மாஸ்ட் அணுப்பரவல் (மாஸ்டோசைடோசிஸ்) என்றால் என்ன?
சருமம் அல்லது கல்லீரல்,எலும்பு மஜ்ஜை போன்ற உள் உறுப்புகளில் அதிகப்படியான மாஸ்ட் செல்களை சிறிது சிறிதாகச் சேர்த்து பெருக்குவதால் இது மாஸ்டோசைடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.சில எலும்புகளின் வெற்று மையங்களில் உற்பத்தி செய்யப்படும் மாஸ்ட் செல்கள் ஒரு ஆரோக்கியமான நபருக்கு எந்த வித தொற்றும் ஏற்படாமல் இருக்க நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கான பொறுப்பை வகிக்கின்றன.எனினும் மாஸ்ட் செல் குறைபாடு உள்ள நபரின் உடலில் மாஸ்ட் செல்கள் பொருத்தமற்ற மாஸ்ட் செல்களை அதிக அளவில் பெருகி சேர்வதால், மாஸ்டோசைடோசிஸ் ஏற்படுகிறது.
மாஸ்டோசைடோசிஸ் இரண்டு வகைப்படும் அவை:
- தோல்தசை மாஸ்ட் அணுப்பரவல்: இந்த வகை மாஸ்ட் அணுப்பரவலில் சருமம் அதிகமாக பாதிக்கப்படுகிறது.மேலும் இந்த தொற்று குழந்தைகளில் பொதுவாக தென்படுகிறது.
- சிஸ்டமிக் மாஸ்ட் அணுப்பரவல்: ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன.இந்த வகையான மாஸ்ட் அணுப்பரவல் குறிப்பாக பெரியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மாஸ்ட் அணுப்பரவலின் அறிகுறிகள் உடலில் எந்த உறுப்பு பாதிக்கப்படுகிறது என்பதை பொறுத்து வேறுபடும், மாஸ்ட் அணுப்பரவலின் வகையைப் பொறுத்து, காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- தோல்தசை மாஸ்ட் அணுப்பரவல்: சில நேரங்களில் சருமத்தில் தோன்றும் கொப்புளங்களின் அசாதாரண வளர்ச்சி உடல் முழுவதும் பரவுதல்.
- சிஸ்டமிக் மாஸ்ட் அணுப்பரவல்: சில நபர்கள் 15-30 நிமிடங்களுக்கு தொடர்ந்து தீவிரமாக பாதிக்கும் அறிகுறிகளை அனுபவிக்கலாம்.அவை பின்வருமாறு:
- சோர்வு மற்றும் களைப்பு.
- வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற குடல் சார்ந்த நோய் அறிகுறிகள்.
- மூட்டு வலி மற்றும் தசை வலி.
- அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற சரும பிரச்சனைகள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மாஸ்ட் அணுப்பரவல் ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் மரபணு பிறழ்வுகள் மற்றும் மரபணு மாற்றங்கள் மாஸ்ட் அணுப்பரவல் உருவாவதில் முக்கிய பங்கு வகிப்பதாக கணடறியப்பட்டுள்ளன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மாஸ்ட் அணுப்பரவல் நோய் கண்டறிவதற்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- தோல்தசை மாஸ்ட் அணுப்பரவல் : நோயறிதலை கண்டறிய செய்யப்படும் முதல் படி சோதனை சரும பரிசோதனையாகும்.தோல் நோய் மருத்துவர் சருமத்தில் உண்டாகும் அறிகுறிகளான சிவத்தல், வீக்கம், மற்றும் அரிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை சரிபார்க்க பாதிக்கப்பட்ட பகுதியை தேய்த்து சோதனை செய்யலாம்.சரும திசுப் பரிசோதனை மாஸ்ட் அணுப்பரவல் நோய் ஏற்படுவதற்கான காரணத்தை உறுதிசெய்கிறது.
- சிஸ்டமிக் மாஸ்ட் அணுப்பரவல்: இதில் நோயினை கண்டறிய பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.அவை பின்வருமாறு:
- இரத்த பரிசோதனைகள்: இரத்தத்தில் உள்ள மொத்த இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ட்ரிப்டேஸ் நொதி அளவுகள் ஆகியவற்றை சரிபார்க்க செய்யப்படும் பரிசோதனைகள்.
- இரட்டை ஆற்றல் எக்ஸ்-ரே அப்சர்ப்டியோமெட்ரி (டெக்ஸா) ஸ்கேன்: எலும்பின் அடர்த்தி விகித்தை அளவிட செய்யப்படுகிறது.
- அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்: மண்ணீரல் மற்றும் கல்லீரல் விரிவடைதல் போன்ற உடல் ரீதியான மாற்றங்களை சரிபார்க்க செய்யப்படுகிறது.
- எலும்பு மஜ்ஜை திசுப் பரிசோதனை: நோயின் காரணத்தை உறுதி செய்ய உதவுகிறது.
இந்த நோயை குணப்படுத்த எந்த வித சிகிச்சையும் இல்லாத போதும், உகந்த பராமரிப்பு இந்நோயினால் ஏற்படும் அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது.இந்த மாஸ்ட் அணுப்பரவல் நோய்க்காண சிகிச்சையானது, இந்நோயின் வகையை பொருத்தும், நோயின் தீவிர நிலையினை பொருத்தும் அளிக்கப்படுகிறது.
- தோல்தசை மாஸ்ட் அணுப்பரவல்: மேற்பூச்சு ஸ்டீராய்டு கிரீம் மற்றும் எதிர்ப்பு ஒவ்வாமை மருந்துகள் ஆகியவை, தோல்தசை மாஸ்ட் அணுப்பரவல் பிரச்சனையின் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் தரும்.
- சிஸ்டமிக் மாஸ்ட் அணுப்பரவல்: இதனோடு தொடர்புடைய இரத்தக் கோளாறுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் சிஸ்டமிக் மாஸ்ட் அணுப்பரவல் அறிகுறியிலிருந்து விடுபட்டுக்கொள்ளலாம்.