மூளையுறைக்கட்டி (மெனின்ஜியோமா) - Meningioma in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 26, 2019

March 06, 2020

மூளையுறைக்கட்டி
மூளையுறைக்கட்டி

மூளையுறைக்கட்டி (மெனின்ஜியோமா) என்றால் என்ன?

மூளையுறைக்கட்டி (மெனின்ஜியோமா) என்னும் சொல்லானது மூளை உறையில் உள்ள கட்டியை குறிப்பதாகும்,மூளை உறையானது, மூளை மற்றும் தண்டு வடத்தை மூடி இருக்கும்.மூளையுறைக்கட்டிகள் பொதுவாக புற்றுநோய் அல்லாத மற்றும் மிகவும் மெதுவாக பரவக்கூடியாதாகும்.

அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

மூளை உறைக்கட்டிகள் உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.எச்.ஓ) வகைப்பாட்டின் படி அதன்  இருப்பிடம் மற்றும் நிலை  அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில்,கட்டியானது மிகப்பெரிய அளவில் வளர்ந்து மற்றும் அவை சிகிச்சை அழிக்கமுடியாத நிலை வரையிலும் கூட அறிகுறிகள் காட்டப்படாமல் இருக்கும்.மூளை உறைக்கட்டியின் மிகவும் பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

மூளையுறைக்கட்டிகள் ஏற்பட காரணம் என்னவென்று இன்றுவரை அறியப்படவில்லை ஆனால் இதற்கு மிகவும் சாத்தியமான காரணம் குரோமோசோம் 22 இன் மாற்றமாக என்று கருதப்படுகிறது.தலையில் தொடர்ந்து கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.இயக்குநீர்களுக்கும் (ஹார்மோன்களுக்கும்) மூளையுறைக்கட்டிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு உலகளவில் ஆராயப்படுகிறது.

நியூரோஃபைப்ரோமடோசிஸ் வகை 2, ஒரு மரபணு கோளாறு கூட மூளையுறைக்கட்டிகளாக உருவாக வாய்ப்பு உள்ளது.

இது எப்படி நோயறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

மூளையுறைக்கட்டி அறிகுறிகள் பெரும்பாலும் இறுதி நிலையில் அறியப்படுகின்றன,மற்றும் கட்டியானது வழக்கமாய் வேறொரு சிகிச்சைக்கு கணினிவரைவி கதிர்படம் (சி.டி. ஸ்கேன்) அல்லது காந்த ஒலி வரைவு (எம்.ஆர்.ஐ ஸ்கேன்) எடுக்கும் போது தற்செயலாக தெரியவரும்.

மருத்துவர் ஒரு விரிவான மருத்துவ ஆய்வு மற்றும் குடும்ப பின்னணியை பற்றிய அறிக்கையை எடுத்துக்கொள்கிறார், ஒரு நரம்பியல் பரிசோதனை  உட்பட ஒரு உடல் பரிசோதனையை நடத்தி, மூளைக்கட்டிக்குரிய நோயறிதலை உறுதிப்படுத்த ஸ்கேன் செய்யும்படி பரிந்துரைப்பார்.சி.டி. ஸ்கேன்ஸ் அல்லது எம்.ஆர்.ஐ.மெனின்ஜியோமாவின் அளவு மற்றும் சரியான இடத்தை தீர்மானிக்க செய்யப்படுகிறது.மேலும் அடுத்த நிலைகளுக்கு, இரத்தக் குழாய்களின் ஆஞ்சியோகிராம் சோதனையும் நோய் கண்டறிதலை உறுதிப்படுத்துவதற்காகவும் செய்யப்படலாம்.

சில மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் மூளையுறைக்கட்டியின் (மெனின்ஜியோமா) வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.சிகிச்சை வாய்ப்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

  • கவனித்தல் - பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மூளையுறைக்கட்டியின் (மெனின்ஜியோமா) வளர்ச்சி மிகவும் குறைவாகக் கொண்டிருப்பதால், நோயாளிகள் எந்த அறிகுறிகள் இல்லாமலோ அல்லது சில அறிகுறிகளுடன் இருப்பதற்கு பொதுவாக சிகிச்சையளிக்கப்படுவதில்லை, ஆனால் அவை அறிகுறிகளின் கட்டி வளர்ச்சிக்காக மற்றும் வேறு ஏதேனும் அறிகுறிகளுக்காக கவனமாக கண்காணிக்கப்படுகின்றன.
  • அறுவைசிகிச்சை - அறுவைசிகிச்சை என்பது மூளைக் கட்டிகளுக்கு முடிவு செய்யப்படுகிறது,இது பாதிக்கப்பட்ட பகுதி அல்லது கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்குவதன் மூலம் மேலும் ஏற்படும் வளர்ச்சியை தடுக்கிறது.
  • கதிர்வீச்சு - கதிரியக்க சிகிச்சையானது அறுவை சிகிச்சை சாத்தியமில்லாத இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.இது நிலைமையை மேலும் மோசமாகாமல்,கதிர்வீச்சு நோயின் ஏற்பட்டுள்ள இடத்தில் மட்டும்  அளிக்கப்பட்டு கட்டியை அழித்து, அதன் வளர்ச்சியை நிறுத்தவும் பயன்படுகிறது.
  • வேதிச்சிகிச்சை (கீமோதெரபி) - மூளையுறைக்கட்டிக்கு (மெனின்ஜியோமா)  வேதிச்சிகிச்சை (கீமோதெரபி) மிகுந்த ஏற்புடையதாக இருக்காது, இருப்பினும், மூளையுறைக்கட்டி அல்லது எந்த கட்டிகளுக்கும் கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை பயனற்றது எனக் கருதப்பட்டால், இதுவே கடைசி வாய்ப்பாகும்.



மேற்கோள்கள்

  1. Wiemels J, Wrensch M, Claus EB. Epidemiology and etiology of meningioma. J Neurooncol. 2010 Sep;99(3):307-14. PMID: 20821343
  2. American Association of Neurological Surgeons. [Internet] United States; Meningiomas.
  3. The Brain Tumour Charity [Internet]: Farnborough, United Kingdom; Meningioma.
  4. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Meningioma.
  5. Rogers L et al. Meningiomas: knowledge base, treatment outcomes, and uncertainties. A RANO review. J Neurosurg. 2015 Jan;122(1):4-23. PMID: 25343186

மூளையுறைக்கட்டி (மெனின்ஜியோமா) க்கான மருந்துகள்

Medicines listed below are available for மூளையுறைக்கட்டி (மெனின்ஜியோமா). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.