இதயச்சுற்றுப்பையழற்சி - Pericarditis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 04, 2019

March 06, 2020

இதயச்சுற்றுப்பையழற்சி
இதயச்சுற்றுப்பையழற்சி

இதயச்சுற்றுப்பையழற்சி என்றால் என்ன?

பெர்கார்டியம் என்பது இதயத்தின் மேற்பரப்பில் இருக்கும் இரட்டை-அடுக்கு உடைய மெலிதான உட்பை அமைவு ஆகும்.இதில் அழற்சி, சிவந்திருக்கும் தன்மை மற்றும் வீக்கம் போன்றவைகள் ஏற்படும் போது இது பெர்கார்டைடிஸ் என்று அழைக்கப்படுகின்றது.சில நேரங்களில், பெரிகார்டியல் அடுக்கில் கூடுதல் திரவங்கள் திரண்டிருக்கக்கூடும் அது பெரிகார்டியல் எஃபிஷன் என்ற அழைக்கப்படுகின்றது.பெர்கார்டைடிஸ் என்பது திடீரென உருவாகி மூன்று மாதங்களில் மறையக்கூடிய ஒரு கடுமையான நிலையாகும்.இது எல்லா வயதினருக்கும் பாதிப்பேற்படுத்தக்கூடியது, ஆனால் பொதுவாக ஆண்களில் 16 வயது முதல் 65 வயது வரையுள்ளவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

பெர்கார்டைடிஸினால் ஏற்படும் நெஞ்சு வலி மிகவும் கூர்மையானதாக இருப்பதோடு இருமும் போதும்,விழுங்கும் போதும் ஆழ்ந்து சுவாசிக்கும் போதும் இந்நிலை மேலும் மோசமடையலாம்.பெர்கார்டைடிஸின் மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

பெரும்பாலும், இதற்கான காரணங்கள் அறியப்படாமிலிருக்கின்றது, ஆனால் இது பின்வரும் காரணிகளால் அடிக்கடி ஏற்படுகின்றது:

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

பெர்கார்டைடிஸ் நோயறிதலுக்கு பயன்படுத்தப்படும் சோதனைகள் பின்வருமாறு:

 • இமேஜிங் சோதனைகள்
  இந்த சோதனையானது மார்பு மற்றும் இதயத்திற்கான எக்ஸ்-ரே, எகோகார்டியோகிராம், எலெக்ட்ரோகார்டியோகிராம் மற்றும் இதயத்தின் சி.டி ஸ்கேன் ஆகியவைகளை உள்ளடக்கியது.
 • ஆய்வக சோதனைகள்
  இதயத் தசையிலிருக்கும் சேதத்தை பரிசோதனை செய்ய டிராபோனின் I சோதனை, இரத்தக் கலாச்சார சோதனை, முழுமையான இரத்த எண்ணிக்கை, மாண்டோ சோதனை, எச்.ஐ.வி சோதனை, ஆன்டிநியூக்ளியர் ஆன்டிபாடி டெஸ்ட் மற்றும் எரித்ரோசைட் வண்டல் விகிதம் போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையின் சிகிச்சைக்கான கோர்ஸ் இதன் அடிப்படை காரணத்தை பொறுத்தே இருக்கின்றது.பின்வரும் சிகிச்சை முறைகள் இந்நிலை ஏற்படும் காரணங்களின் அடிப்படையில் கொடுக்கப்படுகின்றன:

 • நோய்த்தொற்றுக்கான வகையின் அடிப்படையில் மருந்துகள் வழங்கப்படுதல்:
  பாக்டீரியல் நோய்த்தொற்றுக்கான ஆன்டிபயோடிக்குகளும், பூஞ்சை நோய்த்தொற்றுக்கான ஆன்டிஃபங்கள் மருந்துகளும், மற்றும் வைரல் தொற்றுக்களுக்கான ஆன்டிவைரல்களும் பயன்படுத்தப்படுகின்றன.
 • பிற மருந்துகள்:
  உடலில் திரண்டிருக்கும் திரவத்தை அகற்றுவதற்கு ப்ரிட்னிசோன் மற்றும் டையூரியிக்ஸ் போன்ற கார்டிகோஸ்டீராய்டுகள்.
 • பெரிகார்டியோசென்டிஸிஸ்:
  இது ஊசியின் மூலம் உட்பை அமைவிலிருக்கும் திரவத்தை வடிய செய்யும் செயல்முறையாகும்.
 • பெரிகார்டியெக்டோமி:
  இது தீவிரமான வழக்குகளில் பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சையாகும், மேலும் பெரிகார்டியத்திலிருக்கும் சேதமடைந்த பகுதியை அகற்றுவதிலும் ஈடுபடக்கூடிய சிகிச்சை முறையாகும்.நீண்ட காலமாக பெர்கார்டைடிஸ் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த அறுவை சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.மேற்கோள்கள்

 1. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Pericarditis.
 2. National Health Service [Internet]. UK; Pericarditis.
 3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Pericarditis.
 4. National Health Portal [Internet] India; Pericarditis.
 5. Dababneh E, Siddique MS. Pericarditis. [Updated 2019 Apr 9]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.

இதயச்சுற்றுப்பையழற்சி க்கான மருந்துகள்

இதயச்சுற்றுப்பையழற்சி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।