ஆண்குறி ஈஸ்ட் தொற்று - Penile Yeast Infection in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

May 04, 2019

March 06, 2020

ஆண்குறி ஈஸ்ட் தொற்று
ஆண்குறி ஈஸ்ட் தொற்று

ஆண்குறி ஈஸ்ட் தோற்று என்றால் என்ன?

ஈஸ்ட் என்பது பூஞ்சையின் ஒரு வகையாகும்.இது உடலின் செரிமான பாதை, வாய், தோல் மற்றும் பிறப்புறுப்புகள் போன்ற பல்வேறு உறுப்புகளில் வாழ்கிறது.ஆண்குறியில் சாதாரண ஈஸ்ட் வளர்ச்சியை விட அதிகமாக வளரும் போது ஆண்குறி ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது.இந்த நோய்த்தொற்று ‘கேண்டிடா அல்பிகான்ஸ்' என்று பெயரிடப்பட்ட ஒரு உயிரினம் காரணமாக ஏற்படுவதால் இது ‘கெண்டிடையசிஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.ஈஸ்ட் தோலுக்குள் இருக்கும் ஈரப்பதம் மற்றும் வெதுவெதுப்பான சூழ்நிலையில் அதிகமாக வளரும் என்பதால், இந்த கேண்டிடா தோற்று விருத்தசேதனம் செய்யப்பட்ட ஆண்களை விட விருத்தசேதனம் செய்யாத ஆண்களில் அதிகமாக காணப்படுகிறது.40 வயது மற்றும் அதற்கும் அதிக வயதான ஆண்களிடம் இந்த கேண்டிடா குடியேற்றத்தின் சாத்தியம் அதிகமாக உள்ளது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஆண்குறி ஈஸ்ட் தொற்று, ஆண்குறியின் கீழ்ப்பகுதியில் பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது:

ஆண்குறியின் தலைப்பகுதியில் ஒரு அரிக்கும் உணர்வு, ஆண்கள் அனுபவிக்கும் ஒரு பொதுவான அறிகுறியாகும்.

நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஆண்குறி ஈஸ்ட் தொற்றுகளுக்கு வழிவகுக்கும் ஈஸ்டின் அதிகரித்த வளர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள் பின்வருமாறு:

  • ஈரமான அல்லது வெதுவெதுப்பான சூழ்நிலைகள்.
  • பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (ஆரோக்கியமான பாக்டீரியாவைக் கொல்வதனால், இவை ஈஸ்டின் வளர்ச்சியைக் காக்கின்றன).
  • எச்.ஐ.வி தொற்று மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
  • வாசனையுள்ள சோப்புகள் மற்றும் ஷவர் ஜெல் மூலம் ஆண்குறியை கழுவுவதால் தோல் எரிச்சல் ஏற்பட்டு,  கேண்டிடா பெருக்கத்தின் ஆபத்தை அதிகரிக்கிறது.
  • யோனி ஈஸ்ட் தொற்று உள்ள ஒரு பெண்ணுடன் பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவில் ஈடுபடுதல்.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

ஆண்குறி ஈஸ்ட் தொற்றை உங்கள் மருத்துவர் கீழ்கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் கண்டறிவார்:

  • உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகளை கவனத்தில் கொள்ளுதல்.
  • உடல் பரிசோதனை செய்தல்.
  • ஆண்குறியின் ஒரு திரவ அல்லது திசு மாதிரி மாதிரியைப் பரிசோதித்தல்.

ஆண்குறி ஈஸ்ட் தொற்றுக்கு கிடைக்கக்கூடிய சிகிச்சைகள் பின்வருமாறு:

  • எதிர்ப்பு பூஞ்சை கிரீம்கள் அல்லது லோஷன்.
  • மலவாய் மருந்துக்கூடு.
  • பலவீனமான நோயெதிர்ப்பு காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நபர்களுக்கு வாய்வழி பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள்.

இந்த மருந்துகளில் பெரும்பாலானவை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலேயே மருந்தகங்களில் கிடைக்கக்கூடியவை.இந்த மருந்துகளை பயன்படுத்திய பிறகும் நோய்தொற்று நீடித்தால், உங்கள் மருத்துவர் ஒரு அதிகரித்த காலத்திற்கு புஞ்சை எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள பரிந்துரைப்பார்.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Yeast Infection Tests.
  2. Department of Health and Mental Hygiene [Internet]. New York; Yeast Infection.
  3. University of Rochester Medical Center Rochester, NY; Yeast Infection.
  4. Am Fam Physician. [Internet] American Academy of Family Physicians; Yeast Infections.
  5. Nyirjesy P,Sobel JD. Genital mycotic infections in patients with diabetes. Postgrad Med. 2013 May;125(3):33-46. PMID: 23748505
  6. C Lisboa et al. Candida balanitis: risk factors. The Journal of European Academy of Dermatology and Venereology Volume24, Issue7 July 2010 Pages 820-826