ஈயநஞ்சேறல் (காரீயநச்சு) - Lead Poisoning in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 24, 2019

July 31, 2020

ஈயநஞ்சேறல்
ஈயநஞ்சேறல்

ஈயநஞ்சேறல் (காரீயநச்சு) என்றால் என்ன?

நம் சுற்றுச்சூழலில் பொதுவாக நடக்கும் காரீயம் உட்கொள்ளல் காரணமாக காரீய நஞ்சேற்றம் ஏற்படுகிறது. வளர்ந்த நாடுகள் காரீயத்தின் வெளிப்பாடு மீது கண்டிப்பான விதிகளை விதித்திருந்தாலும், அது இன்றும் வளரும் நாடுகளில் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள் பெரியவர்களை காட்டிலும் அதிகமாக காரீய நஞ்சேற்றத்திற்கு ஆளாகிறார்கள், இதற்கு காரணம், குழந்தைகளின் பொம்மைகளில் பயன்படுத்தப்படும் வண்ணப் பூச்சுகளில் இருக்கும் காரீயம் ஆகும். அனைத்து ரசாயன நஞ்சேற்ற நிகழ்வுகளிலும் கிட்டத்தட்ட 0.6 சதவிகிதம் காரீய நஞ்சேற்றம் நிகழ்வுகளாகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மீண்டும்மீண்டும் காரீயத்திற்கு வெளிப்படுவதனால் உடலில் ஈயத்தின் அளவு அதிகரிக்கிறது. அதன் செறிவு இரத்தத்தில் அதிகமாக இருந்தால், நாள்பட்ட அறிகுறிகள், கோமா, மற்றும் மரண அபாயம் கூட ஏற்படலாம். குழந்தைகள் இதனால் மிக எளிதில் பாதிக்கப்படலாம் என்பதால், இது அவர்களின் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சியை பாதிக்கும். காரீய நஞ்சேற்றத்தின் மருத்துவ வெளிப்பாடுகள் பின்வருமாறு:

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

முக்கிய சுற்றுச்சூழல் காரணிகள் பின்வருமாறு:

 • சாலையோர தூசி, கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்படும் சிமெண்ட்.
 • காரீயத்தால் செய்யப்பட்ட பழைய நீர் குழாய்கள்.
 • காரீய மெருகூட்டப்பட்ட உணவு பைகள்.
 • நிலையான பொருட்களான பென்சில், மை மற்றும் பொம்மைகள், ஆபரணங்கள்.
 • சில ஆயுர்வேத மருந்துகள்.

பெரியவர்களுக்கு, தொழில்சார் ஆபத்துக்கள் மற்றும் வாகன புகை ஆகியவை காரீய நஞ்சேற்றத்தின் காரணமாக இருக்கலாம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

முழுமையான உடல் பரிசோதனை மற்றும் நோயாளியின் வரலாறு இந்த நிலைக்கான முக்கிய காரணங்களை காட்டும். இது இரத்தத்தில் உள்ள காரீயத்தின் செறிவு அளவைக் கணக்கிட்டு கண்டறியப்படுகிறது. இது காரீய வெளிப்பாட்டின் தீவிரத்தைக் கண்டறிகிறது, முக்கியமாக குழந்தைகளில் இது செய்யப்படுகிறது. பெரியவர்களின் நீண்டகால காரீய வெளிப்பாடு துத்தநாக ப்ரோட்டோபார்ப்ரின் (ZPP) சோதனை மூலம் அளவிடப்படுகிறது.

சிகிச்சையில் முதலில், காரீய வெளிப்பாடு தவிர்க்கப்படுகிறது. வீடுகளில் இருக்கும் காரீயம் முழுவதுமாக அகற்றப்படுகிறது மற்றும் இது ஒரு அனுபவமுள்ள நபரால் செய்யப்பட வேண்டும். குழந்தைகளுக்கு காரீயத்தை உடலில் இருந்து அகற்றுவதற்கு உலோக நச்சுமுறித்தல் காரணி பரிந்துரைக்கப்படலாம்.

சில சுய பாதுகாப்பு குறிப்புகள்:

 • காரீயத்தால் ஆன பழைய குழாய்கள் அல்லது பிற குழாய் அமைப்பு பொருட்கள் நீக்கப்படவேண்டும்.
 • உங்கள் வீட்டை முறையாக சுத்தம் செய்யவேண்டும்.
 • ஓழுங்கான உணவு சாப்பிடவேண்டும்.
 • மும்முரமாக வேலை நடக்கும் பகுதிகளுக்கு அருகே செல்வது அல்லது விளையாடுவது கூடாது.

காரீயம் ஒரு விஷம் நிறைந்த பொருள், அதை அலட்சியப்படுத்த கூடாது. உயிர் சேதத்தை தவிர்க்க உடலில் இருந்து காரீயத்தை அகற்றுவது அவசியம்.மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Lead Poisoning
 2. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Lead exposure and your health
 3. Ab Latif Wani et al. Lead toxicity: a review. Interdiscip Toxicol. 2015 Jun; 8(2): 55–64. PMID: 27486361
 4. American Association for Clinical Chemistry. Lead Poisoning. [Internet]
 5. The Nemours Foundation. Lead Poisoning. [Internet]

ஈயநஞ்சேறல் (காரீயநச்சு) க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஈயநஞ்சேறல் (காரீயநச்சு). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.