நாக்கில் ஏற்படும் அல்சர் - Tongue Ulcers in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

May 21, 2019

March 06, 2020

நாக்கில் ஏற்படும் அல்சர்
நாக்கில் ஏற்படும் அல்சர்

நாக்கில் ஏற்படும் அல்சர் என்றால் என்ன?

நாக்கில் ஏற்படும் அல்சர் என்பது நாக்கின் மேற்பரப்பில் அல்லது நாக்கிற்கு கீழ் தோன்றும் திறந்த வகை புண்கள் ஆகும் மற்றும் இது ஒரு தீவிர ஆபத்தை ஏற்படுத்தும் பிரச்சனை இல்லை என்றாலும், பொதுவாக இப்பிரச்னையால் ஏற்படும் அசவுகரியம் இந்த நாக்கு புண்ணினால் பாதிக்கப்பட்ட நபரை மிகவும் சங்கடமாக உணரவைக்கும். நாக்கில்அல்சர் ஏற்படுவதற்கான காரணியானது, வாயின் மற்ற பகுதிகளில் ஏற்படும் புண்களைப் போலவே இருக்கும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நாக்கில் ஏற்படும் அல்சர் அறிகுறியானது நாக்கில் தோன்றும் புண் என்பதே ஆகும், இந்த புண்கள் பெரிதாக அல்லது சிறியதாக இருக்கலாம். நாக்கின் பின்புறத்தில் அல்லது நாக்குக்கு அடியில் இந்த நாக்கு புண்கள் காணப்படும்.

இந்த நாக்கு புண் வலிமிகுந்ததாக இருக்கலாம் மற்றும் பெரும்பாலும் இது சிவப்பு நிறத்தில் காணப்படும். சில நோயாளிகளில், இந்த புண் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் தோன்றலாம். இந்த நாக்கு புண் காரணமாக ஏற்படும் வலி, எரிச்சல் உணர்வுடன் சேர்ந்தும் இருக்கலாம், பொதுவாக சூடான அல்லது மசாலா நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு இந்த எரிச்சல் மேலும் அதிகமாகும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இந்த நாக்கு புண் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

 • தொற்றுகள் - வாயில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படுதல் காரணமாக இந்த நாக்கு அல்சர் ஏற்பட வழிவகுக்கும். இது மறைமுகமான மற்றும் மோசமான வாய் சுகாதாரதுடன் தொடர்பானது.
 • ஊட்டச்சத்து குறைபாடு - இரும்பு, துத்தநாகம் அல்லது வைட்டமின் ஏ குறைபாடு காரணமாகவும் நாக்கு மற்றும் வாயில் புண்கள் ஏற்படலாம்.
 • காயம் - நாக்கை கடித்தல் அல்லது பொய்ப்பற்களை பயன்படுத்துதல் அல்லது பல் இறுக்கிகள் போன்றவற்றால் ஏற்படும் தீடீர்  காயம்  கொப்புளம் அல்லது புண்கள் இந்த நாக்கு அல்சர் உண்டாக வழிவகுக்கும்.
 • வாய்ப்புண்கள் - வாயில் ஏற்படும் வெட்டு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு போன்ற பல காரணிகளால் வாய் மற்றும் நாக்கு பகுதியில் மஞ்சள் நிற மற்றும் வெள்ளை நிற கொப்புளங்கள் ஏற்படுவது வாய்ப்புண்கள் ஆகும்.
 • உணவு உணர்திறன் - காரமான மற்றும் அமிலம் நிறைந்த உணவுகளை உண்ணும்போது எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் அது இறுதியில் நாக்கு புண் ஏற்பட வழிவகுக்கும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உடல் பரிசோதனையின் மூலம் இந்த நாக்கு அல்சர் ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்படுகிறது.

இந்த அல்சர் புண்ணானது நாம் அதற்காக எடுத்துக்கொள்ளப்படும் சில சுய கவனிப்பிம் மூலமே தானாகவே சரியாகிவிடும். இந்த நாக்கு அல்சர் ஏற்படுவதற்கான காரணிகளில் சில ஊட்டச்சத்து குறைபாடக இருந்தால், மருத்துவர் இதற்கான ஊட்டசசத்து நிறைந்த பொருட்களை பரிந்துரைப்பார்.

சில வீட்டு வைத்திய முறைகள் இந்த நாக்கு அல்சர்களை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உப்பு நீரில் வாயை கொப்பளித்தல், புண்களை உலர்வாக வைக்கவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அழிக்கவும் உதவுகிறது. இதற்கு மாற்றாக, உப்பு மற்றும் தண்ணீரால் செய்யப்பட்ட ஒரு பேஸ்டை பயன்படுத்துவது இந்த நாக்கு அல்சருக்கு சரியாக மற்றும் மிகவும் உதவியாக இருக்கும்.

வலியைக் குறைக்க அப்பகுதியை மறக்க செய்ய ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம்.

ஒருவர் நாக்கு அல்சர் நோயினால் பாதிக்கப்படுகையில், சூடான அல்லது காரமான உணவுகள் வலியை தூண்டலாம் என்பதால் இது போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.

சில நோயாளிகளுக்கு, இந்த நாக்கு அல்சர் பிரச்சனையை விரைவாக குணப்படுத்த அழற்சி எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர் வழங்கலாம்.மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Mouth ulcers.
 2. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Mouth ulcers.
 3. Nidirect [Internet]. Government of Northern Ireland; Sore or painful tongue.
 4. National Health Service [Internet]. UK; Sore or white tongue.
 5. National Health Portal [Internet] India; Mouth Ulcers (Stomatitis).
 6. Crispian Scully,Rosemary Shotts. Mouth ulcers and other causes of orofacial soreness and pain. West J Med. 2001 Jun; 174(6): 421–424. PMCID: PMC1071433

நாக்கில் ஏற்படும் அல்சர் க்கான மருந்துகள்

Medicines listed below are available for நாக்கில் ஏற்படும் அல்சர். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹25.0

₹19.95

Showing 1 to 0 of 2 entries