தைராய்டு - Thyroid Problems in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

May 03, 2019

September 10, 2020

தைராய்டு
தைராய்டு

தைராய்டு இயக்குநீர் தைராய்டு  சுரப்பிக்களால் சுரக்கப்படுகிறது. இது தொண்டை பகுதியில் உள்ள ஒரு சிறிய உறுப்பு. இது உடலில் நீர்ச்சம நிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த இயக்குநீரில் அளவில் ஏதேனும் சமநிலையின்மை இருந்தால் உடலில் பல்வேறு அமைப்புக்களில் கோளாறு ஏற்படலாம். தைராய்டு குறைப்பாடு மிகவும் வழக்கமான ஒன்று, ஆண்களை விட பெண்களே இதன் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஹைப்பர்தைராய்டிசம் மற்றும் ஹைப்போதைராய்டிசம் என்று இரு பெரிய தைராய்டு பிரச்சினைகள் உள்ளன. ஹைப்பர்தைராய்டிசத்தின் போது கூடுதலாக இயக்குநீர் சுரக்கப்படுகிறது, ஹைப்போதைராய்டிசம் என்பது குறைவாக இயக்குநீர் சுரக்கப்படுவது ஆகும். தைராய்டு புற்றுநோய் தைராய்டு சுரப்பியில் உள்ள இன்னொரு தீவிர பிரச்சனை மற்றும் உலகில் நாளமில்லா புற்றுநோயில் மிகவும் பொதுவான விஷயமாகும். இந்த பிரச்சனைகளின் அடிப்படை காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றும்  கண்டறி சோதனை மூலமாக கண்டறிய முடியும். பொருத்தமான சிகிச்சை மூலமாக தைராய்டு சுரப்பியை மீண்டும் வழக்கம் போல் செயல்புரிய செய்யலாம். போதிய அளவு அயோடினுடன் சீரான உணவு மற்றும் மனஅழுத்தத்தை குறைக்க யோகாசனம் செய்வது மற்றும் தியானம் செய்வது ஆகியவை இதன் அன்றாட வாழ்கை ஆளுமையில் அடங்கும். இதனோடு உங்களது நாளமில்லா சுரப்பி மருத்துவரிடம்(எண்டோகிறினோலாஜிஸ்த்) அவ்வப்போது செக்அப் மற்றும் ஆலோசனைகள் மூலம் தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்.

தைராய்டு பிரச்சனை என்றால் என்ன?

தைராய்டு சுரப்பி என்பது ட்ரியோடோதைரோனைன் (டி 3) மற்றும் தைராக்ஸின் (T4) என்ற இரு இயக்குநீரைக் சுரக்கும் நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த இயக்குநீரை உருவாக்கி சுரப்பதை,  முன்புற  பிட்யூட்டரியில் உள்ள தைராய்டு-தூண்டுதல் இயக்குநீர்(டிஎஸ்ஹெச்) கட்டுப்படுத்துகிறது. இதனை தைராய்டு வெளியிடும் இயக்குநீர் (டிஆர்ஹெச்) மேலும் செயல்படுத்துகிறது. இந்த இயக்குநீர்கள் உங்கள் உடலின் அடிப்படை வழற்சிதைக்கு உதவுகிறது. பொருத்தமற்ற தூண்டுதலின் காரணமாக தைராய்டு சுரப்பி கூடுதலாகவோ குறைவாகவோ சுரக்கும் போது தைராய்டு பிரச்சனைகள் உருவாகின்றன. இந்த பிரச்சினைகளுக்கான காரணங்கள் தன்னுடல் தாங்கு திறன் அல்லது தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் அல்லது புற்றுநோய் அல்லாத வளர்ச்சிகளால் இருக்கலாம் அல்லது சுரப்பியில் வீக்கத்தினால் இருக்கலாம். உலகளவில், தைராய்டு பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களில் அதிகமாக தென்படுகிறது; 0.5% ஆண்களை ஒப்பிடும் போது 5% பெண்கள் இதனால் தாக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தைராய்டு பிரச்சனையாலும் இறுதியில் தைராய்டு இயக்குநீர் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கப்படுகிறது மற்றும் இது உடலில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு உயிரணுவையும் பாதிக்கிறது. (1,2)

தைராய்டு வகைகள் என்ன - Types of Thyroid in Tamil

தைராய்டு இயக்குநீர் அடிப்படை வளர்ச்சிதை விகிதம், உணவு உட்கொள்ளும் முறை மற்றும் வெப்பமாக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஹைப்பர்தைராய்டிசம் அல்லது ஓவர்ஆக்டிவ் தைராய்டு ஒரு வழக்கமான தைராய்டு பிரச்சனை. அப்போது டி3 மற்றும் டி4 உயர்ந்த அளவிலும் டிஎஸ்ஹெச் குறைந்த அளவிலும் காணப்படும். தைராய்டு சுரப்பியில் வீக்கத்தினால் தற்காலிக ஹைப்பர்தைராய்டிசம் ஏற்படும். ஹைப்போதைராய்டிசம் அல்லது அண்டர்ஆக்டிவ் தைராய்டு இன்னொரு  வழக்கமான தைராய்டு பிரச்சனை. அப்போது டி3 மற்றும் டி4-யின் சீரம் அளவு குறைந்தும் ஆனால் டிஎஸ்ஹெச் அளவு கூடியும் இருக்கும். தைராய்டு புற்றுநோய் ஒரு தீவிர தைராய்டு பிரச்சனை மற்றும் இது உலகில் மிகவும் பொதுவான நாளமில்லா புற்றுநோய் ஆகும்.

பின்வருவன மிகவும் பொதுவான தைராய்டு பிரச்சனைகள்:

 • ஹைப்பர்தைராய்டிசம்: இந்த நிலையில் சுரப்பியின் ஓவர்அகிட்டிவிட்டியால் தைராய்டு இயக்குநீர்கள் கூடுதலாக சுரக்கும்.
 • ஹைப்போதைராய்டிசம்: ஹைப்போதைராய்டிசம் என்பது அண்டர்அகிட்டிவ் தைராய்டு சுரப்பியானது வழக்கத்தை விட குறைவாக தைராய்டு இயக்குநீரை  நிலையாகும்.

தைராய்டு புற்றுநோய்- தைராய்டு புற்றுநோய் மிகவும் பொதுவான வீரியம் மிக்க நாளமில்லா கட்டி. திசு ஆய்வின் அறிகுறிகளின் படி, தைராய்டு புற்றுநோயை பின்வருமாறு பிரிக்கலாம்:

 • வேறுபட்ட தைராய்டு புற்றுநோய்: இதில் பாபில்லரி தைராய்டு புற்றுநோய் (PTC) மற்றும் போலிக்குலர் தைராய்டு புற்றுநோய் (FTC) அடங்கும். இந்த மாதிரியான புற்றுநோய்  புறத்தோல் உயிரணுக்களில் இருந்து உருவாகிறது மற்றும் இது பொதுவான தைராய்டு புற்றுநோயாகும்.
 • அனாபிளாஸ்டிக் தைராய்டு புற்றுநோய் (ATC): ATC மிகவும் வீரியம் மிக்கது ஆனால் தைராய்டு புற்றுநோயின் அறிய வடிவமாகும்; தைராய்டு புற்றுநோயில் வெறும் 2% மட்டுமே ATC-யாக உள்ளது. இதற்கு தைராய்டு திசுக்களுடன் ஒத்துப்போகாத வெறுபடுத்தமுடியாத உயிரணுக்கள் இருக்கும்.

இந்த பிரச்சனைகள் இன்னும் ஆழமாக பின்னர் விவாதிக்கப்படும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

தைராய்டு அறிகுறிகள் என்ன - Symptoms of Thyroid in Tamil

ஹைப்பர்தைராய்டிசம்

ஹைப்பர்தைராய்டிசத்தின் மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

ஹைப்போதைராய்டிசம்

பின்வருவன ஹைப்போதைராய்டிசத்தின் அறிகுறிகள்:

 • எடை கூடுதல்
 • சோர்வு
 • முடி மற்றும் நகத்தின் எளிதில் உடையும் தன்மை
 • உலர்ந்த மற்றும் தடித்த தோல்
 • முடி இழப்பு
 • குளிருக்கு சென்சிட்டிவாக இருத்தல்
 • மனசோர்வு
 • தசைப்பிடிப்பு
 • கரகரக்கும் குரல்
 • மனம் சார்ந்த தொந்தரவுகள்

தைராய்டு புற்றுநோய்

தைராய்டு புற்றுநோயின் அறிகுறியானது கழுத்து புற்றுநோய் அல்லது சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் எந்த ஒரு நோய் அறிகுறியுடனும் ஒத்துப்போகும். உங்களுக்கு ஏதேனும் அறிகுறி மீது சந்தேகம் இருந்தால், கூடுதல் ஆலோசனைக்கு உங்கள் எண்டோகிறினோலொஜிஸ்ட் (நாளமில்லா சுரப்பி மறுத்துவர்) அணுகவேண்டும். பின்வருவன தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்:

தைராய்டு சிகிச்சை - Treatment of Thyroid in Tamil

ஹைப்பர்தைராய்டிசம்

சிகிச்சை

பொதுவான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

 • மருந்து: இயக்குநீர் வெளிவருவதை குறைக்க கதிரியக்க முறையில் ஐயோடின் நீக்கம், ஆன்டி-தைராய்டு மருந்துகள் மற்றும் அறிகுறிகளை நீக்க எதிர்ப்பு அழற்சி மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
 • தைராய்டெகோடமி அல்லது சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பியின் ஒரு பகுதியை நீக்குதல்.
 • கண்களில் வறட்சியில் இருந்து அறிகுறி நிவாரணம் அளிக்க செயற்கை கண்ணீர்.

வாழ்க்கை மேலாண்மை

முறையான மருந்துகள் அல்லாமல், எளிய வாழ்கை வழிமுறை மாற்றத்தின் மூலம் தைராய்டு அகிட்டிவிட்டியை அதிசயிக்கும் வகையில் கட்டுப்படுத்தலாம். முறையான ஹெல்த் செக்-அப், புகையை விட்டு ஒழிப்பது மற்றும் முறையாக யோகாசனம் செய்வதன் மூலம் நிலைமையை கட்டுப்படுத்தலாம். வைட்டமின், கால்சியம், அயோடின் மற்றும் மெக்னீசியம் நிறைந்த சீரான உணவினால் அறிகுறிகள் தணிந்து ஒட்டுமொத்த உடல்நலம் முன்னேறும்.

ஹைப்போதைராய்டிசம்

சிகிச்சை

தினசரி தைரோக்சின் உட்கொள்வது மிகவும் பொதுவான சிகிச்சை முறை. சிலசமயம், இணைப்பு சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம். இரத்தத்தில் இயக்குநீர் அளவினை பொறுத்து மருந்து அளவில் மாற்றம் செய்ய சிகிச்சை ஆரம்பித்ததும், முறையான இரத்த பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில், பல மூலிகைகள் ஹைப்போதைராய்டிசம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. உங்கள் மருத்துவரிடம் அதன் பயன்கள் மற்றும் மருந்து அளவு பற்றி ஆலோசிக்கலாம்.

வாழ்க்கை மேலாண்மை

அன்றாட மருந்துகளுடன், முறையான செக்-அப் மற்றும் போதுமான உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்வதன் மூலம் தைராய்டு இயக்குநீரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

தைராய்டு புற்றுநோய்

சிகிச்சை

தைராய்டு புற்றுநோயின் சிகிச்சை அதன் வகை மற்றும் நிலையை பொறுத்து அமையும். பின்வரும் சிகிச்சை முறைகள் வழக்கமாக பின்பற்றப்படுகிறது:

 • அறுவை சிகிச்சை: தைராய்டு சுரப்பியின் ஒரு பகுதி அல்லது முழுமையாக நீக்கம் மற்றும் கழுத்தில் உள்ள நிணநீர் முனைகளை நீக்குதல்
 • சிகிச்சைக்கு பிறகு கதிரியக்கம் அயோடின் தெரபி மூலம் மீதம் இருக்கும் தைராய்டு திசுவை நீக்குவது
 • வெளிப்புற கதிரியக்க தெரபி
 • கீமோதெரபி: நரம்பினுள் செலுத்துதல் அல்லது ஆன்டி-கான்செர் ட்ரக்ஸ்
 • இலக்கு கொண்ட சிகிச்சை: புற்றுநோய் திசுக்களை குறிவைக்கும் வாய்வழி மருந்துகள்.

வாழ்க்கை மேலாண்மை

சீரான உணவு உட்கொள்வது, முறையான பிசிகள் அகிட்டிவிட்டி மற்றும் புகைப்பதை விடுவதால் ஓரளவிற்கு உதவலாம்.மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Simple goiter.
 2. American Thyroid Association. [Internet]: Virginia, USA ATA: Complementary and Alternative Medicine in Thyroid Disease (CAM).
 3. Michigan Medicine: University of Michigan [internet]; Thyroid Disorders.
 4. Healthdirect Australia. Causes of thyroid problems. Australian government: Department of Health
 5. Healthdirect Australia. Thyroid problems. Australian government: Department of Health
 6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Thyroid Diseases.
 7. American Thyroid Association. [Internet]: Virginia, USA ATA: Thyroid Surgery.

தைராய்டு டாக்டர்கள்

Dr. Narayanan N K Dr. Narayanan N K Endocrinology
16 Years of Experience
Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 Years of Experience
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 Years of Experience
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

தைராய்டு க்கான மருந்துகள்

Medicines listed below are available for தைராய்டு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.