மாரடைப்பு - Heart Attack in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

November 12, 2018

March 06, 2020

மாரடைப்பு
மாரடைப்பு

சுருக்கம்

மாரடைப்பு என்பது உடனடியாகக் கவனிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது ஆகும். மேலும், மிகவும் வழக்கமான மருத்துவ அவசர நிலைகளில் இதுவும் ஒன்று ஆகும். இது, இதயத் தசைகளுக்கு இரத்தத்தை செலுத்துகிற, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக ஏற்படுகிற, ஒரு திடீர் நிகழ்வு ஆகும். இரத்தக் குழாய்களின் சுவர்களில் படியும் பிளேக் எனப்படும் கொழுப்பு படிவுகள், மாரடைப்பின் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று ஆகும். புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன், அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, மது மற்றும் ஒரு சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை ஆகிய இவற்றின் கூட்டு சேர்க்கை, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றது. இதயக் குறிப்பான்களோடு இணைந்த ஒரு எலக்ட்ரோகார்டியோகிராம் (ஈசிஜி), ஒரு கடுமையான மாரடைப்பின் போது நோயைக் கண்டறிய உதவும். ஒரு வலுவான மாரடைப்பு ஏற்படும் நிகழ்வில், மருந்துகளோடு இதய ஆஞ்சியோபிளாஸ்டி-யும் கூடவே பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் எப்போதாவது பைபாஸ் நடைமுறையும் பரிந்துரைக்கப்படுகிறது. 

மாரடைப்பு அறிகுறிகள் என்ன - Symptoms of Heart Attack in Tamil

அறிகுறிகளின் வகை மற்றும் தீவிரம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாத போது, மற்றவர்களுக்கு கடுமையான நெஞ்சு வலி இருக்கக் கூடும். பெரும்பாலானவர்கள், திரும்பத் திரும்ப வரும் நெஞ்சு வலி, சோர்வு மற்றும் மூச்சிரைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய எச்சரிக்கை அறிகுறிகளை, மாரடைப்பின் சில நாட்களுக்கு அல்லது சில  மாதங்களுக்கு முன்னரே உணர்கின்றனர்.

அவ்வப்போது, முதல் அறிகுறியாக, நெஞ்சின் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டு அந்த வலி, இடது கை, தாடை, தோள்கள் அல்லது இந்தப் பகுதிகள் முழுவதும் பரவுகிறது. இந்த வலி, நீண்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக இருக்கும், கூடவே பின்வரும் இவையும் சேர்ந்து கொள்ளக் கூடும்:

 • மூச்சிரைப்பு.
 • குமட்டல்.
 • வாந்தி: பலர் அஜீரணம் காரணமாக வாந்தி வருவதாகவும், ஏப்பம் விடுதல் அல்லது அமில எதிர்ப்பு மருந்துகளை எடுத்த பிறகு சரியாகி விடலாம் என்றும் நினைக்கிறார்கள்.
 • அசௌகரியம்.
 • வெளிறிய தோல்.
 • பலவீனமான நாடித்துடிப்பு.
 • ஏறி இறங்கும் இரத்த அழுத்தம்.
 • அமைதியின்மை.
 • சோர்வான மற்றும் கவலையான எண்ணங்கள்.

மாரடைப்பு சிகிச்சை - Treatment of Heart Attack in Tamil

மாரடைப்புக்கு ஒரு மருத்துமனை அமைப்பிலேயே சிகிச்சை அளிக்க முடியும். மாரடைப்பு பிரச்சினையில் பின்வரும் சிகிச்சை மாதிரிகள் பயன்படுத்தப்படுகின்றன:

மருத்துவங்கள்

மருத்துவங்கள், இரத்தத் தட்டுகள் எதிர்ப்பு மருந்துகள்(இரத்த குழாய்களின் சுவர்களில் இரத்தத் தட்டுகள் திரள்வதைத் தடுக்கும் மருந்துகள்), இரத்த மெலிதாக்கிகள், இரத்த உறைவு தடுப்பிகள் (உறைதல்-உடைக்கும் மருந்துகள்), ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் வலிநிவாரணிகள் ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளில் இருந்து விடுவிக்கும் மருந்துகளை உள்ளடக்கியது ஆகும். கூடவே இரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடிய மற்றும் கொழுப்புச்சத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும் பயன்படும் மருந்துகளும் பயன்படுத்தப்படு கின்றனS, இது இதயத்தின் சுமையைக் குறைக்க மற்றும் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

அறுவை சிகிச்சை

மருந்துகளுடன், கீழே குறிப்பிடப்பட்டு இருக்கும் நடைமுறைகளில் ஏதேனும் ஒன்று கூட செயல்படுத்தப்படக் கூடும்:

 • இதய ஆஞ்சியோபிளாஸ்டி
  இதய ஆஞ்சியோகிராஃபியுடன் சேர்த்து கூடவே, அடைபட்ட இரத்தக் குழாயில், ஒரு ஸ்டென்ட் உள்ளே செலுத்தி பொருத்துவதன் மூலம் செய்யப்படுகிற ஆஞ்சியோபிளாஸ்டியும் செய்யப்படலாம். அந்த ஸ்டென்ட் அடைபட்ட இரத்தக் குழாயைத் திறக்கும், அதனால் இரத்த ஓட்டம் மறுபடி சீராகும்.
 • இதய இரத்தக் குழாய் பைபாஸ் அறுவை சிகிச்சை
  ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்கள், அடைபட்ட பகுதிக்கு, இரத்தம் மாற்று வழியில் செல்வதை உறுதி செய்ய வேண்டி, உடலின் ஆரோக்கியமான மற்ற உறுப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட, இரத்தக் குழாய்களை அடைபட்ட இரத்தக் குழாயை சுற்றி தைத்து புதிய இரத்த ஓட்டத்தை அறுவை சிகிச்சை மூலம் உருவாக்குகிறார்கள்.

வாழ்க்கைமுறை பராமரிப்பு

வாழ்க்கைமுறையை மாற்றியமைப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் சிறந்த வழி ஆகும். எதிர்காலத்தில் இதய நோய்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க பின் வரும் படிகள் உதவும்:

 • உடலுக்கு நல்ல அளவில் ஆக்சிஜனை வழங்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஓட்டம், மெது ஓட்டம், நீச்சல் மற்றும் யோகா போன்ற உடற்பயிற்சிகளை தினமும் செய்தல் வேண்டும். எந்த ஒரு பயிற்சியையும் ஆரம்பிக்கும் முன் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
 • ஆரோக்கியமான எடையைப் பராமரித்தல் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.
 • புகைப்பிடித்தலை நிறுத்துதல் வேண்டும் .மேலும். புகைப்பிடிப்பவரின் அருகே செல்லுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமான ஒரு தடுப்பு நடவடிக்கை ஆகும்.
 • ஒரு வாரத்திற்கு 14  யூனிட்களுக்கு மிகாத அளவில் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்..
 • உப்பு மற்றும் கொழுப்பு குறைவான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிக பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்துள்ள பொருட்களைச் சேர்த்துக் கொள்ள  வேண்டியது முக்கியமான ஒன்று ஆகும்.
 • முறையான உடல் நலப் பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டும் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரத்த அழுத்தத்தை சோதிக்க வேண்டியதும் அவசியமான ஒன்றாகும்.
 • பணியிடத்திலும் வீட்டிலும் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளித்தல் வேண்டும்.

மாரடைப்பு என்ன - What is Heart Attack in Tamil

இதய செயலிழப்பு எனவும் அறியப்படும் மாரடைப்பு, இதயத்துக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய்களின் ஒரு அடைப்பு காரணமாக ஏற்படுகிறது ஆகும். இதயத் தசைகள் இயங்குவதற்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை, இந்த இரத்த அளிப்பின் திடீர் நிறுத்தம் அழித்து விடுவதால், இதய வலி எனவும் அறியப்படும் நெஞ்சு வலிக்கு இட்டுச் செல்கிறது. 

இன்றைய கால கட்டத்தில் இந்த உலகத்தில் இதய நோய்கள் பெரும்பான்மையாக அதிகரித்து வருகின்றன. உலக அளவில் இறப்புக்கான காரணங்களில் இதய இரத்தக்குழாய் நோய்கள் முதலிடத்தில் இருக்கின்றன. 2016ஆம் வருடத்தில் மட்டும் 17.9 மில்லியன் இறப்புகளுக்கு அவை காரணமாயிருக்கின்றன, அந்த இறப்புகளில், நான்கில் மூன்று பகுதி இறப்புகள், நடுத்தர வருவாய் உள்ளவர்கள் மற்றும் வளரும் நாடுகளில் ஏற்பட்டவை ஆகும். வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் நகர மயமாக்கல் ஆகியவை இதயப் பிரச்சினைகள் அதிகரிக்க வழி வகுத்திருக்கிறது. இந்தியாவில் வருடத்திற்கு 0.5 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன, அந்த இறப்புகளில் 20% இதய நோய்களால் ஏற்பட்டவை என்று பதிவாகி இருக்கிறது.மேற்கோள்கள்

 1. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Cardiovascular diseases
 2. MSDmannual professional version [internet].Acute Myocardial Infarction (MI). Merck Sharp & Dohme Corp. Merck & Co., Inc., Kenilworth, NJ, USA
 3. Gupta R, Mohan I, Narula J. Trends in Coronary Heart Disease Epidemiology in India. Ann Glob Health. 2016 Mar-Apr;82(2):307-15. PMID: 27372534.
 4. inay Rao, Prasannalakshmi Rao, Nikita Carvalho. Risk factors for acute myocardial infarction in coastal region of india: A case-control study . Volume 2, 2014. Department of Community Medicine, Father Muller Medical College, Mangalore; DOI: 10.4103/2321-449x.140229.
 5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Heart Disease Risk Factors
 6. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Heart Attack
 7. National Health Service [Internet]. UK; Complications - Heart attack

மாரடைப்பு க்கான மருந்துகள்

மாரடைப்பு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

translation missing: ta.lab_test.sub_disease_title

translation missing: ta.lab_test.test_name_description_on_disease_page

translation missing: ta.lab_test.test_names