சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி) - Sciatica in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

February 07, 2019

September 10, 2020

சயாடிக்கா
சயாடிக்கா

சுருக்கம்

சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி) என்பது, உடலிலுள்ள சயாடிக் நரம்பில் உண்டாகும் ஒரு காயம் காரணமாக ஏற்படுகிற, ஒரு வலிமிகுந்த பிரச்சினையாகும். அறிகுறிகள், கீழே ஒரு காலுக்குப் பரவக்கூடிய, மரத்துப் போதலுடன் இணைந்த அடி முதுகு வலியை உள்ளடக்கியது. இது முக்கியமாக இரண்டு வகைப்படுகிறது – நரம்பாற்றல் சார்ந்தது மற்றும் சுட்டிக் காட்டுவது. அறிகுறிகள், திடீரென்று தோன்றுகின்ற மற்றும் விரும்பத்தகாததாக இருக்கின்றன. சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)க்கு காரணமாக பல்வேறு காரணிகள் இருக்கக் கூடும். பெரும்பாலான நிலைகளில், சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி), ஒரு முதுகு காயத்துடன் அல்லது நீண்ட கால செயலிழப்புடன் இணைந்திருக்கிறது. மற்ற காரணங்களில் அடங்கியவை, சரியான நிலையில் இல்லாமை, உடல் பருமன், நரம்புரீதியான குறைபாடுகள், முதுகெலும்பு அழற்சி, வழுக்கி வட்டுக்கள், தசைப்பிடிப்புகள் ஆகியனவாகும். சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி), 4-6 வாரங்களில் தானாகவே சரியாகிறது. ஆனால் ஒருவேளை அறிகுறிகள் தொடர்ந்தால், மருத்துவத் தலையீடு அவசியமாக மாறுகிறது. சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)க்கு, வலி-நிவாரண மருந்துகள், பிசியோதெரபி, மஸாஜ் போன்றவற்றால், மற்றும் தீவிரமான நிலைகளில், அறுவை சிகிச்சையால், சிகிச்சையளிக்க முடியும். சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)யின் அறிகுறிகளை, பல்வேறு வாழ்க்கைமுறை மாற்றங்களை இணைத்துக் கொள்வதன் மூலம், திறம்படக் கையாள முடியும். இருப்பினும், அறிகுறிகள் மறுபடி தோன்றினால், ஒரு மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாக இருக்கிறது. அது மட்டுமின்றி, சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி), சிகிச்சையளிக்காமல் விடப்பட்டால், அதிகரித்த வலி மற்றும் நிரந்தர நரம்பு சேதம் போன்ற சிக்கல்களுக்கு காரணமாகக் கூடும்.

சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி) அறிகுறிகள் என்ன - Symptoms of Sciatica in Tamil

அதிகமாகக் கூறப்படும் சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)யின் அறிகுறிகளில் அடங்கியவை:

 • கீழ் முதுகு, இடுப்பெலும்பு, காலின் பின்புறம் மற்றும் புட்டங்கள் ஆகியவற்றில் வலி. (மேலும் படிக்க - முதுகு வலி காரணங்கள் மற்றும் சிகிச்சை)
 • கால்களில் எரிச்சல் உணர்வு. 
 • அடிக்கடி, ஒரு கால் அல்லது பாதம் மரத்துப் போதல்.
 • ஒரு பாதத்தில் பலவீனம்.
 • கீழ்ப்புறமாகப் பரவும் வலி.
 • ஒரு கால் அல்லது பாதத்தை அசைப்பதில், நிற்பதில் அல்லது நடப்பதில் சிரமம்.
 • பாதத்தின் அசைவைத் தடுக்கின்ற, ஒரு கூச்ச உணர்வு.

உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிற சில அறிகுறிகள் இருக்கக் கூடும். அவற்றுள் அடங்கியவை:

 • கால்களில் நீடித்த மரப்புத்தன்மை.
 • சிறுநீர் பை மற்றும் குடலின் கட்டுப்பாட்டை இழத்தல். மேலும் படிக்க - சிறுநீர் கட்டுப்பாடின்மை சிகிச்சை )
 • காலில் பலவீனம்.
 • அசைக்க முயற்சித்தால் வலி.

சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)யின் அறிகுறிகள் பெரும்பாலும், கட்டுப்படுத்தப்பட்ட அசைவுகள் மற்றும் முதுகு, கால் மற்றும் பாதம் உட்பட உடலின் கீழ்ப்பகுதியில், சில நிமிடங்களில் போய் விடக்கூடிய, கூச்சம் அல்லது எரிச்சல் உணர்வுடன் கூடிய வலியுடன் தொடர்புடையவையாகும்.

இருப்பினும், சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)யின் அறிகுறிகள், சாக்ரோயிலாக் மூட்டு செயலிழப்பு போன்ற ஒரு பிரச்சினையை ஒத்ததாக இருக்கலாம். கர்ப்பம் போன்ற நிலைகளில், அடிமுதுகு வலி உணரப்படலாம். அதனால், இவை போன்ற அறிகுறிகள் உணரப்பட்டால், மற்ற பிரச்சனைகளுக்கான சாத்தியங்களை நீக்குவதற்கு, ஒரு முறையான நோய் கண்டறிதலை மேற்கொள்ள, ஒரு மருத்துவமனை பரிசோதனைக்கு உட்படுவது அவசியமானதாகும்.

சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி) சிகிச்சை - Treatment of Sciatica in Tamil

சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி) தானாகவே 4-6 வாரங்களில் சரியாகவில்லை என்றால், மருத்துவ தலையீடு தேவைப்படலாம். சிகிச்சை மாதிரிகளில் அடங்கியவை:

 • வலி நிவாரண மருந்துகள்
  மற்ற வகை சிகிச்சைகளுடன் கூட்டாக, வீக்கத்தைத் குறைக்கவும் உதவுகின்ற வலி நிவாரண மருந்துகளும் பரிந்துரைக்கப்படலாம். இந்த மருந்துகள், நரம்பு குணமாகும் வரையில் தற்காலிக வலி நிவாரணத்தை வழங்குகின்றன.
 • தண்டுவட ஊசிகள்
  இவை, வலி நிவாரணத்துக்காக நேரடியாக, தண்டுவடத்தில் ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகளை உள்ளடக்கியவை.
 • பிஸியோதெரபி
  பிஸியோதெரபி, சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)யோடு இணைந்த அறிகுறிகளை முன்னேற்றுவதில் பெரிதும் உதவுகிறது. அது, படிப்படியாக குணமாகவும் உதவுகிறது மற்றும் உடற்பயிற்சிகள் மற்றும் மஸாஜ் உத்திகளை உள்ளடக்கியது. சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி) இருப்பதாகக் கண்டறியப்பட்ட முதல் வாரத்திற்குள், ஒரு பிஸியோதெரபி ஆலோசனையைப் பெறுவது அறிவுறுத்தப்படுகிறது. இது, அறிகுறைகளை திறம்பட சமாளிப்பதன் மூலம், வலியையும் எளிதாக்க உதவும்.
 • அறுவை சிகிச்சை
  வலி எதிர்பார்த்தது போல் குறையவில்லை மற்றும் குறிப்பிடத்தக்க அசௌகரியத்துக்கு காரணமாகிறது என்றால், ஒரு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். அழுத்த நீக்க அறுவை சிகிச்சை, சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)யிலிருந்து நிவாரணத்தை வழங்குவதில் உதவக் கூடும். இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டு வரும் காலம், வழக்கமாக ஆறு வாரங்களாகும். அனைத்து அறுவை-சிகிச்சையற்ற முறைகளும் தோல்வியுறும் பொழுது, சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி)யைத் திறம்பட சமாளிப்பதில்,  அறுவை சிகிச்சை நன்மையளிக்கக் கூடியதாக இருக்க முடியும். வழுக்கி வட்டு காரணமாக ஏற்படும் கால் வலிக்கான அறுவை சிகிச்சை, பகுதி டிஸெக்டமி என அறியப்படுகிறது.

வாழ்க்கைமுறை மேலாண்மை

மருத்துவ அறிக்கைகளின் படி, சயாடிக் நரம்பு வலி, கையாள மிகவும் கடினமானது இல்லை, மற்றும் பெரும்பாலான நேரங்களில், அதனோடு இணைத்திருக்கிற வலி, ஒரு சில நாட்களில் குறைகிறது. இந்த வலியை எளிமையாக்க கூடிய பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றுள் அடங்கியவை:

 • முடிந்த அளவுக்கு மிதமான உடற்பயிற்சிகள் மற்றும் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.
 • வலியை எளிமையாக்க உதவும், சுறுசுறுப்பான நடைப்பயிற்சி மற்றும் பின்பக்க நீட்டி இழுத்தலை மேற்கொள்ளுங்கள்.
 • பின் முதுகுப் பகுதியிலுள்ள தசைகளை இலகுவாக்க, வெப்பப் பட்டைகளை பயன்படுத்துங்கள். வெப்பப் பட்டைகள் தயாராகவே கிடைக்கின்றன மற்றும் இயக்கத்தைக் கொணர்வதில் மிகவும் உதவிகரமானவையாகும். ஒரு வெப்பப் பட்டையை, ஒருநாளில் பல்வேறு முறை பயன்படுத்த இயலும்.
 • வெப்பப் பட்டையைப் பயன்படுத்திய பிறகு, வலி நிவரண களிம்புகளைத் தடவுங்கள். இந்தக் களிம்புகளும் தசைகளை இலகுவாக்கி வீக்கத்தைக் குறைக்கின்றன. வெப்பப் பட்டையில் இருந்து வரும் வெப்பம், களிம்பை நன்றாக உட்கிரகிக்க வைக்கவும், விரைவாக செயல்பட வைக்கவும் உதவுகிறது.
 • Iஒருவேளை, உங்கள் காலில் மரப்புத்தன்மையை நீங்கள் உணர்ந்தால், மரப்புதன்மையைப் போக்க உங்கள் பாதங்களைத் தரையில் மெதுவாகத் தட்ட முயற்சியுங்கள். உங்கள் பாதங்களைச் சுழற்றுங்கள். மரப்புத்தன்மை போக ஆரம்பிக்கும் பொழுது, ஒரு கூச்ச உணர்வை நீங்கள் அனுபவிக்கக் கூடும். உங்கள் காலை, தொடர்ந்து மெதுவாக அசையுங்கள், ஆனால், காலை விறைப்பாக மாற்றக் காரணமாகக் கூடும் என்பதால், திடீர் அசைவுகளைச் செய்யாதீர்கள்.  
 • வலியிலிருந்து நிவாரணம் பெற, நீங்கள் எப்போதாவது வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும், அவற்றை எடுத்துக் கொள்ளும் முன்பு, குறிப்பாக வேறு மருந்துகளையும் எடுத்துக் கொண்டிருந்தால், மருத்துவரைக் கண்டிப்பாக ஆலோசிக்க வேண்டும்.
 • உடலில் அழற்சியை தீவிரமக்காக் கூடியவை என்பதால், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்புப் பண்டங்களைத் தவிருங்கள். பச்சை காய்கறிகள் போன்ற அழற்சி-எதிர்ப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. வீட்டில் தயாரித்த இஞ்சி பசுமைத் தேநீர் அருந்துவது, அழற்சியைக் குறைப்பதில் பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. 
 • வெப்பப் பட்டைகள் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால், வெந்நீர் குளியல்கள் ஒரு நல்ல மாற்றாக இருக்கக் கூடும்.
 • உறுதியான மெத்தைகளில் உறங்குங்கள், ஆனால், அவை மிகவும் கடினமாக இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதே நேரத்தில், உங்கள் முதுகுக்கு எந்த ஆதரவையும் தராமல், வலியைத் தீவிரமாக்கக் கூடும் என்பதால், மிகவும் மென்மையான ஒரு மெத்தையில் உறங்காதீர்கள்.

செய்யக் கூடாதவை என அறிவுறுத்தப்படுபவை:

 • நீங்கள் மரப்புத்தன்மையை உணருகின்ற இடத்தில் குளிர்ச்சியான அழுத்தங்களைக் கொடுப்பது.
 • நீண்ட நேரங்களுக்கு உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு இருப்பது.
 • தசை வலிக்கு காரணமாமாகக் கூடிய, மிக அதிகளவு சிரமப்படுவது.
 • முதுகு வலியில் உதவாத, பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது.


மேற்கோள்கள்

 1. National Health Service [Internet]. UK; Sciatica
 2. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Sciatica
 3. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. Getting a leg up on sciatica. Published: September, 2005. Harvard University, Cambridge, Massachusetts.
 4. Cedars-Sinai Medical Center, US [internet]; Sciatica.
 5. STD-GOV, April 24, 2018 [internet] St SW, Rochester; Sciatica: Symptoms, Causes, Treatment and Exercises

சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி) டாக்டர்கள்

Dr Srinivas Bandam Dr Srinivas Bandam Orthopedics
2 वर्षों का अनुभव
Dr Kushal Gohil Dr Kushal Gohil Orthopedics
7 वर्षों का अनुभव
Dr. Sanjeev Kumar Dr. Sanjeev Kumar Orthopedics
10 वर्षों का अनुभव
Dr. Anand Chavan Dr. Anand Chavan Orthopedics
19 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி) க்கான மருந்துகள்

சயாடிக்கா (அடிமுதுகு நரம்புவலி) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

translation missing: ta.lab_test.sub_disease_title

translation missing: ta.lab_test.test_name_description_on_disease_page

translation missing: ta.lab_test.test_names