பக்கவாதம் - Paralysis in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

May 04, 2019

March 06, 2020

பக்கவாதம்
பக்கவாதம்

பக்கவாதம் என்றால் என்ன?

பக்கவாதம் என்பது உடலில் உள்ள சில அல்லது மொத்த பாகங்களும் அதன் செயல்திறனை ஒரு பக்கமாக அல்லது முழுமையாக  இழத்தல் ஆகும்.மூளைக்கும் உடலில் உள்ள தசைகளுக்கும் இடையே ஏற்படும் தவறான தகவல் பரிமாற்றத்தின் காரணத்தினால் இந்த பக்கவாத நோய் ஏற்படுகிறது.போலியோ, நரம்பு கோளாறுகள் போன்ற நோய்கள் அல்லது பிற காரணங்களினால் இந்த பக்கவாத நோய் ஏற்படலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்நோயின் முக்கிய அறிகுறியானது உடலின் சில பாகங்கள் அல்லது அனைத்து பாகங்களையும் நகர்த்த இயலாத ஒரு நிலை ஆகும்.இந்நோயின் பாதிப்பு திடீரென அல்லது மிக மெதுவாக ஏற்படலாம் இதன் அறிகுறிகள் விட்டு விட்டு ஏற்படக்கூடும்.இந்நோயினால் பாதிக்கப்படும் முக்கிய பாகங்கள் பின்வருமாறு:

  • முக பகுதி.
  • கைகள்.
  • ஒரு கை அல்லது கால் (ஓரங்கவாதம்).
  • ஒரு கை அல்லது கால் (ஓரங்கவாதம்).
  • இரு கால்கள் (கீழங்கவாதம்).
  • கைகள் மற்றும் கால்கள் நான்கினையும் (நாலங்கவாதம்).

இந்நோயினால் பாதிக்கப்பட்ட பாகங்கள் இறுக்கமாக அல்லது நெகிழ்வாக தோன்றலாம்.குறைந்த உணர்திறன் மற்றும் சில நேரங்களில் வலி ஏற்படலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பக்கவாத நோய் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள் பலவாகும்.இது தற்காலிகமாக அல்லது வாழ்நாள் முழுவதும் இருக்கலாம்.இதன் முக்கிய காரணங்கள்  பின்வருமாறு:

  • உடலின் ஒரு பக்கத்தில் திடீரென ஏற்படும் பலவீனம் (பாரிசவாதம் அல்லது தற்காலிகக் குருதிஓட்டத் தடைத் தாக்கம்).
  • விழித்த பிறகு அல்லது தூங்குவதற்கு முன் குறுகிய இடைவெளியில் ஏற்படும் பக்கவாதம் (தூக்க பக்கவாதம்).
  • விபத்து,  நரம்பு சேதம் அல்லது மூளை காயத்தின் காரணமாக ஏற்படும் பக்கவாதம்.
  • மூளையில் ஏற்படும் புண்கள் காரணமாக ஏற்படும் முகவாதம் (பெல்ஸ் பேல்சி).

பக்கவாதம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

பக்கவாத நோயானது அதன் அறிகுறிகளின் அடிப்படையில் முதன்மையாக கணடறியப்படலாம்.உடல் பரிசோதனையின் அடிப்படையில் எந்த வகையான பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை மருத்துவர் அறிவார்.இயல்நிலை வரைவு உத்திகளான, காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ), சிடி ஸ்கேன் போன்றவை மூளை மற்றும் தண்டு வடத்தின் விரிவான வரைவினை பெறவும், நரம்பு மண்டல வெப்ப கடத்தல்களை ஆய்வு செய்வதற்காகவும் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.

இந்நோய்க்கென குறிப்பிட்ட மருந்துகள் ஏதும் இல்லை.பொதுவாக பக்கவாத நோயின் நிர்வகிப்பு அதன் அடிப்படை காரணத்தை சார்ந்துள்ளது.மருந்துகள் அல்லாத மருத்துவ முறைகள் பின்வருமாறு:

  • உடலியல் மருத்துவம் (பிசியோதெரபி): வலிமை அதிகரிக்க மற்றும் தசை நார் திரளின் மேம்படுத்த.
  • நகர்வதற்கு உதவும் உபகரணங்கள்: சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோல் நோயாளிகள் சுதந்திரமாக நகர உதவி செய்கிறது.
  • தொழில்சார் நோய் மருத்துவம்: அன்றாட பணிகள் புரிய உதவும்.

பக்கவாதம் என்பது ஒருவரின் வாழ்க்கை தரம் மற்றும் சுய மரியாதையை பாதிக்கும் ஒரு நிலையாகும்.எனவே, இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான பராமரிப்பு மற்றும் ஆதரவு தேவைப்படுகிறது.



மேற்கோள்கள்

  1. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Paralysis.
  2. Christopher & Dana Reeve Foundation [Internet]; Short Hills, NJ. Stats about paralysis.
  3. National Health Service [Internet]. UK; Paralysis.
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Paralysis.
  5. National Health Portal [Internet] India; Faalij (Paralysis).

பக்கவாதம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for பக்கவாதம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.