ஹெபடைடிஸ் பி - Hepatitis B in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)

December 10, 2018

September 11, 2020

ஹெபடைடிஸ் பி
ஹெபடைடிஸ் பி

சுருக்கம்

ஹெபடைடிஸ் பி (மஞ்சள் காமாலை) என்பது ஹெபடைடிஸ் பி என்ற வைரஸ் (HBV) கிருமியின் காரணமாக கல்லீரலில் ஏற்படும் ஒரு தொற்றுநோய் ஆகும். இது இரண்டு வகைகளானது - கடுமையான நோய்த்தொற்று (இது திடீரென தோன்றி விரைவாக மோசமடையலாம், ஆனால் சரியாக சிகிச்சை அளிக்கப்பட்டால் சிறிது காலத்தில் சரியாகிவிடும்) மற்றும் நாள்பட்ட தொற்று (இது நீண்ட நாட்களாக இருக்கக் கூடியது). இந்த நோய்தொற்றுக்குப் பிறகு, ஹெபடைடிஸ் பி வைரஸ் உடல் திரவங்களிலும் சுரப்புகளிலும் காணப்படும். வளர்ந்த நாடுகளில், HBV முக்கியமாக, பாதுகாப்பற்ற பாலின சேர்க்கை மற்றும் நரம்பு மூலம் மருந்துகள் எடுத்துக் கொள்ளப்படுவதன் மூலமும் பரவுகிறது. கடுமையான தொற்றுநோய் தலைவலி, வயிற்று அசௌகரியம், உடல் வலி, மூட்டு வலி, குமட்டல் மற்றும் இறுதியாக தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. மஞ்சள் காமாலை அதிகமாகும் போது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு தொடரும்.

நாள்பட்ட ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று கல்லீரலை சேதப்படுத்துவதோடு கல்லீரல் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம். கடுமையான ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்றுக்கு, வழக்கமாக ஒரு சிகிச்சை முறையாக போதுமான ஓய்வு, அதிகப்படியான திரவ உணவுகளை உட்கொள்ளல் மற்றும் ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். நாள்பட்ட ஹெபடைடிஸ் பி உள்ளவர்களுக்கு, கல்லீரல் நோய்க்கான அறிகுறிகள் உள்ளதா என தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை சாப்பிடத் தொடங்கப்படலாம். எனினும், வைரஸ்கான சிகிச்சையை தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுவதும் அந்த சிகிச்சை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்க்கு சிகிச்சை அளிக்கப்படாமலே இருந்தால், நாள்பட்ட HBV நோய்த்தொற்று கல்லீரலில் பாதிப்பு(வடு) அல்லது கல்லீரல் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்.

ஹெபடைடிஸ் பி அறிகுறிகள் என்ன - Symptoms of Hepatitis B in Tamil

நோய்த்தொற்றின் அறிகுறிகள் கடுமையானதா அல்லது நாட்பட்டதா என்பதைப் பொறுத்து மாறுபடும்.

கடுமையான ஹெபடைடிஸ் பி

கடுமையான ஹெபடைடிஸ் பி இன் அறிகுறிகள் பின்வருமாறு:

நாள்பட்ட ஹெபடைடிஸ் பி

நாள்பட்ட ஹெபடைடிஸ் பி இருக்கும் பெரும்பாலான மக்கள் எந்த தெளிவான அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை மற்றும் பல ஆண்டுகளாக எந்தவித அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கலாம். அறிகுறிகள் தோன்றும்போது, அவை கடுமையான தொற்றுநோய் வகையை போலவே இருக்கின்றது. அறிகுறிகள் உணவு மற்றும் சிகரெட்டை கண்டால் வெறுப்பு, இடைவிடாத மிதமான, வலது புற மேல் வயிற்றில் வலி போன்றவை ஆகும். கல்லீரல் செயல்பாடு குறித்த சில இரத்த பரிசோதனைகள் இந்த கட்டத்தில் அசாதாரணமான மதிப்பீடுகளைக் காட்டத் தொடங்கலாம்.

ஹெபடைடிஸ் பி சிகிச்சை - Treatment of Hepatitis B in Tamil

கடுமையான ஹெபடைடிஸ் பி

கடுமையான தொற்றில், பராமரிப்பு பெரும்பாலும் ஆதரவளிக்கக் கூடியது மேலும் நோயாளியின் உடல் நலத்தை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டுவருவதே சிகிச்சையின் முக்கியமான நோக்கமாக இருக்கும். பொதுவாக, மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. போதுமான அளவு ஊட்டச்சத்து சமநிலை, அதிக அளவு திரவ உணவு  மற்றும் ஓய்வு ஆகியவற்றை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். 

நாள்பட்ட ஹெபடைடிஸ் பி

நாள்பட்ட தொற்று பொதுவாக டெனோபோவிர் அல்லது என்டகேவிர் போன்ற வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுகிறது. சிகிச்சையானது ஈரலில் உண்டாகும் அழற்சியின் வளர்ச்சியை தடுக்க அல்லது மெதுவாக்க அல்லது குறைக்க மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான முன்னேற்றத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. சிகிச்சை வைரஸ் மெம்மேலும் பெருகுவதை மட்டுமே ஒடுக்குகிறது. இது நோயை குணப்படுத்துவதில்லை. எனவே, பெரும்பாலான மக்கள் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டும். 

வாழ்க்கைமுறை மேலாண்மை

ஹெபடைடிஸ் பி தொற்றை இன்னும் திறம்பட நிர்வகிக்க உதவும் பல வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளன. சில குறிப்புகள் இங்கே:

  • ஆல்கஹால் மற்றும் புகைபிடிப்பதை தவிருங்கள், இவை இரண்டும் கல்லீரலை சேதப்படும். இது HBV நோய்த்தொற்றின் போது ஹெபடைடிஸ் பி வைரஸ் மூலம் ஏற்கனவே காயப்பட்டிருக்கும் கல்லீரலை மேலும் மோசமாக்கும்.
  • நீங்கள் எந்த மூலிகை மருந்துகள் அல்லது வைட்டமின் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது அவசியம். ஏனெனில் இந்த மாற்று சிகிச்சைகளில் சில கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தலாம் அல்லது நீங்கள் ஏற்கனவே உண்ணும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் செயல்பாட்டில் கூட தலையிடலாம்.
  • உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் எந்த ஓவர்-த- கவுன்டர் மருந்துகளையும் (உதாரணமாக, பாராசிட்டமால்) எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த மருந்துகளில் பல கல்லீரலால் செரிக்கப்படுவதால் கல்லீரல் சேதமடையலாம்.
  • பச்சையான அல்லது சரியாக சமைக்கப்படாத ஸ்கால்ப்ஸ், மியூசல்ஸ் அல்லது கிளாம்களைப் போன்ற ஷெல்ஃபிஷ்-களை சாப்பிட வேண்டாம். அவற்றில் உள்ள பாக்டீரியா கலப்பினம் விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற ஒருவகை உயிரினம் கல்லீரலுக்கு மிகவும் நச்சுத்தன்மையுடையது.
  • பெயின்ட் தின்னர், வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள், நக பூச்சுக்களை அகற்றும் திரவம் போன்றவை நச்சுத்தன்மையுடன் இருப்பதால் அவற்றை நுகர்வதைத் தடுக்கவும்.
  • காய்கறிகள் மற்றும் பழங்கள், முழு தானியங்கள் கொண்ட ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். குறிப்பாக முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, மற்றும் காலிஃபிளவர் ஆகியவை கல்லீரலை பாதுகாக்க கூடியவை.
  • பயன்படுத்துவதற்கு முன்பு நட்ஸ், சோளம், நிலக்கடலை, மற்றும் சிறுதானியங்கள் ஆகியவற்றில் தோல்(உமி) உள்ளதா என்பதை கவனியுங்கள். தோல்(உமி)-யில் "அஃப்லடாக்சின்"  இருப்பதால் அது உங்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
  • தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யவும்.
  • நோயின்  தீவிரத்தை பொருத்து புரதம், திரவம் மற்றும் உப்பு ஆகியவை சாப்பிடுவதை கல்லீரல் அலற்சி ஏற்படாதவாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
Wheatgrass Juice
₹449  ₹499  10% OFF
BUY NOW

ஹெபடைடிஸ் பி என்ன - What is Hepatitis B in Tamil

ஹெபடைடிஸ் என்றால் கல்லிரலில் வீக்கம் அல்லது அழற்சி என்பதாகும். கல்லீரல் அழற்சி அடைந்தால், அதன் பெரும்பாலான செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன, ஏனெனில் பெரும்பாலான கல்லீரல் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று தொடர்புபடுடையவை. ஹெபடைடிஸ் பி வைரஸ் கல்லீரலில் தொற்றுவதையே ஹெபடைடிஸ் பி தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது.

உலகளவில், ஹெபடைடிஸ் பி வைரஸ் (HBV) தொற்று என்பது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய பிரச்சனை ஆகும். உலக சுகாதார அமைப்பு (WHO) நடத்திய ஆய்வின்படி, 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹெபடைடிஸ் பி வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சுமார் 24 கோடி மக்கள் நாள்பட்ட கல்லீரல் நோய்த்தொற்றுகளைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 7,80,000 க்கும் அதிகமானோர் கடுமையான அல்லது நாள்பட்ட ஹெபடைடிஸ் பி தொற்று காரணமாக இறக்கிறார்கள்.

உலகளாவிய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் இந்தியா அதிக அளவில் HBV யால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. உலகில் 10-15% HBV இந்தியாவில் காணப்படுகின்றன. 4 கோடி இந்தியர்கள் HBV யை கொண்டுள்ளனர் என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.



மேற்கோள்கள்

  1. Ray G. Current Scenario of Hepatitis B and Its Treatment in India. Journal of Clinical and Translational Hepatology. 2017;5(3):277-296. doi:10.14218/JCTH.2017.00024. PMID: 28936409
  2. Gautam Ray. Current Scenario of Hepatitis B and Its Treatment in India. J Clin Transl Hepatol. 2017 Sep 28; 5(3): 277–296. PMID: 28936409
  3. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Hepatitis B.
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Viral Hepatitis
  5. Lavanchy D. Hepatitis B virus epidemiology, disease burden, treatment, and current and emerging prevention and control measures. J Viral Hepat. 2004 Mar;11(2):97-107. PMID: 14996343
  6. Goldstein S.T., Zhou F., Hadler S.C., Bell B.P., Mast E.E., Margolis H.S. A mathematical model to estimate global hepatitis B disease burden and vaccination impact. Int J Epidemiol. 2005; 34:1329–1339. PMID: 16249217
  7. Dutta S. An overview of molecular epidemiology of hepatitis B virus (HBV) in India.. Viral J. 2008; 5:156. PMID: 19099581
  8. Am Fam Physician. 2004 Jan 1;69(1):75-82. [Internet] American Academy of Family Physicians; Hepatitis B.
  9. National Health Service [Internet]. UK; Hepatitis B.
  10. Shiffman ML. Management of acute hepatitis B.. Clin Liver Dis. 2010 Feb;14(1):75-91; viii-ix. PMID: 20123442

ஹெபடைடிஸ் பி க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஹெபடைடிஸ் பி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.