ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் - Parasitic Infections in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 30, 2019

March 06, 2020

ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள்
ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள்

ஒட்டுண்ணி தொற்றுநோய்கள் என்றால் என்ன?

ஒட்டுண்ணி என்பது மனித உடலுக்குள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் உயிரினம் மட்டுமின்றி தேவையான ஊட்டச்சத்தை அதுவே பெறக்கூடியத்திறன் கொண்ட உயிரினம் என்று வகையறுக்கப்படுகிறது.

மனித உடலில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கான காரணிகள் ஒட்டுண்ணிகளே ஆகும், இவையே ஒட்டுண்ணி தொற்றுநோய்கள் என்று அழைக்கப்படுகின்றன. மனிதர்களில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு யுனிசெல்லுலாரிலிருந்து மல்டிசெல்லுலார் வரை உள்ள பல்வேறு வகைகளான ஒட்டுண்ணிகள் காரணிகளாக இருக்கின்றன.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

உடலின் எந்த பாகத்திலும் ஒட்டுண்ணிகள் நோய்த்தொற்றினை ஏற்படுத்தலாம். நோய்த்தொற்றில் ஈடுபட்டிருக்கும் உயிரினம் மற்றும் அது ஏற்பட்டிருக்கும் வழியை பொறுத்து, அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் வேறுபடலாம், அவை பின்வருமாறு:

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

 • நோய்த்தாக்குதல் ஏற்படுத்தக்கூடிய சில ஒட்டுண்ணிகளுள் அடங்குபவை புரோட்டோசோவா (ஒற்றை செல் கொண்ட உயிரினங்கள்) மற்றும் ஹெல்மின்த்ஸ் (புழுக்கள்) ஆகியவை ஆகும். 
 • ஒட்டுண்ணிகள் உடலினுள் பல்வேறு வழிகளில் நுழைகின்றது. மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடிய மிக பொதுவான வழி மாசுபட்ட உணவு உட்கொள்தல் அல்லது மாசுபட்ட தண்ணீர் அருந்துதல் ஆகும்.
 • நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதாலும் இந்த தொற்று பரவலாம்.
 • பாதிக்கப்பட்ட இரத்தம் மற்றும் மாசுபட்ட உடை அல்லது மாசுபட்ட வீட்டு பொருட்களை உபயோகப்படுத்துவதன் மூலமும் இந்த தொற்று ஏற்படலாம்.
 • மோசமான சுகாதாரம், கூட்ட நெரிசல் அதிகமான இடங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகள் ஆகியவைகளில் இந்த நோய்த்தொற்று மிக பொதுவாக ஏற்படக்கூடியது.
 • இன்னும் வளர்ச்சியடையாத நாடுகளிலிருந்து இடம்பெயர்பவர்களுக்கும், அடிக்கடி பயணிப்பவர்களுக்கும், அதிக ஆபத்தில் உள்ளனர்.
 • கொசுக்கள் மற்றும் மற்ற பூச்சிகள் மனிதர்களுக்கு இந்நோய்களை பரிமாற்றுகின்றன, அதாவது மலேரியா போன்ற நிகழ்வுகள் இவ்வாறே ஏற்படுகின்றன.
 • வேறு சில நோய்களால் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களுக்கு இந்த தொற்றுநோய் வளர்வதற்கான அதிக அபாயம் உள்ளது. உதாரணத்திற்கு புற்றுநோய், எச்.ஐ.வி மற்றும் நீரிழிவு போன்ற நிலைகள் ஆகும்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

 • உங்கள் உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் போது, இரத்த சோதனை மேற்கொள்வதன் மூலம் இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றும் நோய்த்தாக்கத்துக்கான மற்ற அடையாளங்களையும் வெளிப்படுத்துகின்றது.
 • கூடுதலாக, சிறுநீர் மற்றும் மலத்தின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு நுண்ணோக்கியில் மூலம் ஒட்டுண்ணிகளுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 • உள் உறுப்புகள் அல்லது திசுக்களிள் ஏதேனும் சேதம் இருக்கிறதா என்பதை கண்டறிய இமேஜிங் செயல்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை எக்ஸ்-கதிர்கள், சிடி ஸ்கேன்கள், அல்ட்ராசவுண்ட்ஸ் மற்றும் எம்ஆர்ஐ ஆகியவை ஆகும்.
 • இரைப்பைக் குழாயின் ஆரோக்கியத்தை சரிபார்க்க, எண்டோஸ்கோபி அல்லது கொலோனாஸ்கோபி போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.

தொற்றுநோய்க்கான சிகிச்சையின் முதலில் பங்குவகிப்பது மருந்துகளே ஆகும். இவை:

 • ஒட்டுண்ணிகளை நீக்க குறிப்பிட்ட ஆண்டிமைக்ரோபையல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. தொற்றினை ஏற்படுத்திய உயிரினத்தை பொறுத்து மருந்து வகைகள் அறிவுறுத்தப்படுகின்றன.
 • கடுமையான பலவீனத்துடன் திரவ இழப்பு ஏற்பட்டால் திரவ மாற்றம் செய்யுமாறு குறிப்பிடப்படுகிறது.
 • நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் சுய ஆரோக்கியத்தை பேணிக்காக்கவும் சுத்தமான சூழ்நிலைகளில் நன்கு சமைக்கப்பட்ட உணவை உட்கொள்ளமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேற்கோள்கள்

 1. Norman FF et al. Parasitic infections in travelers and immigrants: part I protozoa. Future Microbiol. 2015;10(1):69-86. PMID: 25598338
 2. Cambridge University Press [Internet]; United Kingdom. Parasitic infections in relation to practices and knowledge in a rural village in Northern Thailand with emphasis on fish-borne trematode infection.
 3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Parasitic Diseases.
 4. Varki A et al. Parasitic Infections. Essentials of Glycobiology. 2nd edition. Cold Spring Harbor (NY): Cold Spring Harbor Laboratory Press; 2009. Chapter 40.
 5. National Institutes of Health; [Internet]. U.S. National Library of Medicine. Parasitic Infections of the Gastrointestinal Tract.

ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் டாக்டர்கள்

Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 वर्षों का अनुभव
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 वर्षों का अनुभव
Dr. Lalit Shishara Dr. Lalit Shishara Infectious Disease
8 वर्षों का अनुभव
Dr. Alok Mishra Dr. Alok Mishra Infectious Disease
5 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் க்கான மருந்துகள்

ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।