கர்ப்பகால நீரிழிவு - Gestational Diabetes in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 24, 2019

March 06, 2020

கர்ப்பகால நீரிழிவு
கர்ப்பகால நீரிழிவு

கர்ப்பகால நீரிழிவு என்றால் என்ன?

கர்ப்பகால நீரிழிவு என்பது 100-ல் 7 கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான நோயாகும். கர்ப்ப காலத்திற்கு முன் இரத்த சர்க்கரையின் அளவு சரியாக இருக்கும் பெண்களில், சில சமயங்களில் கர்ப்ப காலத்தின் போது குளுக்கோஸ் சகிப்புத் தன்மையின்மை ஏற்படும். பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பெரும்பாலான நிகழ்வுகளில், கர்ப்பகால நீரிழிவிற்கு தொடர்புடைய அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை. இதன் மாற்றங்கள் மிகவும் நுட்பமானவை, எனவே பல பெண்கள் இதனை அசாதாரணமானவையாக அடையாளம் காண தவறிவிடுகின்றனர். மேலும், கர்ப்பதுடன் தொடர்புடைய மாற்றங்கள் உடலில் நிறைய ஏற்படும். எனினும், பின்வரும் அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் நீங்கள் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும்:

  1. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்று தோன்றுதல்.
  2. வழக்கத்திற்கு மாறாக அதிகமாக தாகமெடுத்தல்.
  3. சிகிச்சைக்குப் பின்னும் நோய்த்தொற்றுகள் குண்மடையாமல் மீண்டும் மீண்டும் ஏற்படுதல்.
  4. சோர்வு.
  5. குமட்டல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

சில நேரங்களில், பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது அறியப்படும் கண்டறியப்படாத நீரிழிவு நோய் இருக்கலாம். பெரும்பாலும், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதற்கு ஹார்மோனல் மாற்றங்களே காரணமாகின்றது. வளரும் குழந்தைக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் நஞ்சுக்கொடி பெண்களின் உடலில் ஹார்மோனைகளை உற்பத்தி செய்கிறது. இயற்கையாகவே இந்த ஹார்மோன்கள் குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும். ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் கர்ப்பகால நீரிழிவு நோயால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதிக எடை கொண்ட பெண்கள், முன் நீரிழிவு நோய், நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட குடும்ப பின்புலம், உயர் இரத்த அழுத்தம் அல்லது தைராய்டு நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்கள்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

கர்ப்பகாலத்தின் போது மேற்கொள்ளப்படும் பிறப்பிற்கு முந்தைய மற்றும் கருக்கால பரிசோதனையின் பகுதியாக இரத்த சர்க்கரை அளவும் பரிசோதிக்கப்டுகிறது. இது ஒற்றை சோதனையில் செய்யப்படலாம், இதில் உங்களை சர்க்கரை நிறைந்த திரவத்தை பருகச்செய்து உங்கள் இரத்தத்தை  சர்க்கரையின் அளவைக் கண்டறிய பரிசோதனை செய்வர். இது குளுக்கோசு ஏற்புத்திறன் சோதனை (ஓ.ஜி.டி.டி) என அழைக்கப்படுகிறது. இதற்கு மாறாக, சார்பற்றப்பகுப்பு முறையில் இரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டு, இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட குளுக்கோசு ஏற்புத்திறன் சோதனை (ஓ.ஜி.டி.டி) மேற்கொள்ளப்பட வேண்டு.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சாதாரண அளவிற்கு கொண்டுவருவதே இந்த சிகிச்சையின் குறிக்கோள் ஆகும். உணவுத் திட்டத்தின் மாற்றங்கள் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளால் இது சாத்தியமாகும். உணவுத் திட்ட மாற்றங்களால் மட்டுமே இதனை சரி செய்ய உதவாத போது, மெட்ஃபோர்மின் அல்லது இன்சுலின் போன்ற மருந்துகள் உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படலாம். கர்ப்ப காலம் முழுவதிலும் மற்றும் பிரசவத்திற்கு பின்னும் சர்க்கரை அளவை முறையாக கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.



மேற்கோள்கள்

  1. American Pregnancy Association. Gestational Diabetes. American Pregnancy Association
  2. Erma Jean Lawson. A transformed pregnancy: the psychosocialconsequences of gestational diabetes. Sociology of Health & Illness Vol. 16 No. 4 1994 ISSN 0141-988
  3. American Diabetes Association. Gestational Diabetes Mellitus. Alexandria Vol. 27, (Jan 2004): S88-90.
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Gestational diabetes
  5. Eman M. Alfadhli. Gestational diabetes mellitus. Saudi Med J. 2015; 36(4): 399–406. PMID: 25828275