உச்சந்தலை நமைச்சல் - Itchy Scalp in Tamil

Dr. Ayush Pandey

April 24, 2019

March 06, 2020

உச்சந்தலை நமைச்சல்
உச்சந்தலை நமைச்சல்

உச்சந்தலை நமைச்சல் என்றால் என்ன?

உச்சந்தலையில் நமைச்சல் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது எந்தவொரு காரணமும் இல்லாமல் அரிப்பு ஏற்படுவதால், இது மருத்துவர் மற்றும் நோயாளிகளுக்கு இருவருக்கும் இடையூறாக அமைகிறது. முடி உதிர்தல் அல்லது முடி உதிராமல் இருத்தல் மற்றும் கண்களுக்கு புலப்படக்கூடிய காயங்கள் தெரிதல் அல்லது தெரியாமல் இருத்தலைப் பொறுத்து இது இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

அதனோடு தொடர்புடைய முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

உச்சந்தலையில் உண்டாகும் நமைச்சலே ஒரு அறிகுறியாகும். ஆனால் இது மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்தும் வரலாம்: அவையாவன:

  • உச்சந்தலையில் வீக்கம்.
  • பொடுகு.
  • பேன்கள் மற்றும் அதன் ஈருகள்.
  • சிவந்த தடிப்புகள்.
  • உச்சந்தலை தோல் வறண்டு இருத்தல்.
  • சீழ் அல்லது பக்கு உதிர்தல்.

முக்கிய காரணங்கள் என்ன?

உச்சந்தலையில் நமைச்சல் பின்வரும் காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு அறிகுறியாகும்:

  • சருமநோய்க்குரிய, உச்சந்தலையில், சொரியாஸிஸ், எக்ஸிமா மற்றும் மற்ற பூஞ்சை தொற்று போன்ற தோலில் ஏற்படுவதால் இந்த அரிப்பு ஏற்படுவதாக இருக்கலாம்.
  • தலையில் பேன்.
  • நரம்புநோய்க்குரிய, இது நரம்பு இழைகளில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாகவும் ஏற்படலாம்.
  • லூபஸ் போன்ற முழு உடலையும் பாதிக்கும்அமைப்பு ரீதியான நோய்கள்.
  • உளவியல் / மனோவியல், இது உளவியல் மற்றும் மனோவியல் தொடர்பான (மனநோய் காரணத்தால் ஏற்படும் தீவிரமான உடல் நோய்கள், அல்லது மனநலம் காரணமாக மோசமான விளைவுகள்) தொடர்பான நோய்கள்.

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

தோலழற்சியால் ஏற்படுகின்ற அடிப்படை நிலையை கண்டறிவதன் மூலம் இதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பரிந்துரைக்க பயனுள்ளதாக இருக்கும்:

  • கவனி: நோயாளியின் மருத்துவ பின்புலத்தை கவனமாக விசாரித்தல்.
  • பார்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான உடல் மதிப்பீடு.
  • தொடுதல்: உச்சந்தலையில் தொட்டு அதன் தோற்றத்தை உணர்தல்.
  • பெரியதாக்குதல்: நுண்ணோக்கி கீழ் உச்சந்தலையில் கவனித்தல்.
  • மாதிரி சேகரிப்பு: சில சந்தர்ப்பங்களில், நோயறிதலை உறுதிப்படுத்த ஒரு நுண்நோக்கியின் கீழ் ஒரு திசு மாதிரியை பரிசோதிப்பதற்காக சேகரித்தல்.

உச்சந்தலை நமைச்சலுக்கான சிகிச்சை முறைகள் அடங்கியவை:

  • நாட்பட்ட ஃபோலிகுலிடிஸ் அல்லது உலர்ந்த சருமம் அல்லது முகப்பரு காரணமாக, உச்சந்தலை நமைச்சல் ஏற்பட்டிருந்தால் டெட்ராசைக்ளின் (டாக்சிசைக்ளின், மினோசைக்ளின்) மருந்துகள், பிஏஆர்-2 ஆன்டிபாடிகள் அல்லது எதிர்ப்பிகள் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • இது தடிப்புத் தோல் அழற்சியின் காரணமாக அல்லது சிவந்த தோலழற்சி அல்லது வியர்வை மிகு தோலழற்சியால் ஏற்பட்டிருந்தால் ஆண்டிஹிஸ்டமைன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • உச்சந்தலையில் ஏற்படும் படர்தாமரைக்கு பூஞ்சைக் காளான் எதிர்ப்பு மருந்துகளின் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
  • இடஞ்சார்ந்த ஸ்டிராய்டுகள் உச்சந்தலையின் அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சிக்கு பரிந்துரைக்கப்படலாம்.
  • நரம்பியல் காரணமாக ஏற்படும் நமைச்சலில், மேற்பார்வையுடன் கூடிய கனாபினாயிட் ரிசப்டர் அகோனிஸ்டுகள் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றன.
  • தலையில் பேன் மற்றும் அதன் ஈறுகளை அழிக்க அவற்றை தடுக்கும் மேற்பார்வையுடன் கூடிய பெர்மித்திரின் கொண்ட ஷாம்பூக்கள் தேவைப்படும். இது பொதுவாக ஒரு சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.



மேற்கோள்கள்

  1. Vázquez-Herrera NE. et al. Scalp Itch: A Systematic Review.. Skin Appendage Disord. 2018 Aug;4(3):187-199. PMID: 30197900
  2. Ghada A. Bin saif. The Itchy scalp - scratching for an explanation. Exp Dermatol. 2011 Dec; 20(12): 959–968. PMID: 22092575.
  3. Cleveland Clinic. [Internet]. Euclid Avenue, Cleveland, Ohio, United States; Do You Have an Itchy Scalp? 5 Common Problems and Fixes.
  4. Ploysyne Rattanakaemakorn and Poonkiat Suchonwanit. Scalp Pruritus: Review of the Pathogenesis, Diagnosis, and Management. Biomed Res Int. 2019; 2019: 1268430. PMID: 30766878.
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Dandruff, Cradle Cap, and Other Scalp Conditions.

உச்சந்தலை நமைச்சல் டாக்டர்கள்

Dr. Rohan Das Dr. Rohan Das Trichology
3 Years of Experience
Dr. Nadim Dr. Nadim Trichology
7 Years of Experience
Dr. Sanjeev Yadav Dr. Sanjeev Yadav Trichology
7 Years of Experience
Dr. Swadesh Soni Dr. Swadesh Soni Trichology
10 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

நகரின் Trichologist தேடல்

  1. Trichologist in Jaipur

உச்சந்தலை நமைச்சல் க்கான மருந்துகள்

Medicines listed below are available for உச்சந்தலை நமைச்சல். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.