பெல்லாக்ரா - Pellagra in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

April 30, 2019

March 06, 2020

பெல்லாக்ரா
பெல்லாக்ரா

பெல்லாக்ரா என்றால் என்ன?        

பெல்லாக்ரா என்பது வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் குரூப்பில் உள்ள வைட்டமின்களில் ஒன்றான நியாசின் குறைபாடு காரணமாக ஏற்படக்கூடிய ஒரு ஊட்டச்சத்து கோளாறாகும். இந்த குறைபாடு செரிமான மாலப்சார்சன் அல்லது மோசமான உணவு உட்கொள்தல் காரணத்தின் விளைவால் ஏற்படக்கூடியது. இது தோல், இரைப்பை குடல் பாதை மற்றும் நரம்பு மண்டலம் போன்றவைகளை பாதிக்கக்கூடிய ஒரு சிஸ்டமேட்டிக் கோளாறாகும். இந்த திசுக்களில் அதிகளவிலான செல்களின் உருவாக்கம் இருப்பதால், இதன் வெளிப்பாடுகள் முக்கியமாக அவைகளிலேயே காணப்படுகின்றன.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

பெல்லாக்ராவின் மிக பொதுவான அறிகுறிகளாக பெரும்பாலும் விவரிக்கப்படுபவை 3டிக்களாகும், அதாவது டையேரியா, டிமென்ஷியா மற்றும் டெர்மடிடிஸ் ஆகிய மூன்று ஆகும். டெர்மாடிடிஸ் என்பது வேனிற்கட்டி போல பிரதிபலிக்கக்கூடியது மட்டுமின்றி, சூரிய வெளிப்பாட்டினால் மேலும் அதிகரிக்கக்கூடியது. இந்நிலையில் தோல் சிவந்து காணப்படுவதோடு அரிப்புதன்மை வாய்ந்ததாக இருக்கின்றது. இதன் விளைவுகள் சமச்சீரான அமைப்புமுறையில் உடலின் இருபுறங்களிலும் காணப்படுகின்றன. இரைப்பை அறிகுறிகளுள் அடங்குபவை அடிவயிற்றில் ஏற்படும் அசௌகரியம், குமட்டல் மற்றும் டையேரியாவுடன் நீர்போக்கு மற்றும் அரிதாக இரத்த போக்கு போன்றவையாகும். நரம்பியல் வெளிப்பாடுகளுள் அடங்குபவை குழப்பம், நினைவக இழப்பு, மன அழுத்தம் மற்றும் சில நேரங்களில் ஏற்படும் ஹலூஸினேஷன்ஸ் ஆகும். இந்நிலை முன்னேற்றமடையும்போது, ​​ஒருவர் நிலைத்தவரி, சித்தபிரமையால் பாதிக்கப்படுவார், மேலும் சிகிச்சையளிக்காமல் விட்டுவிட்டால் மரணம் கூட சம்பவிக்கலாம்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

பெல்லாக்ரா எனும் நிலை முக்கியமாக உணவு பழக்கத்தில் நியாசின் குறைபாடு இருப்பதன் காரணமாகவே ஏற்படுகிறது. இது பொதுவாக சோர்க்கம்(ஜொவர்) அதிகமாக உட்கொள்ளும் உணவு பழக்கத்தை கொண்ட ஹைதராபாத்தில் உள்ள ஏழை மக்களிடத்திலேயே காணப்படுகிறது. ஜொவர் அல்லது சில சோளம்-சார்ந்த உணவு பழக்கம் நியாசின் உறிஞ்சுதலை தடுப்பதாக அறியப்படுகிறது. இரண்டாம் நிலை காரணங்களுள் அடங்குபவை போதிய அளவு உணவு உட்கொள்தல் இருப்பினும் சில இரைப்பை நிலையினால் நியாசின் உறிஞ்சப்படாமல் இருப்பதே ஆகும். அதேபோல, மது அருந்துதல், சில மருந்துகள் உட்கொள்தல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவையும் இந்நிலை ஏற்பட பங்குவகிக்கின்றன.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?        

பெல்லாக்ராவுக்கென குறிப்பிட்ட ஆய்வக சோதனை இன்னும் புலப்படவில்லை. எனவே, இந்நிலைக்கான கண்டறிதல் என்பது, வரலாறு, புவியியல் அமைவிடம் மற்றும் ஒருவரின் வாழ்க்கை பின்னணியைப் பொறுத்தது. சில சமயங்களில், சிறுநீர் சோதனையும் பயனுள்ளதாக இருப்பதோடு நியாசின் குறைபாடு, கழிவகற்ற பொருள்களில் காணப்படும்.

பெல்லாக்ராவின் காரணங்களை கையாளுவதில் இதன் சிகிச்சைமுறை ஈடுபடுகிறது. போதிய உணவின்மையால் ஏற்படும் பெல்லாக்ராவுக்கு நியாசின் சப்ளிமெண்ட்ஸ் உடைய உணவுகளை உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எளிதாக குணப்படுத்திவிடலாம். பாதிக்கப்பட்டவர்கள் சில நாட்களிலிருந்து சில வாரங்களுக்குள் இந்நிலையிலிருந்து நிவாரணம் பெற்று சிறப்பாக உணரக்கூடும். இருப்பினும், தோல் பிரச்சினைகள், குணமடைய சில மாதங்களாகும். நோயாளிகள் தங்கள் சருமத்திற்கு தகுந்த மாய்சுரைசிங்களை வழக்கமாக உபயோகப்படுத்துவதன் மூலமும் எப்போதும் வெளியே செல்வதற்கு முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலமும் சுய பராமரிப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது அவசியம். நரம்பு நியாசின் நிர்வாகத்தில் சில நன்மைகள் காணப்பட்டாலும், இந்நிலைக்கான அடிப்படை காரணிகள் உடையவர்களுக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும். 4-5 ஆண்டுகளுக்கு இந்நிலைக்கான சிகிச்சையை அளிக்கத்தவறிவிட்டால் மரணம் சம்பவிக்கலாம்.மேற்கோள்கள்

  1. Isaac S. The "gauntlet" of pellagra. Int. J. Dermatol. 1998 Aug;37(8):599. PMID: 9732006
  2. Park YK et al. Effectiveness of food fortification in the United States: the case of pellagra. Am J Public Health. 2000 May;90(5):727-38. PMID: 10800421
  3. Pownall HJ et al. Influence of an atherogenic diet on the structure of swine low density lipoproteins. J. Lipid Res. 1980 Nov;21(8):1108-15. PMID: 7462806
  4. Hegyi J, Schwartz RA, Hegyi V. Pellagra: dermatitis, dementia, and diarrhea. Int. J. Dermatol. 2004 Jan;43(1):1-5. PMID: 14693013
  5. Savvidou S. Pellagra: A Non-Eradicated Old Disease. Clin Pract. 2014 Apr 28;4(1):637. PMID: 24847436

பெல்லாக்ரா க்கான மருந்துகள்

பெல்லாக்ரா के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।