அக்கி - Herpes in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 10, 2018

March 06, 2020

அக்கி
அக்கி

சுருக்கம்

அக்கி என்பது, அக்கி சிம்ப்ளெக்ஸ் வைரஸால் ஏற்படக்கூடிய ஒரு வைரஸ் நோய்த்தொற்று ஆகும். இரண்டு வகையான அக்கி சிம்ப்ளெக்ஸ் வைரஸ்கள் உள்ளன- அக்கி சிம்ப்ளெக்ஸ் வைரஸ் 1 (எச்.எஸ்.வி 1) மற்றும் அக்கி சிம்ப்ளெக்ஸ் வைரஸ் 2 (எச்.எஸ்.வி 2). எச்.எஸ்.வி -2 முதன்மையாக பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக இருக்கிற வேளையில், எச்.எஸ்.வி -1 வாய் மற்றும் பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக இருக்கின்றது. இந்த வைரஸ். வாய், ஆசன வாய் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகள் போன்ற பகுதிகளின் தசை மேற்பரப்பிலும், உடலின் மற்ற பாகங்களில் உள்ள தோலிலும் பாதிக்கிறது. அக்கி குணப்படுத்த முடியாத ஒரு நீண்ட கால மருத்துவ நிலையாகும். அக்கியுள்ள நிறையப் பேர்களுக்கு, அவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தாலும் எந்தவித அறிகுறிகளும் காட்டாது. மற்றவர்களுக்கு, கொப்புளங்கள், புண்கள் மற்றும் குளிர் புண்கள் போன்ற அறிகுறிகள் காட்டலாம், மற்றும் சிறுநீர் கழித்தலின் போது வலியை உணரக் கூடும் அல்லது அவர்களுக்கு பிறப்புறுப்பு எச்.எஸ்.வி இருந்தால் பிறப்புறுப்பில் வெள்ளையாக வடிதலை அனுபவிக்கலாம். அக்கியைக் குணப்படுத்த முடியாது என்றாலும், அறிகுறிகளிலிருந்து விடுபட மருத்துவங்கள் உதவுகின்றன. பொதுவாக, அக்கி பிரச்சினையில் சிகிச்சைக்கு மிக நல்ல விளைவு ஏற்படுகிறது மற்றும் எந்த ஒரு சிக்கல்களுக்கும் காரணமாவதில்லை. அக்கியின் சிக்கல்கள், குழந்தைகளுக்கு அல்லது மோசமான நோய் எதிர்ப்பு அமைப்பைக் கொண்டவர்களுக்கு ஏற்படக் கூடும்.

அக்கி அறிகுறிகள் என்ன - Symptoms of Herpes in Tamil

அறிகுறிகள், அது உருவாகக் காரணமான அக்கி வைரஸின் வகையைப் பொறுத்தது. பெரும்பாலான நேரங்களில், அக்கி எந்த ஒரு அறிகுறியும் ஏற்படுத்தாது, மேலும் எச்.எஸ்.வி நோய்த்தொற்றுள்ள நிறையப் பேருக்கு அது  இருப்பதே அவர்களுக்குத் தெரியாது.

எச்.எஸ்.வி-1

 • வாய் அக்கி
  வாய் அக்கியின் அறிகுறிகள், ஒருவேளை தோன்றினால், வலிமிகுந்த காயங்கள், கொப்புளங்கள், புண்கள் உங்கள் வாயின் உட்புறமும் வாயை சுற்றியும் ஏற்படும் விதத்தில் இருக்கிறது. இந்தப் புண்கள் உதட்டின் மேல் அல்லது அதனை சுற்றி ஏற்படும் பொழுது அவை குளிர் புண்கள் என அறியப்படுகின்றன. புண்கள் தோன்றுவதற்கு முன் அவர்கள் கூச்சம், அரிப்பு அல்லது எரிச்சல் உணர்வை அனுபவிக்கிறார்கள் . முதல் முறைக்குப் பிறகு, புண்கள் வருங்காலத்தில் திரும்பவும் வரலாம். அவை திரும்ப வரும் முறைகளின் எண்ணிக்கை நபருக்கு நபர் வேறுபடுகிறது. (மேலும் படிக்க - அக்கியின் சிகிச்சை)
   
 • பிறப்புறுப்பு அக்கி
  பிறப்புறுப்பு அக்கி, அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறிகள் இல்லாமலோ இருக்கலாம். ஒருவேளை அறிகுறிகள் தோன்றினால், பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் ஒன்று அல்லது மேற்பட்ட புண்கள் அல்லது கொப்புளங்கள் அல்லது காயங்களின் படி அவை வகைப்படுத்தப்படுகின்றன. எச்.எஸ்.வி-1 காரணமாக ஏற்படும் பிறப்புறுப்பு அக்கியின் அறிகுறிகள், அடிக்கடி வருவதில்லை.

எச்.எஸ்.வி - 2

எச்.எஸ்.வி - 2 வைரஸ், எந்த அறிகுறிகளும் காட்டாத அல்லது காட்டினாலும் வெளிப்படையாகத் தெரியாத மற்றும் பெரும்பாலானவர்களால் கவனிக்கப்படாத அறிகுறிகள் உள்ள, பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகிறது. எச்.எஸ்.வி - 2வால் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 10 முதல் 20% பேர்கள், இந்தப் பிரச்சினை இதற்கு முன்னரே இருந்ததாகக் கூறுகின்றனர்.

 • எச்.எஸ்.வி - 2 காரணமாக ஏற்படும் பிறப்புறுப்பு நோய்த்தொற்றின் அறிகுறிகள், அவை ஏற்படும் பொழுது, பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் ஒன்று அல்லது மேற்பட்ட புண்கள் அல்லது கொப்புளங்கள் அல்லது காயங்களின் வடிவில் ஏற்படுகின்றன. எச்.எஸ்.வி - 2 வைரஸால் நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு, மிதமான கூச்சம் அல்லது ஒரு கூர்மையான வலியைக் கால்கள், இடுப்பு மற்றும் பின்புறங்களில் உணரலாம்.
 • முதல் முறை நோய்த்தொற்று ஏற்படும் பொழுது, அது காய்ச்சல், உடல் வலி மற்றும் வீங்கிய நிணநீர் முடிச்சு போன்றவற்றோடு ஏற்படலாம்.
 • நோய்த்தொற்றின் முதல் அத்தியாயம் முடிந்த பிறகு, வைரஸ் மறுபடியும் சுறுசுறுப்படையும் பொழுது மறுபடி வருவது வழக்கமானது, ஆனால், ஆரம்பத்தில் நோய்த்தொற்றின் பொழுது இருந்த அறிகுறிகளின் தீவிரம் குறைவாக இருக்கிறது. 
 • மறுபடியும் வருவது, முதல் வருடத்தில் மிகவும் அடிக்கடி திடீர் திடீரென ஏற்படுகிறது, பின்பு மெதுவாக, அடிக்கடி வருவது குறையத் தொடங்குகிறது. இது ஏனென்றால், உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு அமைப்பு வைரஸுக்கு எதிரான எதிர்மங்களை உற்பத்தி செய்கிறது.

அக்கி சிகிச்சை - Treatment of Herpes in Tamil

மருந்துகள்

ஒருமுறை ஒருவர் எச்.எஸ்.வியால் நோய்த்தொற்றுக்கு உள்ளானால், அந்த நோய்த்தொற்றை குணப்படுத்த இயலாது. நோய் மிகவும் பரவக்கூடியதாக இருப்பதால், நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பும் கடினமானதாக இருக்கிறது.

நோய்த்தொற்றினால் ஏற்படும் புண்கள் அல்லது காயங்கள், பெரும்பாலான நேரங்களில் எந்த சிகிச்சையுமின்றி தாமாகவே சரியாக முனைகின்றன. சிகிச்சைகள், அறிகுறிகளை சமாளிக்க உதவுகின்றன, வலியிலிருந்து நிவாரணம் அளித்து, அக்கி அத்தியாயங்களின் கால அளவைக் குறைக்கின்றன.

சிகிச்சைகளின் நிலையான முறையானது, வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதாகும். வைரஸ் எதிர்ப்பு க்ரீம்கள் மற்றும் களிம்புகள், தோல் மற்றும் தசை பரப்புகளின் அரிப்பு, எரிச்சல் மற்றும் கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன. வைரஸ் எதிர்ப்பு வில்லைகள், மாத்திரைகள் மற்றும் ஊசிகள், நோய்த்தொற்று குணமாக எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறைக்க உதவுகின்றன.

பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள், அசிக்ளோவிர், ஃபாம்ஸிக்ளோவிர் மற்றும் வெலாசிக்ளோவிர் ஆகியனவாகும். சுயமாக மருந்து எடுத்துக் கொள்வது ஆபத்தாகக் கூடும் என்பதையும், மருத்துவர்கள், நோயாளிகளின் குறிகள் மற்றும் அறிகுறிகள் மற்றும் தேவைகளின் அடிப்படையிலேயே, பல்வேறு மருந்துக்களைப் பரிந்துரைக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும். அதனால், எப்போதும் எந்த ஒரு மருந்து எடுத்துக் கொள்வதற்கு முன்பும் ஒரு மருத்துவரை ஆலோசிக்கவும்.

வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், நோய்த்தொற்றின் தீவிரத்தையும் கால அளவையும் குறைக்க உதவுகிறது, மேலும் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கவும் கூட உதவக்கூடும்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

அக்கி என்பது ஒரு வாழ்நாள் வைரஸ் பாதித்த நிலை, மேலும் ஒருவர் ஒருமுறை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால், இந்த வைரஸை உடலில் இருந்து அழிக்க எந்த வழியும் கிடையாது. இருந்தாலும், அந்த நபரைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், இந்த வைரஸினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கவனம் எடுத்துக் கொள்ள முடியும். பிறப்புறுப்பு அக்கி பிரச்னையில், வாழ்க்கைத்துணையை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க, குறிப்பிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் அக்கி ஏற்பட்டு இருக்கும் பொழுது உடலுறவைத் தவிர்ப்பதும் தேவைப்படலாம். உங்கள் உறவைப் பேணி பாதுகாக்க வெளிப்படையான, நேர்மையான தகவல் பரிமாற்றங்கள்  முக்கியமானது. உங்களுக்கு இதுபற்றிய கவலைகள் ஏதேனும் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

அக்கி என்ன - What is Herpes in Tamil

அக்கி ஒரு மிகவும் பொதுவான வைரஸ் ஆகும். பெரும்பாலும் 3ல் 1 நபர் அக்கிக்கு காரணமாகக் கூடிய வைரஸைக் கொண்டிருக்கிறார். இந்த வைரஸைக் கொண்டிருக்கும் அவர்களில் கிட்டத்தட்ட 80% பேருக்கு, அவை மிகவும் மிதமான அறிகுறிகளை காட்டுவதால் அல்லது எந்த அறிகுறியும் காட் டாததால், அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பதே அறியாமல் இருக்கிறார்கள். அக்கி சிம்ப்ளெக்ஸ் வைரஸ்கள் உலகம் முழுவதும் எங்கும் பரவியிருக்கின்றன, மேலும் மிகவும் உள்ளே தனித்து இருக்கும் மனிதக் கூட்டத்தில் கூட உள்ளது.

அக்கி என்றால் என்ன?

அக்கி என்பது, நேரடித் தொடுதல் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவக் கூடிய, அக்கி சிம்ப்ளெக்ஸ் வைரஸ் (எச்.எஸ்.வி) மூலம் ஏற்படுகிறது. இது, காலப்போக்கில் தானே ஆறிவிடக் கூடிய, பாதிக்கப்பட்ட இடத்தில் வலிமிகுந்த கொப்புளங்கள் அல்லது புண்கள் வடிவில் தோன்றுகிற, ஒரு பொதுவான வைரஸ் நோய்த்தொற்றாகும்.மேற்கோள்கள்

 1. Murtaza Mustafa, EM.Illzam, RK.Muniandy, AM.Sharifah4 , MK.Nang5 , B.Ramesh. Herpes simplex virus infections, Pathophysiology and Management IOSR Journal of Dental and Medical Sciences (IOSR-JDMS) e-ISSN: 2279-0853, p-ISSN: 2279-0861.Volume 15, Issue 7 Ver. III (July. 2016), PP 85-91
 2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Genital Herpes
 3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Herpes - oral
 4. New Zealand Herpes Foundation. The key facts about herpes. [Internet]
 5. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Herpes simplex virus.
 6. American Academy of Dermatology. Rosemont (IL), US; Herpes simplex

அக்கி க்கான மருந்துகள்

Medicines listed below are available for அக்கி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for அக்கி

Number of tests are available for அக்கி. We have listed commonly prescribed tests below: