நுரையீரல் நோய்த்தொற்று - Lung Infections in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

April 24, 2019

March 06, 2020

நுரையீரல் நோய்த்தொற்று
நுரையீரல் நோய்த்தொற்று

நுரையீரல் நோய்த்தொற்று என்றால் என்ன?

வைரஸ்கள், பூஞ்சை அல்லது பாக்டீரியா நுரையீரலைத் தாக்குவதன் விளைவாக ஏற்படும் நோய்த் தொற்றே நுரையீரல் நோய்த்தொற்று ஆகும். வைரஸ் நுரையீரல் நோய்த்தொற்று பாக்டீரியா நுரையீரல் நோய்த்தொற்றை விட பொதுவானதாகும். காசநோய், மூச்சுக்குழல் அழற்சி, மூச்சுநுண்குழாய் அழற்சி, சளிக்காய்ச்சல் மற்றும் நுரையீரல் அழற்சி (நிமோனியா) ஆகியவை பொதுவாக காணப்படும் நுரையீரல் நோய்த்தொற்றுக்கள் ஆகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பின்வரும் அறிகுறிகள் இதில் காணப்படுகின்றன:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

நுரையீரல் நோய்த் தொற்றுகள் பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது மைக்கோபிளாஸ்மா என்ற தனிவகையான பாக்டீரியா ஆகியவற்றால் ஏற்படலாம், இது ஒரு சிறப்பு வகை பாக்டீரியா ஆகும். நுரையீரல் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் பொதுவான பாக்டீரியாக்கள் ஸ்ட்ரெப்‌டொகாகஸ் நிமோனியே, ஸ்டெஃபிலோகோக்கஸ் ஓறியஸ், ஹீமோபிலஸ் வகைகள் மற்றும் மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிஸ் ஆகியவை ஆகும். நுரையீரல் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் பொதுவான வைரஸ்கள் மனித சுவாசநுண்குழல் அழற்சி வைரஸ், இன்ஃபுளுவென்சா வைரஸ்கள், மனித சுவாச அடினோவைரஸ்கள், பாராஇன்ஃபுளுவென்சா வைரஸ்கள் முதலியனவாகும். அசுபர்ஜிலசியம் என்ற பூஞ்சையும் பொதுவாக நுரையீரல் நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறது.

இந்த பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் காரணமாக ஏற்படும் நோய்த் தொற்றுகள் பின்வருமாறு:

 • காசநோய்.
 • நுரையீரல் அழற்சி.
 • சளிக்காய்ச்சல்.
 • மூச்சுநுண்குழாய் அழற்சி.
 • மூச்சுக்குழல் அழற்சி.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

நுரையீரல் நோய்த்தொற்றை கண்டறிய பின்வரும் சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்:

 • நோய்த்தொற்றின் போது உற்பத்தி செய்யப்படும் பிறபொருளெதிரிகளை சோதிக்க உதவும் இரத்த பரிசோதனைகள்.
 • பாக்டீரியா அல்லது வைரஸ்களின் இருப்பதைக் கண்டறிய கபம் பரிசோதனை.
 • நுரையீரலின் நிலையை அறிய மார்பு எக்ஸ்-ரே அல்லது சி.டி ஸ்கேன் போன்ற இயல்நிலை வரைவு சோதனைகள்.

நுரையீரல் நோய்த்தொற்றிற்கான சிகிச்சை அடிப்படை காரணத்தைப் பொறுத்தே ஆகும். நுண்ணுயிரி எதிர்ப்பிகள், பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் போன்றவை நுண்ணுயிரிகளை அகற்ற பரிந்துரைக்கப்படலாம். அறுவைசிகிச்சை அல்லது நுரையீரல் கழுவுதல் சில நேரங்களில் நோய்த்தொற்றை முழுமையாக அகற்றுவதற்கு தேவைப்படலாம்.

நுரையீரல் நோய்த்தொற்றை நிர்வாகிப்பதற்கான சுய பாதுகாப்பு குறிப்புகள் பின்வருமாறு:

 • நிறைய திரவங்களை எடுத்துக்கொள்ளுதல்.
 • மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்.
 • உடலுக்கு போதுமான ஓய்வு கொடுங்கள்.
 • காற்று ஈரப்பதமூட்டி அல்லது நீராவி மூச்சிழுத்தல் பயன்படுத்தவும்.
 • சுவாசத்தை எளிதாக்க தூங்கும் போது சற்று உயர்த்தி படுத்துக்கொள்ளுங்கள்.
 • நேரடியாக நுரையீரலை பாதிக்கும் புகைப்பிடித்தலை நிறுத்துதல்.
 • சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.மேற்கோள்கள்

 1. Alvaro Ruibal. et al. Lung Infection and Treatment . Journal of Lung Diseases and Treatment. [Internet]. OMICS International.
 2. State of Victoria. [Internet]. Department of Health & Human Services. Chest infections.
 3. NewYork-Presbyterian Hospital. [Internet]. New York, United States; TREATMENT FOR INFECTIOUS LUNG DISEASES.
 4. Speert DP. Bacterial infections of the lung in normal and immunodeficient patients.. Novartis Found Symp. 2006;279:42-51; disussion 51-5, 216-9. PMID: 17278384.
 5. South Dakota Department of Health. [Internet]. Pierre, SD; COMMON VIRAL RESPIRATORY DISEASES.

நுரையீரல் நோய்த்தொற்று க்கான மருந்துகள்

Medicines listed below are available for நுரையீரல் நோய்த்தொற்று. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.