மன அழுத்தம் - Stress in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

February 07, 2019

March 06, 2020

மன அழுத்தம்
மன அழுத்தம்

சுருக்கம்

மன அழுத்தம் என்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எதையும் உடல் சமாளிக்கும் ஒரு செயல்முறையாகும். மன அழுத்தம் என்பது ஒரு 'சண்டை அல்லது பறப்பது' என்ற பதில். இது எதிர்பாராத ஒரு நிகழ்வை அல்லது தூண்டுதலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க ஒரு நபருக்கு உதவுகிறது அல்லது அதை எதிர்த்துப் போராடுவதா அல்லது தவிர்ப்பதா என்ற முடிவை எடுக்க உதவுகிறது. மக்கள் தங்கள் வரம்புகளை சோதித்து தங்கள் திறனை உணர உதவ, ஒரு குறிப்பிட்ட அளவு மன அழுத்தம் தேவைப்படுகிறது. இருப்பினும், அதிகமான அளவு மன அழுத்தத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு, மன வேதனைக்கு ஆளாகலாம். மன அழுத்தம் உடல் உள்ள நலம் அல்லது வெளிப்புற காரணிகளால் ஏற்படலாம், சில சமயங்களில் இரண்டின் காரணமாகவும் ஏற்படலாம். குடும்ப சச்சரவு, வேலை மற்றும் கல்வி அழுத்தம் அல்லது பணம் போன்றவை வெளிப்புற காரணிகள். குறைந்த சுய மதிப்பீடு, சுய மரியாதை, அவநம்பிக்கை மற்றும் போன்றவை சில உள் காரணங்கள். கடுமையான மன அழுத்தம், எபிசோடிக் கடுமையான மன அழுத்தம் அல்லது நாட்பட்ட மன அழுத்தம் என எந்த ஒரு வடிவத்திலும் செயல்பட முடியும். அறிகுறிகள் இந்த ஒவ்வொன்றிற்கும் மாறுபடும் என்ற போதும், நெஞ்சுத்துடிப்பு, தெளிவான சிந்தனை இல்லாமை, சுய-சந்தேகம், கோபம் மற்றும் பதட்டம் போன்ற சில பொதுவான அம்சங்கள் ஒரே மாதிரி இருக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணங்களை அறிந்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையுடன் இருந்து ஆரோக்கியமான மாற்றங்களை கண்டறிவது மன அழுத்தத்தைத் தடுக்க இரண்டு முக்கிய வழிகள் ஆகும். சில சோதனைகள் இந்த நிலைமையை கண்டறிய உதவும் என்றபோதும், தகுதியான நிபுணர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை கொள்வது இன்னும் துல்லியமான கண்டறிதலை அளிக்கின்றன. இதற்கான சிகிச்சை மருந்துகள், மருத்துவ ஆலோசனை மற்றும் மாற்று சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுகள், நேர்மறையான எண்ணங்களுடன்  இருப்பதால், அவர்கள் ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதையும் மற்றும் தற்கொலை எண்ணங்கள் அவர்களுக்கு வராமலும் தடுக்க முடியும்.

மன அழுத்தம் என்ன - What is Stress in Tamil

'மன அழுத்தம்' என்ற வார்த்தை எதிர்மறையாக தெரிந்தாலும், இது உண்மையில் உடலின் ஒரு இயற்கையான சமாளிப்பு செயல்முறை ஆகும். மன அழுத்தம் சில நேரங்களில் மேம்பட்ட செயல்திறன், புதுமையான விளைவுகளை மற்றும் சிறந்த குழுப்பணி உட்பட பெரும் விளைவுகளை கொண்டு வரலாம். மன அழுத்தம் மிக அதிகமாக இருக்கும் போது, அது போதுமானதாக இல்லை என்று கருதப்படும் போது, அது  நாம் சிந்திபதிலும் உணர்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் நம் சமநிலையை சீர்குலைக்கிறது.

மன அழுத்தம் என்றால் என்ன?

மன அழுத்தம் மிகவும் பொதுவாக 'சண்டை அல்லது பறத்தல்' பதிலளிப்பு என்று குறிப்பிடப்படும் ஒன்று. இது அச்சுறுத்தலான சூழ்நிலையில் உடலின் ஒரு எதிர்வினை. மன அழுத்தம் சவால்களை சமாளிக்க உதவும் மற்றும் உடலை பாதுகாக்கும் ஒரு வழி. இது நாம் கவனமாக இருக்க, முனைப்பாக இருக்க மற்றும் சிறந்த செயல்திறனுடன் செயல்பட உதவும். எவ்வாறாயினும், ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு அப்பால் மன அழுத்தம் ஏற்பட்டால், உடல்நலம், செயல்திறன் மற்றும் உறவுகளை பாதிக்கும் விளைவுகள் உண்டாக்குகிறது.

மன அழுத்தம் அறிகுறிகள் என்ன - Symptoms of Stress in Tamil

மன அழுத்தத்தின் தன்மையைப் பொறுத்தும் நோயாளி எந்த நிலையில் இருக்கிறார் என்பதை பொருத்தும் மன அழுத்தத்தின் அறிகுறிகள் மாறுபடும். சில அறிகுறிகள் மிகவும் பொதுவான ஒன்றாக இருக்கலாம், எனவே, நாம் மன அழுத்தம் உள்ளதை புறக்கணிக்க அல்லது குழப்பமடைய நேரிடலாம்.

 • தீவிர மன அழுத்தத்தின் அறிகுறிகள் பின்வருமாறு:
 • எபிசோடிக் கடுமையான மன அழுத்தத்தின் அறிகுறிகள்:
  • ஆக்கிரமிப்பு, பொறுமையின்மை, பொதுவான விரோத உணர்வு மற்றும் ஆழமாக வேரூன்றிய பாதுகாப்பில்லா உணர்வு.
  • எல்லாவற்றையும் பற்றி முடிவில்லாத கவலை, அவநம்பிக்கையாக உணர்தல்.
  • உயர் இரத்த அழுத்தம், மார்பு வலி, ஒற்றை தலைவலி மற்றும் இதய பிரச்சினைகள்.
 • கடுமையான மன அழுத்தம் மிகவும் கடுமையான அறிகுறிகளுடன் வருகிறது, அவற்றில் சில:
  • எப்போதும் தன்னை பற்றி பிறர் தீர்மானம் செய்து கொள்ளுதல்(பெர்ஸிவ்ட் அண்ட் ஜட்ட்) போன்று உணர்தல்.
  • எல்லா நேரங்களிலும் சரியானவராக தோன்ற வேண்டுமென நினைத்தல்.
  • அனுபவித்து வரும் நீண்டகால மன அழுத்தத்தத்தை பற்றி அறிந்திராதிருத்தல்.
  • இதய நோய்கள், பக்கவாதம், மற்றும் புற்றுநோய்கான அதிகரித்த வாய்ப்புகள்.
  • வன்முறை மற்றும் தற்கொலை எண்ணங்கள்.
  • இத்தகைய நீண்ட காலத்திற்கு மன அழுத்தத்தை சமாளிப்பதில் இருந்து கடுமையான தோல்வி ஏற்படுதல்.

மன அழுத்தம் சிகிச்சை - Treatment of Stress in Tamil

பல்வேறு சிகிச்சை முறைகளின் கலவை பொதுவாக மன அழுத்தத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

 • மருந்துகள்
  மன அழுத்தத்திற்கு நேரடியாக சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படக்கூடிய எந்த மருந்துகளும் இல்லை என்றாலும், மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த மருந்துகள் பயன்படுத்தப்படலாம். முதலில் தூக்கமின்மை, பதட்டம், மனச்சோர்வு மற்றும் வயிற்று தொடர்பான வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
 • ஆலோசனை
  பேசுவது ஒரு பெரிய மன அழுத்தம் நிவாரணியாக இருக்கலாம். வல்லுநர்கள் அறிவாற்றல் அடிப்படையிலான சிகிச்சை(CBT-காக்னிடிவ் பேஸ்ட் தெரபி) மற்றும் நுண்ணுணர்வு சார்ந்த அழுத்தம் குறைப்பு(MBSR-மைன்ட்புல்நெஸ்-பேஸ்ட் ஸ்ட்ரெஸ் ரிடக்ஷன்) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.
 • மாற்று சிகிச்சைகள்
  யோகா, அக்குபஞ்சர் மருத்துவம், நறுமண மற்றும் பிற சிகிச்சைமுறை போன்ற முறைகள் மற்ற விருப்பமான மாற்று சிகிச்சைகளாகும்.
 • மறுஉருவாக்கம்
  மறுஉருவாக்க நடவடிக்கைகள் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதோடு நல்வாழ்வு உணர்வுகளை ஊக்குவிக்கின்றன. சுய நம்பிக்கைக்கு உறுதுணையாக மற்றும் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை மேற்கொள்ளும் சிகிச்சை திட்டங்களை மேற்கொள்வது சிகிச்சைக்கு சிறந்த கருவியாகிறது.

வாழ்க்கைமுறை மேலாண்மை

ஒரு நேர்மறையான பார்வையைத் தரும் பல வாழ்க்கைமுறை மேலாண்மை நுட்பங்கள் உள்ளன.

 • ஆதரவு குழுக்கள்
  நீண்டகாலத்திற்கு, அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நிவாரணம் அளிக்க ஆதரவு குழுக்கள் உதவுகின்றன.அவர்கள் சுய மரியாதையை அதிகரிக்க உதவுவதோடு, அவர் / அவள் தனியாக இல்லை எனவும் அல்லது எல்லோருக்கும் பிடித்தவரானவராக உணர உதவிசெய்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு மற்றும் உதவி வழங்க உதவுகின்றனர்.
 • ஒரு பொழுதுபோக்கைப் பின்தொடர்தல்
  வீணான நேரத்தில் ஒரு பொழுதுபோக்கைப் பின்தொடர்வதால், மன அழுத்தத்திலிருந்து விடுபட்டதை உணர முடியும். பொழுதுபோக்குகள் ஓய்வெடுக்க உதவுவதோடு எதையோ சாதித்த ஒரு பெரிய உணர்வையும் கொடுக்கும்.
 • தளர்வு உத்திகள்
  தியானம், யோகம் மற்றும் காட்சிப்படுத்தல் போன்ற தளர்வு உத்திகளை தொடந்து பயிற்சிப்பதனால் தனிப்பட்ட நபரை அமைதிப்படுத்த உதவுவதோடு அவசர முடிவுகளை எடுப்பதயும் தடுக்கிறது.
 • உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி
  ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது மற்றும் உடல் மற்றும் மனதை சுறுசுறுப்பாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்க உதவும் ஒரு முக்கியமான பகுதியாக இது அமைகிறது.
 • இலக்கை நிர்ணயம் செய்தல்
  யதார்த்தமான, அடையக்கூடிய குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், சாதனைக்கான உணர்வு கொள்ளவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இலக்குகளை அமைப்பதற்கும், முன்னுரிமைகளை வழங்குவதற்கும் சில வெளிப்புற உதவிகளைத் தேடிக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கலாம், ஆனால் காலப்போக்கில் தனிநபர்கள் தங்கள் திறமைகளை இன்னும் நன்றாக காண முடியும் மற்றும் தங்களை இலக்கு தானே தேடிக்கொள்ளவும் முடியும்.


மேற்கோள்கள்

 1. Selye, H. (1950, June 17). Stress and the general adaptation syndrome. British Medical Journal, 1(4667), 1383-1392. PMID: 15426759.
 2. American Psychological Association [internet] St. NE, Washington, DC. Stress.
 3. Anxiety and Depression Association of America [internet] Silver Spring, Maryland, United States. Physical Activity Reduces Stress.
 4. National Institute of Mental Health [Internet] Bethesda, MD; 5 Things You Should Know About Stress. National Institutes of Health; Bethesda, Maryland, United States
 5. Noble RE. Diagnosis of stress. Metabolism. 2002 Jun;51(6 Suppl 1):37-9. PMID: 12040539
 6. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Stress at work