - What is Gastritis in Tamil

இரைப்பை அழற்சி என்பது வயிற்றின்(முகோசா) உட்புற வரிகளில் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கம் ஆகும். ஆரோக்கியமான மக்களில், வயிறு அமிலத்தையும், பல்வேறு நொதிகளையும், சளிகயையும் உற்பத்தி செய்கிறது. இரைப்பை அழற்சியின் போது, சளியின் உற்பத்தி அளவு குறைந்து, வயிறு பகுதியில் சுரக்கும் அதன் சொந்த அமிலத்தினாலேயே வயிறு பாதிக்கப்பட்டு வலி மற்றும் எரியும் உணர்வு ஏற்படுவதோடு வயிற்றிலிருந்து உணவு எதுக்களிக்கப்படுதல் மற்றும் எப்போதாவது வாந்தி ஏற்படுகிறது. இரைப்பை அழற்சி  உணவு மாற்றங்கள் மற்றும் சிகிச்சையளிக்கும் மருந்துகள் கொண்டு மிக அதிக வெற்றி விகிதத்துடன் நிர்வகிக்க மற்றும் சிகிச்சையளிக்கப்படலாம்.

பொதுவாக எல்லோரும் தங்கள் வாழ்நாளில் பரவலான காரணங்களால் ஒரு முறையாவது இந்த இரைப்பை அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். நோய்த்தொற்றுகள், மருந்துகள், புகைபிடித்தல், ஆல்கஹால் பிரயோகம், மன அழுத்தம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான நிலைமைகள் இரைப்பை அழற்சிக்கு முக்கிய காரணம். இது கடுமையான அல்லது நாள்பட்டதாக இருக்கலாம். அறிகுறிகள் மிகவும் கடுமையானதாகவும் மற்றும் ஒரு சில நாட்களில் சரி செய்துவிடக் கூடியது  என்றால், அது கடுமையான இரைப்பை அழற்சி என அழைக்கப்படுகிறது. மாறாக, நாட்பட்ட இரைப்பை அழற்சி அறிகுறிகள் லேசானது முதல் மிதமானது வரை பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

இரைப்பை அழற்சி அறிகுறிகள் என்ன - Symptoms of Gastritis in Tamil

இரைப்பை அழற்சி அதன் வகையினை பொறுத்து வெவ்வேறு அறிகுறிகளை காட்டுகிறது. வயிற்றில் மற்றும் மார்பின் மையத்தில் (நெஞ்செரிச்சல்) ஒரு எரியும் உணர்வு, இரைப்பை அழற்சிக்கு ஒரு பொதுவான அறிகுறியாகும். பலர் எந்த அறிகுறிகளையும் கொண்டிராமல், சில வகையான அஜீரண கோளாறுகளை மட்டும் அனுபவிக்கலாம்.

இரைப்பை அழற்சியின் அறிகுறிகள் பின்வருமாறு:

 • வயிறு அல்லது வயிற்றில் மேல் பகுதியில் எரிகிற உணர்வு.
 • நெஞ்செரிச்சல்
 • அதிகப்படியான ஏப்பம்.
 • இரைப்பையிலலிருந்து உண்ட உணவு எதுக்களித்து உணவு குழாய்க்கு அல்லது வாய்க்கு வருதல்.
 • அடிவயிறு வீங்கிய உணர்வு.
 • சாப்பிட்ட பிறகு வயிறு கும்மென்றிருப்பது போன்ற உணர்வு.
 • குமட்டல்.
 • வாந்தி.
 • அஜீரணம்.
 • பசியிழப்பு.
 • விக்கல்.

அறிகுறிகளின் தீவிரம் மற்றும் இரைப்பை அழற்சியின் காரணம் மற்றும் அதன் வகையை பொறுத்து மாறுபடும். இருப்பினும், சில ஆபத்தான, சிவப்பு-வரிசை அறிகுறிகள் உள்ளன; நீங்கள் பின்வரும் அறிகுறிகளை உணர்ந்தால் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது:

 • மேல் வயிறு அல்லது வயிற்று பகுதியில் கடுமையான வலி (குத்துவது அல்லது இழுத்து பிடிப்பது போல வலி).
 • இரத்த வாந்தியெடுத்தல் (ஹெமாடேமிஸிஸ்).
 • இருண்ட அல்லது கருப்பாக மலம் கழித்தல்.
 • மயக்கம் அல்லது தலைச்சுற்றல்.
 • மூச்சு திணறல்.
 • பலவீனம்.
 • வெளிரிய தன்மை.

இந்த அறிகுறிகள், தீவிரமான இரைப்பை அழற்சியின் அல்லது ஈரோஸிவ் இரைப்பை அழற்சியைக் குறிக்கலாம், இதற்கு உடனடி சிகிச்சை தேவை.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW

இரைப்பை அழற்சி சிகிச்சை - Treatment of Gastritis in Tamil

அதிர்ஷ்டவசமாக, இரைப்பை அழற்சியின் பெரும்பாலான வகைகள் பயனுள்ள குணமளிக்கக்கூடிய சிகிச்சைகளை கொண்டுள்ளன. இரைப்பை அழற்சி ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்பட்டால், ஒரு குறிப்பிட்ட சிகிச்சை பொதுவாக நோய் குணமாக்க பயன்படுகிறது. இரைப்பை அழற்சியின் ஸிம்டமடிக் (அன்டக்சிட்ஸ், புரோட்டான்-பம்ப் இன்ஹிபிடர்கள், அல்லது H2 பிளாக்கர்கள் உபயோகம்), மற்றும் டிபினிடிவ் சிகிச்சை (அன்டிபையோட்டிக்ஸ் அல்லது ஆன்டி-பராஸிட்டிக் மருந்து உபயோகம்) போன்ற சிகிச்சைகள் உள்ளன.

 • அன்டக்சிட்ஸ்
  இந்த வகை மருந்துகளில் மெக்னீசியம் மற்றும் அலுமினிய உப்புக்கள் உள்ளன, அவை வயிற்று அமிலத்தை நடுநிலைப்படுத்தி வலி மற்றும் எரியும் உணர்வை குறைக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன. எனினும், இந்த மருந்துகளால் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படலாம்.
 • புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள்
  இந்த வகை மருந்துகள் வயிற்றின் அமில உற்பத்தியை குறைக்கின்றன, இதனால் நோய் அறிகுறிகளுக்கு நிவாரணம் அளித்து, எரிச்சல் அல்லது வீக்கத்தை குணப்படுத்துகின்றன. பான்ட்ரோப்ரசோல், ஓமேப்ரசோல், ரபெப்ராஸ்ரோல் மற்றும் எஸோம்ஸ்பிரோல் ஆகியவை சில இன்ஹிபிட்டர்கள் ஆகும்.
 • H2 பிளாக்கர்ஸ்
  இந்த வகை மருந்துகள் வயிற்றின் அமில உற்பத்தியை குறைக்கின்றன, ஆனால் புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்களைக் காட்டிலும் இவை குறைவாகவே சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ரனிடிடின், நிசிடிடின், மற்றும் ஃபாமோடிடின் போன்ற மருந்துகள் இதற்கான சில உதாரணங்கள்.
 • நுண்ணுயிர் கொல்லிகள்(அன்டிபையோட்டிக்ஸ்)
  இவை வயிற்றில் அழற்சியை ஏற்படுத்தி வயிற்றினுள் உள்ள வரிசையை சேதப்படுத்தும் பாக்டீரியா வளர்ச்சியைக் கொன்று அவற்றை தடுக்க பயன்படுகிறது. குறிப்பாக எச். பைலோரி என்னும் மருந்து. இது அமொக்ஸிசிலின், மெட்ரொனிடசோல் அல்லது கிளாரித்ரோமைசின் ஆகியவை கொண்டுள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இணைந்த சிகிச்சைமுறை இரைப்பை அழற்சி கட்டுப்படுத்த உதவுகிறது.

வாழ்க்கைமுறை மேலாண்மை

இரைப்பை அழற்சி சாதாரண வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நாள்பட்ட இரைப்பை அழற்சியினால் பல சிக்கல்கள் உண்டாகலாம். அவற்றை தவிர்க்க மருந்துகள் போதுமானவை அல்ல விரிவான வாழ்க்கைமுறை மாற்றங்களை தேவை. இரைப்பை அழற்சிக்கு தேவையான வாழ்க்கை முறை மாற்றங்கள் பின்வருமாறு:

 • உணவு திட்டம்
  சிறிய அளவில், அடிக்கடி உணவு உட்கொள்வது நல்லது இதனால் மேலும் வயிற்றில் அதிக அமிலத்தை உருவாவதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. இதில் வயிற்ற்றின் கொள்ளளவு திறன் கூட ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, ஒவ்வொரு வேலை சாப்பாட்டிற்கும் இடையே நீண்ட இடைவெளி விடுவதினால் அமில உற்பத்தி குறையும். இது வயிற்றின் வரிகளை மேலும் சேதப்படுத்தாது இருக்கும்.
 • புரோபயாடிக்குகளின் பயன்பாடு
  புரோபயாடிக்குகள் சாதாரண குடல் சுரப்பிகளை நிரப்பி, வயிற்றுப் புண்களை குணப்படுத்துவதில் உதவுகின்றன, இருப்பினும் அவை வயிற்றில் அமில சுரப்புகளை பாதிக்காது. தயிர் மற்றும் மோர் உணவில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய இயற்கை புரோபயாடிக்குகள் ஆகும்.
 • மது விலக்கு
  ஆல்கஹால் வயிற்றின் உட்புறத்தை எரிச்சலூட்டுவதாக அறியப்படுகிறது.
 • புகை பிடிப்பதை தவிர்ப்பது
  வயிற்றில் ஆசிட் சுரப்புகளை அதிகரிக்கக்கூடிய பிரபலமான காரங்களில் புகைபிடிப்பது மிகவும் முக்கியமானது.
 • காரமான உணவுகளைத் தவிர்ப்பது
  காரமான அல்லது மற்ற எரிச்சலூட்டும் உணவுகள் வயிற்று அமில சுரப்பை அதிகரிக்க மற்றும் வயிற்று உள் புற சேதத்தை அதிகரிக்கிறது.
 • வலி மேலாண்மை
  மாற்று அல்லது மற்ற பாதுகாப்பான வலி நிவாரண நடவடிக்கைகள் அல்லது வயிற்றில் அமில சுரப்பை  குறைப்பதில் உதவி செய்யும் மருந்துகளை பயன்படுத்தலாம்.
 • உடல் எடை மேலாண்மை
  எடை குறைப்பு அல்லது இலக்கு தொப்புள் சுற்றவை BMI ஐ அடைவது நாள்பட்ட இரைப்பை அழற்சியின் தீவிரத்தை குறைப்பதில் உதவுகிறது. தவிர, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் நிறைந்த உணவுப் பயன்மிக்கது.
 • மன அழுத்தம் மேலாண்மை
  மன அழுத்தம் வயிற்றில் அமில சுரப்பை அதிகரிக்க கூடிய மற்றொரு காரணியாகும். யோகா, சுவாச பயிற்சி, மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.


மேற்கோள்கள்

 1. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Gastritis.
 2. National Health Service [Internet]. UK; Gastritis.
 3. Kulnigg-Dabsch S. Autoimmune gastritis. Wiener Medizinische Wochenschrift (1946). 2016;166(13):424-430. PMID:27671008.
 4. Nimish Vakil; Erosive Gastritis. The Merck Manual Professional Version [internet]. US.
 5. Rugge M, Meggio A, Pennelli G, Piscioli F, Giacomelli L, De Pretis G, Graham DY. Gastritis staging in clinical practice: the OLGA staging system. . Gut. 2007 May;56(5):631-6. Epub 2006 Dec 1. PMID: 17142647.
 6. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Gastritis.
 7. Digestive Disease Center [Internet]; Medical University of South Carolina: Gastritis.
 8. Merck Manual Consumer Version [Internet]. Kenilworth (NJ): Merck & Co. Inc.; c2018. Gastritis.
 9. Genta RM. The gastritis connection: prevention and early detection of gastric neoplasms. J Clin Gastroenterol. 2003 May-Jun;36(5 Suppl):S44-9; discussion S61-2. PMID: 12702965.
 10. Nimish Vakil; Overview of Gastritis. The Merck Manual Professional Version [internet]. US.

இரைப்பை அழற்சி க்கான மருந்துகள்

Medicines listed below are available for இரைப்பை அழற்சி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.