ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் - Hyperhidrosis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 24, 2019

March 06, 2020

ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்
ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்

ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் என்றால் என்ன?

மனித உடலின் உள்ள முக்கிய வியர்வை சுரப்பியிலிருந்து நரம்பு தொகுதியின் அதீத செயல்பாடு காரணமாக நரம்பு முடுச்சுகள் தூண்டப்பட்டு அதிகமாக வியர்த்தல் ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் எனப்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட உடல் பகுதிகள், இந்த வியர்வை சுரப்பிகளின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டவை.

ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் இரண்டு வகைப்படும், அவை,

  • முதல் நிலை ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் – இது மருத்துவ நிலைகளில் குறிப்பிட்ட சில மருந்துகளை உட்கொள்ளுவதால் ஏற்படுகிறது.
  • இரண்டாம்நிலை ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் – இது வேறு சில அடிப்படை நிலைகளின் விளைவாக ஏற்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

அதிகமாக வியர்த்தல் என்பது மிகவும் சங்கடமாக உணரவைப்பதோடு   சமூக நடவடிக்கைகளில் பதற்றத்தையும் அதிகரிக்கும்.

முதல் நிலை ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் தொடர்பான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • கைகளில் வலது மற்றும் இடது புற அக்குள்கள், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மற்றும் முகம் போன்ற குறுகிய பகுதிகளில் வியர்வை படிதல்.
  • இரண்டு கைகளிலும் மற்றும் இரண்டு கால்களிலும் அதிகமான வியர்வை ஒரே மாதிரியாக ஏற்படுவது.
  • தூங்கும் போது வியர்வை ஏற்படாது.
  • இது பொதுவாக விடலை பருவத்தில் அல்லது 25 வயதிற்கு முன்பே தொடங்குகிறது.

இரண்டாம்நிலை ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்வுடன் தொடர்புடைய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • வியர்வை குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படுவதில்லை ஆனால் இது மிகவும் பொதுவாக ஏற்படுகிறது.
  • ஏதெனும் மருத்துவ நிலையின் அடிப்படை காரணமாகவும் அதிகமாக வியர்த்தல் வழக்கமாக ஏற்படுகிறது.
  • தூக்கத்தின் போதும் அதிகமாக வியர்த்தல் நிலை ஏற்படுகிறது.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

இந்த அதிகமான வியர்வை ஏற்படுவதற்கான காரணம் தெளிவாக இன்னும் அறியப்படவில்லை. மரபியல் காரணிகள் இந்த முதல் நிலை ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் ஏற்படுவதற்கான ஒரு பங்கை வகிக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் இயங்கமைப்பு பின்வருமாறு:

  • உடலில் உள்ள முக்கிய வியர்வை சுரப்பிகள் அதிகமாக சுரக்க தூண்டுதல்.
  • ஹார்மோன் பின்னூட்ட இயக்க செயல் பிறழ்ச்சி.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில அடிப்படை மருத்துவ நிலைகள் இரண்டாம்நிலை ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் ஏற்பட காரணியாகலாம்:

இது இன்சுலின் மற்றும் ஆன்டிசைகோடிக் போன்ற சில மருந்துகளுடன் தொடர்புடையது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

நோய்க்கான ஒரு முழுமையான அறிக்கை மற்றும் காட்சி மதிப்பீடு ஆகியவை நோயறிதல் கண்டறியப்படுவதற்கு மிக முக்கியம் ஆகும்.

  • ஆய்வுகள் பின்வருமாறு.
    • அயோடின்-ஸ்டார்ச் சோதனை.
    • வெப்பச்சீராக்கி வியர்வை சோதனை.
    • மொத்த இரத்த அணுக்களின் எண்ணிக்கை.
    • மார்பக எக்ஸ்-ரே.
    • ஹீமோகுளோபின் எ 1 சி.
    • தைராய்டு ஹார்மோன் சோதனை.

ஹைப்பர்ஹிட்ரோசிஸ் சிகிச்சையானது நோயின் அடிப்படை நிலையினை பொறுத்து அதன் சிகிச்சை முறையில் கவனம் செலுத்தப்படுகிறது.

முதல் நிலை ஹைப்பர்ஹிட்ரோசிஸ் நிலையில், அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர் ஆன்டிபர்சிபரண்ட் (வியர்வை அடக்கி), கிளைகோபைரோலேட் உள்ள களிம்பு, நரம்பு-தடுப்பு மருந்துகள், அல்லது. உளச்சோர்வு மருந்துகள் போன்றவற்றை பரிந்துரைக்கலாம்.

ஆரம்ப சிகிச்சை நிலையில் ஆன்டிபேர்ஸபிரண்ட்ஸ் கொடுப்பதை தொடர்ந்து 15-25% அலுமினியம் குளோரைடு ஹெக்ஸாஹைட்ரேட் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை நோயாளிக்கு சாதகமாக இல்லையெனில், வியர்வை சுரப்புக்கு காரணமான ரெசெப்டர்களை தடுக்கும் மருந்தினை மருத்துவர் பரிந்துரைக்கிறார். தேவைப்பட்டால், அதிகமாக சுரக்கும் வியர்வையை குறைப்பதற்கான கூடுதல் பொட்டுலினியம் ஊசிகள் அல்லது கூழ்ம (நிலை) அயனிப் பிரிகை மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

வியர்வை சுரப்பி நீக்கம் அல்லது நரம்பணு அறுவை சிகிச்சை முறை ஆகியவை அறுவை சிகிச்சையின் மூலம் இதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளாகும்.



மேற்கோள்கள்

  1. Brackenrich J, Fagg C.Hyperhidrosis. [Updated 2019 May 5]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
  2. Tanja Schlereth. et al. Hyperhidrosis—Causes and Treatment of Enhanced Sweating. Dtsch Arztebl Int. 2009 Jan; 106(3): 32–37. PMID: 19564960
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hyperhidrosis.
  4. National Organization for Rare Disorders. [Internet]. Danbury; Hyperhidrosis, Primary.
  5. National Institutes of Health; [Internet]. U.S. National Library of Medicine. VASER Treatment of Axillary Hyperhidrosis/Bromidrosis (VASER AxHH).

ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஹைப்பர்ஹிட்ரோஸிஸ். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.