வயிற்று வலி - Stomach ache in Tamil

வயிற்று வலி
வயிற்று வலி

சுருக்கம்

வயிற்று வலி என்பது வயிற்று பகுதியில் எற்படும் வலியாகும் (மார்பு மற்றும் இடுப்புக்கு இடையில் உள்ள பகுதி). கல்லீரல், கணையம், பித்தப்பை, பித்தநீர், இனப்பெருக்க உறுப்புகள் (அல்லது பாலியல் உறுப்புகள்), சிறுநீர்ப்பை போன்ற  பல உறுப்புக்கள்  வயிற்றுப்பகுதிகளில் உள்ளன.இந்த உறுப்புகளில் ஏதேனும் ஒன்றின் மூலமாக வயிற்று வலி ஏற்பட்டு செயலிழப்பு, காயம், தொற்று அல்லது வீக்கங்கள் (வீக்கம்) ஏற்படலாம்.

எல்லோரும், சில நேரங்களில், வயிற்று வலியை அனுபவித்திருக்காலம். சிலருக்கு வழக்கமாக குறுகிய காலமாகவும் அல்லது அடிக்கடி கடுமையாகவும் இருந்திருக்ககூடும், சில நேரங்களில் அது ஒரு தீவிர  மருத்துவ  நிலைக்கும் உள்ளாக்கிருக்கலாம்.

இதற்கான சிகிச்சைகள், அடிப்படை காரணங்கள் மற்றும் அடிவயிற்று வலியை பொறுத்தாகும். இதற்கு வழக்கமாக மருந்துகள், திரவங்கள், சுய பராமரிப்பு, ஓய்வுகள், மற்றும்  அறுவை சிகிச்சைகள் மூலம் தீர்வு காணலாம்.

வயிற்று வலி காரணங்கள் என்ன - Causes of Stomach Pain in Tamil

கடுமையான உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் அல்லது தற்செயலான காயம், நச்சு சார்ந்த உணவுகள் , உணவு ஒவ்வாமை, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்று பிடிப்பு (வயிற்று வலி), மலச்சிக்கல், வாயு தொல்லைகள், வயிற்று புண்கள், தொற்று நோய்கள் அல்லது வீக்கங்கள், கட்டிகள் மற்றும் நீர்க்கட்டிகள் போன்ற காரணங்களால் வயிற்று வலி  இருக்கலாம். 

வயிறு வலி ஏற்படுவதற்கான காரணங்கள், வயிற்றில் வலி எந்த இடத்தில் ஏற்பட்டுகிறது என்பதை பொறுத்தது: 

 • மேல் வயிற்றின் மத்தியில் (எபிகேஸ்ட்ரிக் பகுதி):
  எபிகேஸ்ட்ரிக் பகுதியில் வலி இருந்தால், பின்வரும் ஏதாவது ஒரு காரணமாக இருக்கலாம்:
  • அமிலத்தன்மை (அசிடிட்டி): எபிகேஸ்ட்ரிக் வலிக்கு அசிடிட்டி மிகவும் பொதுவான ஒரு காரணம் ஆகும். உணவு குழாய் மீது வயிற்று அமிலம் எதுக்களித்து வருவதாலும் அதனால் உணவு குழாய், வயிற்று அமிலத்தால் நிரம்புவதாலும் அசிடிட்டி ஏற்படுகிறது.
  • வயிற்றுப் புண் அல்லது வயிற்றுப் புண் நோய்: திறந்த வெளி புண்கள் அல்லது வயிற்றின் உட்புற விளிம்பில் விரிசல் விடுதல் ஆகிய காரணங்கள், உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்பட வழி வகுக்கிறது.
  • GERD (கேஸ்ட்ரோஸ்பாஜியல் ரெப்லக்ஸ் டிசீஸ்): இது அடிக்கடி எதுக்களித்து உணவு குழாய் அல்லது வாய் மற்றும் வயிற்றை இணைக்கும் குழாய்க்கும் வயிற்றுக்கும் வயிற்றிலுள்ள உணவை, மீண்டும் மீண்டும் தலைகீழாக ஓட செய்யும் ஒரு செரிமான கோளாறு ஆகும். மேலும் படிக்கவும்: (GERD சிகிச்சை)
  • மயோர்கார்டியல் இஸ்கேமியா: இது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் குறைவு ஏற்படுவதன் காரணமாக ஏற்படுகிறது. இதன் காரணமாக இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பது இல்லை.
  • வயிற்றுப் அயோர்டிக் அனரிசம்: இந்த நோய் ஏற்பட்டால், உடலுக்கு இரத்தத்தை வழங்குவதற்கான முக்கிய இரத்த நாளமாகிய அயர்டா-வின் சுவர்கள் பலவீனமாகி, ஒரு சிறிய பலூன் போல வீங்கி பருத்து காணப்படும்.
  • கணையத்தில் வலி.
  • பித்தப்பை மற்றும் பொதுவான பித்த குழாய் பாதையில் அடைப்பு.
 • மேல் வலது பகுதி:
  பின்வரும் காரணங்களால் மேல் வலது பக்கத்தில் வயிற்று வலி இருக்கலாம்:
  • கடுமையான கோலிசிஸ்டிக்: பித்தப்பையின் வரிகளில் வீக்கம் காரணமாக வலி.
  • பிலியரி கோலிக்: பித்த நீர் குழாய்களை அடைத்துள்ள பித்தப்பை கற்கள் காரணமாக வலி.
  • கடுமையான ஹெபடைடிஸ்: நோய் தொற்று, அதிகப்படியான ஆல்கஹால் அல்லது போதைப்பொருள் துஷ்பிரயோகம், சில மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதகமான விளைவு, உணவிலுள்ள சில நச்சுகள் போன்றவற்றால் அல்லது சீழ் பிடித்தலால் (அப்ஸ்செஸ்) ஏற்படுகின்ற கல்லீரலின் வீக்கம்.
  • ஹெபடோமெகேலி: குடி பழக்கம், சில மருந்துகளின் பக்க விளைவு முதலிய காரணங்களால் கல்லீரலின் அசாதாரண விரிவாக்கம்.
  • டியோடினல் புண்: சிறு குடலின் மேல் பகுதியில் ஏற்படும் புண்.
  • ஹெர்பெஸ் ஜொஸ்டர்: முன்பு வெரிசெல்லா ஜொஸ்டர் வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட நோயாளிகள் மீண்டும் அதே வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதால் ஹெர்பெஸ் ஜொஸ்டர் ஏற்படுகிறது (ஹெர்பெஸ் சோஸ்டர்)
  • மயோர்கார்டியல் இஸ்கேமியா: இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் குறைவு ஏற்பட்டு இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு லேசான வாய்ப்புகள் உண்டு. ஒரு கொழுப்பு நிறைந்த பொருள் தமனிகளின் சுவர்களில் சேர்ந்து, கால போக்கில் அதிகரித்து தடிமனாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இந்த தடிமனான கொழுப்புப்லாக்யூஇதயத்திற்கு செல்லும் தமனி முழுவதையும் அடைப்பதால், கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த நோயால் மூச்சு விடுவதில் சிரமம், கழுத்தில், கை அல்லது தோள்பட்டை வலி, உடல் உழைப்பு இல்லாலே வியர்த்தல், முதலியவை ஏற்படலாம்.
  • வலது அடி மடல் நிமோனியா: வலது நுரையீரலின் கீழ் பகுதியில் நிமோனியா ஏற்படுதல்.
  • வலது சிறுநீரக கற்கள்: முதுகு பகுதியின் வல பக்கத்திலும் கூட அடிக்கடி வலி ஏற்படுதல்.
 • மேல் இடது பகுதி:
  கீழ்க்காண்பவை மேல் இடது வயிற்று பகுதியில் வலியை ஏற்படுத்தக்கூடிய சில பட்டியலிடப்பட்ட உடல் நல குறைபாடுகள்:
  • கடுமையான கணைய அழற்சி (லேசானது முதல் கடுமையானது வரை கணையத்தின் வீக்கத்தால் ஏற்படக்கூடிய வலி): வலி திடீரென ஏற்பட்டு உணவு உண்ணும்போது கடுமையாக மாறுவதோடு மேலும் அந்த வலி பல நாட்கள் நீடிக்கும்.
  • இரைப்பைப் புண்: பாக்டீரியா தொற்று, அதிகப்படியாக மது அருந்துதல், காய்ச்சலின்போது எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள், சில வலி நிவாரணிகள், மன அழுத்தம், காரமான உணவை சாப்பிடுவது போன்றவற்றால் இரைப்பைப் புண் உண்டாகலாம்.
  • இரைப்பை அழற்சி - காஸ்ட்ரிக்ஸ் (வயிற்றின் வரிகளில் வீக்கம்)
  • மண்ணீரல் விரிவடைதல், சேதம் அல்லது மண்ணீரலில் அடைப்பு (இரத்த ஓட்டத்தில் தடை)
  • மயோர்கார்டியல் இஸ்கேமியா
  • இடது அடி மடல் நிமோனியா
  • சிறுநீரக கற்கள்: முதுகு பகுதியின் வல பக்கத்திலும் கூட அடிக்கடி வலி ஏற்படுதல்.
 • கீழ் வலது பகுதி:
  பின்வரும் காரணங்களால் கீழ் வலது பக்கத்தில் வயிற்று வலி இருக்கலாம்:
  • குடல் வால் அழற்சி (அப்பெண்டிசிட்டிஸ்): அடிவயிற்றின் கீழ் வலது பக்கத்தின் பெருங்குடலில் இருந்து அதிகப்படியாக நீட்டிக்கொண்டுள்ள வால் போன்ற விரல்-வடிவ குழாய் பையில் ஏற்படும் அழற்சி இது. வலி கடுமையாகதாக  இருக்கும் மேலும் உடனே அவசர சிகிச்சை பெறுவது தேவைப்படும்.
  • கிழிந்த இடம் மாறிய கர்பம்: ஒரு கருவுற்ற முட்டை கருப்பையை விட்டு வேறு இடத்தில் பொருந்தி வளரத் தொடங்கும். இந்த கருவுற முட்டை கருப்பையிலிருந்து வெளியே வளர்ந்து பெலோப்பியன் குழாயை (கருமுட்டை குழாயை) கிழித்துவிடும். எனவே இது ஒரு ஆபத்தான மருத்துவ அவசர நிலை ஆகும்.
  • சிறு குடல் அடைப்பு: ஏதேனும் ஒரு குடல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் சிகிச்சைமுறை / வடு திசுக்களின் பகுதிகள் அல்லது பட்டைகள் குடலை அடித்துக்கொள்ள கூடும்.
  • குடல் சம்பந்தமான பகுதி (ரீஜியனல் என்டேரிஸிஸ்) அல்லது கிரோன் நோய்: இது ஒரு நீண்ட கால குடல் அழற்சி நிலை. இது பொதுவாக சிறு குடல் மற்றும் பெருங்குடல் இரண்டையும் பாதிக்கிறது.
  • பெல்விக் அழற்சி நோய்: ஒரு பெண்ணின் இனப்பெருக்க அல்லது பாலியல் உறுப்புகளின் ஏற்படும் நோய் தொற்று இதுவாகும்.
  • முறுக்கப்பட்ட கருப்பை நீர்க்கட்டி: இந்த பிரச்சனையில் கருப்பை மற்றும் கருப்பை குழாயின் பகுதியளவு அல்லது முழுவதும் அதன் இரத்த ஓட்டத்துடன் சேர்ந்து சுழன்று முறுக்கப்பட்டிருக்கும்.
  • குடலிறக்கம்: சிறிய குடல் அல்லது கொழுப்பு திசு போன்ற உறுப்பு அதனை சுற்றியுள்ள தசை அல்லது ஃபைசியா எனப்படும் இணைப்பு திசு உள்ள ஒரு பலவீனமான இடத்தின் மூலம் தள்ளுவதால் குடலிறக்கம் உண்டாகிறது.
  • யூரேட்டேரல் கால்குலி: சிறுநீர் குழாயில் உள்ள கற்கள்.
 • கீழ் இடது பகுதி:
  உங்களுக்கு வயிற்றின் கீழ் இடது பகுதியில் வலி இருந்தால், நீங்கள் பின்வரும் ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புக்கள் அதிகம்.
  • டிவெர்ட்டிகுலிட்டிஸ்: குடலின் சுவர்களில் வளரும் டிவெர்ட்டிகுலா என்று அழைக்கப்படும் சிறு பைககளில் ஏற்படும் வீக்கம் அல்லது ஏதேனும் தொற்று.
  • கசியும் இரத்த நாளம்: ஏதேனும் நெளிந்த ரத்த நாளத்தில் கிழிசல் ஏற்பட்டு அதனால் இரத்தக் குழாயின் சுவற்றினுள் இரத்த கசிவு ஏற்படலாம். இது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆபத்தான நிகழ்வு ஆகும் .
  • கிழிந்த இடம் மாறிய கர்பம்
  • பெல்விக் அழற்சி நோய்/குறைபாடு
  • முறுக்கப்பட்ட கருப்பை நீர்க்கட்டி: இந்த பிரச்சனையில் கருப்பை மற்றும் கருப்பை குழாயின் பகுதியளவு அல்லது முழுவதும் அதன் இரத்த ஓட்டத்துடன் சேர்ந்து சுழன்று முறுக்கப்பட்டிருக்கும்.
  • யூரேட்டேரல் கால்குலி: சிறுநீர் குழாயில் உள்ள கற்கள்.
  • குடலிறக்கம்: சிறிய குடல் அல்லது கொழுப்பு திசு போன்ற உறுப்பு அதனை சுற்றியுள்ள தசை அல்லது ஃபைசியா எனப்படும் இணைப்பு திசு உள்ள ஒரு பலவீனமான இடத்தின் மூலம் தள்ளுவதால் குடலிறக்கம் உண்டாகிறது.
  • குடல் சம்பந்தமான பகுதி (ரீஜியனல் என்டேரிஸிஸ்) அல்லது கிரோன் நோய்: இது ஒரு நீண்ட கால குடல் அழற்சி நிலை. இது பொதுவாக சிறு குடல் மற்றும் பெருங்குடல் இரண்டையும் பாதிக்கிறது.
 • நடு மத்திய (பெரிஅம்பிளிகள் - தொப்புள்) பகுதி:
  • குறுக்கு (ட்ரான்ஸ்வேர்ஸ்) பெருங்குடல் நோய்: வயிற்றில் வலது பக்கம் இருந்து இடது பக்கமாக பெருங்குடலின் நடு பகுதி விரிவடையும்.
  • குடல் சம்பந்தமான பிரச்சனைகள் (கேஸ்ட்ரோஎண்டெரிடிஸ்): வயிறு மற்றும் குடல் பகுதியில் அழற்சி ஏற்படுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படுகிறது.
  • குடல் வால் அழற்சி
  • ஆரம்ப குடல் அடைப்பு: வயிற்றில் அறுவை சிகிச்சை செய்வதால் குடல் அடைப்பு என்னும் ஒரு சிக்கல் ஏற்படுகிறது.
 • பரவலான வலி:
  வயிற்றுப் பகுதியில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் வலி ஏற்பட்டால், அல்லது தொடர்ச்சியாக வலி இடம் மாறினால், அல்லது எங்கு வலிக்கிறது என்று இடைத்தை சுட்டி காட்ட முடியாவிட்டால் பரவலான வலி  என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், நோயாளி எங்கு வலிக்கிறது என கண்டுபிடிக்க கடினமாக இருப்பதால் குழம்பிவிடுவர். இது போன்ற ஒரு வலி ஏற்படுவதற்கு சாத்தியமான காரணங்கள் பின்வருமாறு:
  • பொதுவான பெரிடோனிட்டிஸ்: பெரிட்டோனியம் எனப்படும் வயிற்றின் உள் சுவரைக் குறிக்கும் திசு பெரும்பாலான வயிற்றின் உறுப்புகளிலும் காணப்படுகிறது. அந்த திசுவில் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும் வீக்கம் இதுவாகும்.
  • கடுமையான கணைய அழற்சி
  • சிக்கில் செல் நெருக்கடி: இது சிக்கில் செல் நோய் உள்ள நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. அரிசி வடிவ அல்லது வளைந்த சிவப்பு இரத்த அணுக்கள் சிறிய இரத்த நாளங்களில் மாட்டி கொண்டு இரத்த நாளங்களை அடைத்து கொள்வதால் கடுமையான வலி ஏற்படுகிறது.
  • மெஸன்டெரிக் த்ரோம்போசிஸ்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முக்கிய நரம்புகளில் இரத்த உறைவு ஏற்பட்டு குடலில் இருந்து இரத்தம் காய்ந்துவிடுதல்.
  • குடல் சம்பந்தமான பிரச்சனைகள் (கேஸ்ட்ரோஎண்டெரிடிஸ்):
  • வளர்சிதை மாற்றத்தில் இடையூறு
  • அனரிசம் முறிவு அல்லது சேதம்
  • குடல் அடைப்பு
  • மனநல காரணங்கள்: மன அழுத்தம், மன சோர்வு, பதட்டம், கவலை போன்றவை வயிற்று வலியையும் ஏற்படுத்தும். நோயாளி அடிப்படை மனநல அதிர்ச்சியில் இருந்து மீண்டுவிட்டால் வயிற்று வலி தானாகவே சரியாகிவிடும்.

 

 • குறிப்பிடப்பட்ட (ரெப்பெர்டு) வலி:
  சில நேரங்களில் வலி தோன்றும் இடமும்  அந்த வலி உணரப்படும் இடமும் வேறுபட்டதாக இருக்கும். இதுவே  குறிப்பிடப்பட்ட வலி என அழைக்கப்படுகிறது. நிமோனியா, நுரையீரல் அழற்சி போன்ற சுவாச உறுப்பு கோளாறுகளும் மற்றும் மாரடைப்பு (மயோகார்டியல் இன்பார்க்ஷன்) போன்ற இதய நோய்கள் போன்ற சில கோளாறுகள், மேல் வயிற்றுப் பகுதிக்கு குறிப்பிடப்பட்ட வலியை ஏற்படுத்துகின்றன. 

உங்கள் வயிற்று வலியின் காரணத்தைத் நீங்களே தானாக கண்டறிய முயற்சிக்க வேண்டாம் என்று நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். ஏனெனில்ஒரு மருத்துவரால் மட்டுமே அதை துல்லியமாக செய்ய முடியும். பரிந்துரைக்கப்பட்ட நோய் கண்டறியும் பரிசோதனையுடன் ஒரு உடல் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம்  மட்டுமே உங்கள் வயிற்று வலியின் அடிப்படை காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

வயிற்று வலி சிகிச்சை - Treatment of Stomach Pain in Tamil

லேசான வயிற்று வலியானது  ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு நீடிக்கும், பின்பு செரிமான கழிவுகளுடன் வெளியேற்றுவதன் மூலம் குணமாகலாம். இருப்பினும், நீண்ட காலமாக வயிற்று வலி இருந்தால் அதை புறக்கணிக்காமல் மருத்துவரிடம் சென்று சிக்கல் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்த  கொள்ளவும் .  சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று, உங்கள் உடல், மனம் மற்றும் சுகாதார ஆரோக்கியமாக இருக்க வேன்டும் என  நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

வயிற்று வலியின் சிகிச்சையானது நோய் கண்டறிதலைப் பொறுத்தது.

மிதமான வலியானது ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் வலி நிவாரணிகள், திரவங்களின் உட்கொள்ளல் (உதாரணமாக ORS தீர்வு) மற்றும் அரை-திட உணவின் மூலம் சரி செய்யலாம்.

மருந்துகள்

வலி நிவாரணிகள் ஓரளவிற்கு வலி நிவாரணத்தை தரவல்லது. அமில எதிர்ப்பு நிவாரணி மூலம் உடனடியாக  அசிடிட்டி வலியை சரி செய்யலாம். வாந்தியெடுப்பதை குறைக்க  ஆன்டி-எமிடிக் மருந்துகள் மருத்துவரகளால் பரிந்துரைக்கபடுக்கிறது. உடலில் இருந்து திரவ இழப்பு தீவிரத்தை கட்டுப்படுத்த ஓரல் ரிஹைட்ரேசன்(ORS) அல்லது திரவ மாற்றம் அதாவது டிர்ப்ஸ்  (Drips)  வழியாக உட்செலுத்தி  தீர்வு காணலாம். நோய்த்தொற்று அல்லது சீழ் கட்டிகளுக்கு (சீழ்) ஆண்டிபயாடிக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 

அறுவை சிகிச்சைகள்

தொடர்ந்து ஏதேனும் வலிகள்,அறிகுறிகள் இருந்தால் மருத்துவர் உங்களை அவசரகாலச் சிகிச்சையின் பேரில் மருத்துவமனையில் சேர்க்க அல்லது  அறுவைச் சிகிச்சைக்கு உங்களை பரிந்துரைக்கலாம்.  

சுய பாதுகாப்பு

 லேசான வயிற்று வலி  இருந்தால், பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:

 • உங்கள் வசதிகேற்ப படுத்துக்கொள்ளவும்.
 • உடலை வெது வெதுப்பாக வைத்துக் கொள்ளவும். (குறிப்பாக மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் தசை பிடிப்புகள்)
 • சரியான ஓய்வு எடுக்கவும்.
 • வயிற்றுப்போக்கு  இருந்தால் வெற்று நீர் குடிக்காதீர்கள்.
 • அசுத்தமான உணவை சாப்பிட அல்லது குடிக்க வேண்டாம்.
 • பால் குடிப்பதை தவிர்க்கவும்.
 • காரமான மற்றும் கடின உணவுகளைத் தவிர்க்கவும்.
 • குறுகிய கால இடைவெளியில் சிறிய அளவில்  லேசான  உணவுகளை சாப்பிடுங்கள். 


மேற்கோள்கள்

 1. Sherman R. Abdominal Pain. In: Walker HK, Hall WD, Hurst JW, editors. Clinical Methods: The History, Physical, and Laboratory Examinations. 3rd edition. Boston: Butterworths; 1990. Chapter 86
 2. Fields JM, Dean AJ. Systemic causes of abdominal pain.. Emerg Med Clin North Am. 2011 May;29(2):195-210, vii. PMID: 21515176.
 3. National Health Service [Internet]. UK; Stomach ache
 4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Abdominal pain
 5. Healthdirect Australia. Abdominal pain. Australian government: Department of Health

வயிற்று வலி டாக்டர்கள்

Dr Devaraja R Dr Devaraja R Gastroenterology
7 वर्षों का अनुभव
Dr. Abhay Singh Dr. Abhay Singh Gastroenterology
1 वर्षों का अनुभव
Dr. Suraj Bhagat Dr. Suraj Bhagat Gastroenterology
23 वर्षों का अनुभव
Dr. Smruti Ranjan Mishra Dr. Smruti Ranjan Mishra Gastroenterology
23 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வயிற்று வலி க்கான மருந்துகள்

வயிற்று வலி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

வயிற்று வலி की जांच का लैब टेस्ट करवाएं

வயிற்று வலி के लिए बहुत लैब टेस्ट उपलब्ध हैं। नीचे यहाँ सारे लैब टेस्ट दिए गए हैं: