பரவலான வாஸ்குலர் நோய் - PAD (Peripheral artery disease) in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 16, 2020

December 16, 2020

பரவலான வாஸ்குலர் நோய்
பரவலான வாஸ்குலர் நோய்

பரவலான வாஸ்குலர் நோய் என்றால் என்ன?

பரவலான வாஸ்குலர் (அல்லது தமனி) நோய் (பிவிடி) என்பது லூமனில் ஏற்பட்டிருக்கும் கொலஸ்ட்ராலின் உருவாக்கத்தால், உடலின் பல்வேறு பாகங்களுக்கு செல்லும் இரத்த நாளங்களில் குறுகிய நிலையை ஏற்படுவதை குறிக்கின்றது.இதனால் பொதுவாக, கால்கள் மற்றும் இடுப்பு பகுதிகளில் இருக்கும் தமனிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன.ஒருவேளை, சிகிச்சை அளிக்க தவறிவிட்டால் இந்நிலை வாழ்க்கை-அச்சுறுத்தல் நோய்களான மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

பெரும்பாலும், இந்நிலையினால் எந்த அறிகுறிகளும் ஏற்படுவதில்லை.ஆனால் சில வழக்குகளில் பின்வரும் அறிகுறிகளை எதிர் கொள்ள நேரிடலாம்:

 • கால்களில் ஏற்படும் வலி மற்றும் உணர்வின்மை.
 • கால்களின் ஏற்பட்டிருக்கும் காயங்கள் குணமடைதலுக்கான வேகம் குறைதல் அல்லது சில சமயங்களில் குணமடைய தவறுதல்.
 • வெளிறிய அல்லது நீல நிறத்தன்மையுடைய தோல்.
 • கால்விரகளின் நகத்தின் வளர்ச்சி குறைதல்.
 • கால்களில் ஏற்படும் முடி வளர்ச்சி குறைதல்.
 • இரண்டு கால்களிலும் தட்பவெட்ப நிலைகள் வேறுபடுதல்.
 • விறைப்பு செயலிழப்பு.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

பிவிடிக்கான முக்கிய காரணம் அதிரோஸ்கிளிரோஸ் ஆகும்.இதுவே இரத்த நாளங்களில் கொலெஸ்ட்ரால் உருவாகுவதற்கான வழிவகுக்கின்றது.பிவிடிக்கு வழிவகுக்கக்கூடிய பிற காரணிகள் பின்வருமாறு:

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

பிவிடியை கண்டறியும் முறைகள் பின்வருமாறு:

 • ஆரம்பக்கட்ட சோதனைகள்.
 • விரிவான மருத்துவ வரலாற்றை பற்றிய ஆய்வு.
 • உடலியல் பரிசோதனை, எ.கா., கணுக்கால் எலும்பு முறிவு குறியீடு.
 • மேற்கொண்ட சோதனைகள்: டோ-டிப் டிரெட்மில் உடற்பயிற்சி சோதனைகள்.
 • காந்த அதிர்வு ஆஞ்சியோகிராபி.
 • கம்ப்யூட்டேட் டோமோகிராபி ஆஞ்சியோகிராபி.
 • புற ஆஞ்ஜியோகிராம்.
 • டாப்ளர் அல்ட்ராசவுண்ட்.

இந்நிலைக்கான சிகிச்சையில் வாழ்க்கைமுறை மாற்றங்கள், மருந்துகள் அல்லது இரண்டின் கலவையும் இடம்பெறும்.இந்நோய் மருந்தினால் குணப்படுத்த முடியாத நிலையை அடையும் போது, அறுவை சிகிச்சை அறிவுறுத்தப்படலாம்.

வாழ்க்கைமுறை மாற்றங்களுள் அடங்குபவை:

 • புகைப் பழக்கத்தை நிறுத்துதல்.
 • வழக்கமான உடற்பயிற்சி.
 • மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்.
 • விழிப்புணர்வுடன் இருப்பதற்கான பயிற்சி.
 • நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துதல்.
 • இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்:

 • கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கான மருந்துகள்.
 • இரத்தம் உறைதல் தடுப்பதற்காக ஆன்டிபிளேட்லெட்கள் உபயோகப்படுத்துகின்றன.
 • உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள்.

பிவிடி சிகிச்சைக்கான அறுவை சிகிச்சை செயல்முறைகள்:

 • அதெரெக்டமி - பிளேக் அல்லது இரத்தம் உறைந்திருத்தலை நீக்குதல்.
 • பைபாஸ் - ஆரோக்கியமான இரத்த நாளங்களை பொருத்துவதன் மூலம் இரத்த சப்ளைக்கு மாற்று பாதையை உருவாக்குதல்.
 • பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி.